Published:Updated:

AKS 61: நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு உரியவர்களிடமும் அன்பு செலுத்தும் மனிதர்கள் புதுமையானவர்களா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (15-11-2021) வெளியான 61-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS 61: நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு உரியவர்களிடமும் அன்பு செலுத்தும் மனிதர்கள் புதுமையானவர்களா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (15-11-2021) வெளியான 61-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

காயத்ரியின் மாதவிடாய் காரணமாக அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் தவிக்கிறாள். தன்னுடைய இருக்கையில் சோர்ந்து படுத்துக் கொள்ள முயற்சி செய்கையில் சிவா அங்கு வருகிறான். காயத்ரி உடல் நலமில்லாமல் இருப்பதை பார்த்துவிட்டு மாயாவை அழைத்து காயத்ரியை வெல்நெஸ் அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க செய்யுமாறு சொல்கிறான். மாயா தயங்குகிறாள். சிவா தான் யாருக்காக இருந்தாலும் இப்படிச் செய்வது வழக்கம்தானே என்று மாயாவிடம் கேட்கிறான்.

மாயா காயத்ரியை வெல்நெஸ் அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்கச் செய்கிறாள். அப்போது காயத்ரி தவறுதலாக மாயாவின் மீது வாந்தி எடுத்து விடுகிறாள். மாயா காயத்ரியை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு உடை மாற்றிக் கொண்டு வருகிறாள். காயத்ரிக்கு சிவா கேண்டினில் ஜூஸ் ஆர்டர் செய்து வெல்நெஸ் அறையில் டெலிவரி கொடுக்கச் செய்கிறான்.

AKS 61
AKS 61

சிவாவிற்கு காயத்ரியின் மேல் அக்கறை இருக்கிறது என்று மாயாவுக்கும் தெரிகிறது. அந்த அக்கறை ஒரு டீம் லீடர் தனது டீமில் இருப்பவர்கள் மீது இருக்கும் அக்கறையை தாண்டி காதலாகவும் இருக்கிறது என்று மாயாவுக்கு புரிகிறது. ஆனால் காயத்ரி ஏற்கெனவே திருமணம் நிச்சயமானவள் என்பதால் சிவாவுடன் இணைவதற்காக மாயா முயற்சி செய்கிறாள். சிவாவிற்கு காயத்ரியை பிடித்திருப்பது மாயாவுக்கு பிரச்னையாக இல்லை. அது காலப்போக்கில் மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் சிவா காயத்ரியின் இருக்கையை சுற்றி வருவதும், அக்கறையாக அவளைக் கவனித்துக் கொள்வதும் மாயாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதிய உணவு நேரத்தில் தனது இருக்கையில் சாப்பாட்டைத் திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் காயத்ரி. சாப்பிடலாம் என்று நினைத்தாலே சுந்தர் கொடுத்தனுப்பிய தயிரும் வெந்தயமும் அவளுக்கு மீண்டும் குமட்டலை உண்டாக்குகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவா வருகிறான். அவள் சாப்பிட முடியாமல் சாப்பாட்டை பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு காயத்ரியிடம் கேண்டீனில் இருந்து அவளுக்கு பிடித்த நூடுல்ஸ் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு, செல்ல எத்தனிக்கையில் மாயா அங்கு வந்து நிற்கிறாள். சிவா பதற்றத்தில் மாயாவிடம் உளறுகிறான்.

மாயா தானும் கேண்டீனில் தனக்கு ஏதாவது வாங்கி வருவதாகவும் மூவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் என்றும் சொல்லிவிட்டு சொல்கிறாள். போகும்போது மாயா சிவாவின் கைகளைப் பிடித்து ’போகலாம்’ என்று அழைத்துச் செல்கிறாள். காயத்ரிக்கு மாயா சிவாவுடன் அப்படிச் செல்வது பிடிக்கவில்லை.

AKS 61
AKS 61

மாயா சிவாவைத் தனியாக அழைத்துச் சென்று அவன் காயத்ரியுடன் மீண்டும் நெருக்கமாக பழகுவது தவறு எனச் சொல்கிறாள். தான் மீண்டும் பெங்களூரு கிளம்புவதற்குள் நல்ல முடிவாகச் சொல்வதாக சிவா சொன்னதை நினைவூட்டுகிறாள். அதேபோல் காயத்ரிக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயமாகிவிட்டது என்றும் ஒரு கமிட்டட் உறவில் இருப்பவர்களை குழப்பக் கூடாது என்றும் மாயா சிவாவிடம் கூறுகிறாள்.

எப்போதும் காதல் உணர்வுகள் இயற்கையாக தோன்ற வேண்டியவை. ஒருவரிடம் ஏற்பட்ட மனக் கசப்பை அல்லது ஒருவரை பிரிய வேண்டிய கட்டாயத்தினால் அந்தக் காதலை மடை மாற்றம் செய்ய இன்னொருவர் மீது காதலைக் காட்டுவது உண்மையான காதலே இல்லை.

அதேபோல் மாயா வலுக்கட்டாயமாக சிவாவின் கவனத்தை தன் மீது திருப்ப முயற்சி செய்கிறாள். காயத்ரியின் மீது இருக்கும் காதல் காலப்போக்கில் சரியாகும் என நம்புகிறாள். நிஜ வாழ்க்கையில் இது போன்று நடந்த திருமணங்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் வயதில் காதல் ஆசையில் வேறு ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் திருமணத்திற்கு பிறகு காதலனை தன் பக்கம் திருப்பி விடலாம் என்று பெண்கள் எண்ணுகின்றனர். அந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் தங்கள் முன்பு காதலித்த பெண்ணைப் பற்றி காதலன்/கணவன் பேசும்போது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள பலராலும் முடிவதில்லை. சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று கணவனுக்கு அப்படி ஏதும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட கணவனுடைய முன்னாள் காதலியை நினைத்து மனதுக்குள் குமைந்துக் கொண்டு வாழ்கிறார்கள். மாயா சிவாவின் மீதுள்ள ஆசையால் இப்போது காயத்ரியின் விஷயம் தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் சிவாவைத் திருமணம் செய்தால் போதும் என்று இருக்கிறாள்.

AKS 61
AKS 61
திருமணத்திற்குப் பிறகு என்றாவது காயத்ரியும் சிவாவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய நேர்ந்தாலோ, பார்த்துக் கொள்ள நேர்ந்தாலோ அது மாயாவுக்குக் குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். ஏனென்றால் மாயா முழுமனதுடன் சிவா - காயத்ரி விஷயத்தை புரிந்து ஏற்றுக் கொள்ளவில்லை.

பொற்கொடி பாண்டியனை வெளியில் எங்காவது செல்லலாம் என்று அழைக்கிறாள். இருவரும் கலந்து பேசி கடற்கரைக்குச் செல்லலாம் என முடிவு செய்கிறார்கள். பொற்கொடி கவிதாவையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்று பாண்டியனிடம் சொல்கிறாள். பாண்டியன் கவிதாவுக்கு வேறு வேலை இருக்கலாம் அல்லது அவள் ராஜேஷுடன் வெளியில் செல்லலாம் அதனால் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறன். பொற்கொடி விடாப்பிடியாக கவிதாவுக்கு கால் செய்து அவளையும் கடற்கரைக்குச் செல்ல அழைக்கிறாள். கவிதா முதலில் மறுக்கிறாள். பொற்கொடி அவளைக் கட்டாயமாக வர வேண்டும் என்று அழைத்ததும் கவிதா ஒத்துக் கொள்கிறாள்.

மாலை கடற்கரையில் கவிதா மற்றும் பாண்டியனை கடலில் விளையாட செல்லுமாறு பொற்கொடி சொல்கிறாள். அதை தான் கரையில் இருந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் சொல்கிறாள். கவிதா தயங்கியபடியே இருக்க, பொற்கொடி பாண்டியனுக்கும் கவிதாவுக்கும் சேர்ந்தே தான் காதல் சொல்லி இருப்பதாகவும் அதனால் கவிதாவிற்கு தங்களுடன் வருவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம் என்றும் சொல்கிறாள். இது பார்ப்பதற்கு புதுமையாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் பொற்கொடியை போன்ற பெண்கள் சிலர் இருக்கிறார்கள். தாங்கள் நேசிக்கும் மனிதர்களின் விருப்பத்திற்கு உரியவர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்தக் கூடியவர்கள். பொற்கொடியை போல தங்களுடைய காதலன் அல்லது காதலியின் நட்பை புரிந்துக் கொண்டு, வேறு பாலினமாக இருக்கும் பட்சத்தில் அதில் எந்தச் சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் இருந்தால், இந்த உலகத்தில் இவ்வளவு சண்டை - சச்சரவுகள் இருந்திருக்காது.

AKS 61
AKS 61
சுந்தர் காயத்ரியை கட்டாயப்படுத்தி தன்னுடைய அடிமை போல் பாவிக்கிறான். இச்சமயத்தில் காயத்ரியின் மனம் தன் உடல்நலனில் அக்கறையுள்ள சிவாவின் மீது சாய்வது இயல்பு. காயத்ரி இந்த மனக் குழப்பத்தை எவ்வாறு 'ஹேண்டில்' செய்யப் போகிறாள்?
பாண்டியன் – கவிதா இடையே சிறு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அது தொடருமா?

காத்திருப்போம்!