Published:Updated:

AKS - 56: 3ம் நபரை நம்பும் நாம், நம் இணையை நம்ப மறுப்பது ஏன்? காதலில் மனம் சொல்வதைக் கேட்க வேண்டுமா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (08-11-2021) வெளியான 56-வது எபிசோட் எப்படி இருந்தது?!

கிஷோர் புனிதாவைக் காதலிப்பதாகச் சொல்ல, புனிதா ஏற்கெனவேதான் பரத்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பற்றி கிஷோரிடம் சொல்கிறாள். புனிதா மற்றும் பரத்துடன் நண்பர்களாக பழகுவோம் என்று சொல்லி கெட் டு கெதருக்கு அழைக்கும் கிஷோர் பரத்தை கேலி செய்வதால், இருவருக்கும் சண்டை ஆரம்பமாகிறது. புனிதா பரத்துடன் சண்டையிடுகிறாள். பரத் அந்தக் கோபத்தை கிஷோர் மீது காட்டுவதற்காக கிஷோரின் வீட்டிற்குச் சென்று அவனை எச்சரிக்கிறான். கிஷோரின் ஈகோவை பரத்தின் கோபம் ட்ரிக்கர் செய்கிறது. கிஷோர் புனிதாவை இம்ப்ரஸ் செய்து காட்டுவதாக சவால்விடுகிறான்.

இதை பற்றி புனிதாவிடம் பேசுவதற்காக அவளது அலுவலகத்திற்கு பரத் வருகிறான். பரத் கிஷோர் பற்றிப் பேச ஆரம்பித்ததும், புனிதா அவன் மீது கோபப்படுகிறாள். கிஷோர் சவால்விட்டதை பற்றிச் சொல்ல எத்தனிக்கையில் புனிதா தன்னிடம் எதுவும் பேச வேண்டாம் என்கிறாள். புனிதா அலுவலகத்தில் இருக்கிறாள் அதனால் அங்கே பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட முடியாது என்பதால் பரத்துடன் பேச மறுக்கிறாள். ஆனால் புனிதா தன் பக்கம் இருக்கும் தவற்றை காது கொடுத்து கேட்க மறுக்கிறாள். பரத் அங்கிருந்து வெளியேறுகிறான்.

AKS - 56
AKS - 56

பரத் சென்றதும் கிஷோர் அங்கு வருகிறான். புனிதாவிடம் பரத்துடன் நடந்த மோதல் பற்றி சொல்கிறான். பரத்திடம் தான் சவால் விட்டது பற்றியும் கிஷோர் கூறுகிறான். புனிதா அதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிறாள். புனிதா கிஷோரை முழுமையாக நம்பத் தொடங்குகிறாள். ஆனால் புனிதாவிற்கு கிஷோரிடம் பேசும்போது இருக்கும் பொறுமை பரத் பேசும்போது இல்லை. புனிதா பரத்தை முன் முடிவுகளுடன் அணுகுகிறாள். பரத் ஏற்கனவே தன்னை சந்தேகப்படுகிறான் என்று புனிதா எண்ணிக் கொண்டிருக்கிறாள். அதனடிப்படையில் பரத் கூறும் எல்லாவற்றையும் புனிதா தவறாக எண்ணுகிறாள். பரத் கிஷோரை பற்றி சொல்வதை கிஷோரின் மீதான பொறாமையில் அல்லது புனிதா மீதான சந்தேகத்தில் பரத் சொல்கிறான் என்று புனிதா முடிவுக்கு வருகிறாள்.

பெரும்பாலும் காதல்/திருமண உறவுகளில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் இடத்தில் மூன்றாவது நபர் புகார் கூறும்போது மற்றவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு உறவுகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பது அவசியம். அதேபோல் மூன்றாவது நபர் கூறுபவற்றை வைத்துக் கொண்டு எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது.

புனிதா இவ்வளவு மன முதிர்ச்சியுடன் தெளிவாக சிந்திக்கக் கூடியவளாக இருந்தும் பரத்தின் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கிறாள். மேலும் சமீபத்தில் அறிமுகமான கிஷோர் சொல்வதை அப்படியே நம்புகிறாள். கிஷோர் பரத் புனிதாவின் இடையில் தனது ஆட்டத்தை துவக்கி இருக்கிறான்.

AKS - 56
AKS - 56

காயத்ரிக்கு அலுவலக ரீதியாக வேலையில் இருக்கும் சந்தேகங்களை சிவா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவள் வேலை முடிந்ததும் காயத்ரி அவ்வளவுதான் என்று சொல்ல சிவா அவ்வளவுதானா என்று கேட்கிறான். காயத்ரி மாயா யாரென சிவாவிடம் கேட்கிறாள். காலையில் சிவா வர தாமதமானதால் தான் புனிதாவிடம் சிவாவை பற்றி கேட்டதாகவும், சிவா மாயாவை பார்க்கச் சென்றிருப்பதாக புனிதா சொன்னதாகவும் சொல்கிறாள். மாயா தனது எக்ஸ் - கேர்ள் ஃபிரண்ட் என்று சிவா சொல்கிறான்.

காயத்ரி அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க, சிவாவின் அறைக்கு மாயா வருகிறாள். இப்போது சிவா அவளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்திருக்கிறான். காயத்ரி அவர்கள் இருவரையும் மாறி மாறி சந்தேகத்துடன் பார்க்கிறாள். சிவா இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான். காயத்ரியின் முகம் வருத்தம் அடைகிறது. காயத்ரி குழப்பம், வருத்தம், சிறிது கோபம் எல்லாம் சேர்ந்த கலவையாக சிவாவின் அறையை விட்டு தனது லேப்டாப்பைக் கூட எடுக்காமல் வெளியேறுகிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயத்ரி சிவாவின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டாள். அதை புனிதாவின் மூலமாக சிவாவுக்கும் சொல்லி தெளிவுபடுத்திவிட்டாள். சுந்தரிடம் இனிதான் சிவாவுடன் பேசப் போவதில்லை என்று உறுதி அளித்திருக்கிறாள். இத்தனை முடிவுகளுக்கு பிறகும் காயத்ரிக்கு மாயா யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இயல்பானதுதான் என்றாலும் மாயாவைக் கண்டதும் காயத்ரி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. காயத்ரிக்கு சிவாவின் வாழ்வில் இன்னொரு பெண் ஏற்கனவே இருந்திருக்கிறாள் என்பதும் அவள் மீண்டும் அவனைத் தேடி வந்திருக்கிறாள் என்பதும் பதற்றத்தை உண்டாக்குகிறது.

AKS - 56
AKS - 56

காயத்ரி அவள் வாழ்க்கைக்கும், அவளது குடும்பத்திற்கும் எது ஏற்றது என்பதை முடிவுசெய்து சிவாவிடம் இருந்து ஒதுங்கிக்கொண்ட பின்னும் கூட சிவா தன்னுடைய பழைய காதலியிடம் பேசுவது காயத்ரிக்கு பிரச்னையாக இருக்கின்றது. மாயாவைக் கண்டதும் காயத்ரியின் இந்த எதிர்வினையை பார்க்கும்போது அவளுக்கு சிவாவின் மீது தீராத காதலும், பொசஸிவ்னெஸும் இருப்பதாகத் தோன்றுகிறது. சிவா மாயாவை கவனிக்காமல் காயத்ரியின் முக மாற்றத்தையும் அவள் எழுந்துபோன விதத்தைப் பற்றியுமே யோசிக்கிறான்.

ராஜேஷ் கவிதாவை அவளது வீட்டில் ட்ராப் செய்கிறான். விடும்பொழுது கவிதாவிற்கு பாண்டியன் மேல் இருக்கும் காதலை தான் புரிந்து கொள்வதாகவும், இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பொறுமையாக மனம் சொல்வதைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் ராஜேஷ் கூறுகிறான். கவிதா உணர்ச்சி வசப்படுகிறாள். ராஜேஷுக்கு நன்றி சொல்கிறாள். கவிதா தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் பாண்டியனிடம் பேசிவிட வேண்டும் என்று வீட்டிற்குள் வருகிறாள். அவள் நுழையும்போது பாண்டியன் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது.

AKS - 55: மன முதிர்ச்சியுடைய ஆண்கள் தேவைதான்... ஆனால், காதல் நுழைந்திடாத நட்பு சாத்தியமே இல்லையா?

அந்த பெண் யார் என கவிதா ஜாடையில் கேட்க, பாண்டியன் பொற்கொடியை அறிமுகம் செய்வதோடு பொற்கொடி தன்னைக் காதலிப்பதாக சொன்னதைப் பற்றி கவிதாவிடம் கூறுகிறான். கவிதா அதிர்ந்து போகிறாள். அப்போது பாண்டியன், பொற்கொடி தன்னை மிகவும் புகழ்ந்து பேசியதாகவும் எப்போதும் உடனிருக்கும் கவிதா ஒரு முறைகூட அவ்வாறு பேசவில்லை என்றும் எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்றும் சுட்டிக் காட்டுகிறான்.

AKS - 56
AKS - 56

பாண்டியனிடம் தன்னை இம்ப்ரஸ் செய்த விஷயங்களை பொற்கொடி ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறாள். பாண்டியன் பொற்கொடி அவ்வாறு சொல்வதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து அதை இரண்டாம் முறை கவிதாவிடம் சொல்லுமாறு கேட்கிறான்.

எப்போதும் நம்முடன் இருப்பவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருந்தாலும் அவர்களது திறமைகளை பற்றியும், நல்ல குணங்களைப் பற்றியும் பெரிதாக வெளிப்படையாக பேசியிருக்க மாட்டோம். புதிதாகப் பார்க்கும் ஒருவருக்கு அந்த குணங்கள் பெரிய விசயமாக தெரியும். கவிதா பாண்டியனை எப்போதும் கேலி செய்து பழக்கப்பட்டிருப்பதால் பாண்டியனுக்கு பொற்கொடி தன்னை புகழ்ந்து பேசியது புதிதாக இருக்கலாம். அதுபோக எப்போதும் சுற்றி இருப்பவர்களால் மட்டம் தட்டப்படும் பாண்டியனுக்கு பொற்கொடி பேசியது மிகவும் தேவையானதாக இருக்கலாம். ஆனால் இவ்வளவு பேசும் பாண்டியன் பொற்கொடியின் காதலுக்கு எந்தப் பதிலும் கூறவில்லை.

கவிதா பாண்டியனிடம் மனம் விட்டு பேசுவாளா?
புனிதா பரத்தை புரிந்து கொள்வாளா?
சிவா மற்றும் காயத்ரி விஷயம் மாயாவுக்குத் தெரிய வருமா?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு