Published:Updated:

AKS 57: தான் விரும்பும் ஆணின் வாழ்வில் இருக்கும் பெண்களை மதிக்கும் காதலிகள் - நட்பதிகாரமும் காதலும்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (09-11-2021) வெளியான 57-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS 57: தான் விரும்பும் ஆணின் வாழ்வில் இருக்கும் பெண்களை மதிக்கும் காதலிகள் - நட்பதிகாரமும் காதலும்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (09-11-2021) வெளியான 57-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

கவிதா பாண்டியனிடம் தன் காதலை சொல்வதற்காக வந்திருக்கிறாள். ஆசையுடன் வீட்டிற்குள் நுழையும் கவிதாவிற்கு பொற்கொடி பாண்டியனின் காதல் அதிர்ச்சியாக இருக்கிறது. பொற்கொடி பாண்டியனிடம் ப்ரொபோஸ் செய்கிறாள். அவளுக்கு பாண்டியனை பிடித்திருப்பதற்கான காரணங்களாகச் சிலவற்றைக் கூறுகிறாள்.

பொது இடங்களில் தண்ணீர் குடிக்கும்போது நமக்கு பின்னால் வரிசையில் இருப்பவர்களுக்கு முதலில் வாய்ப்பு அளிப்பது, பொது இடங்களில் தள்ளுக் கதவுகளைத் திறக்கும்போது பின்னால் வருபவர்களை கவனித்து மூடுவது போன்றவை சொல்வதற்கு சிறிய விஷயமாக இருந்தாலும் இன்று பெரும்பாலும் யாரும் செய்வதில்லை. அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுடன் சிறிய விஷயங்களில் அனுசரித்து செல்வது இன்று பலருக்கும் மறந்து போய்விட்டக் குணம். இவை எல்லாவற்றையும் விட எவ்வளவு வருமானம் வந்தாலும் வெள்ளம் போன்ற பேரிடர்கள் வரும்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் மிகக் குறைந்துக் கொண்டே வருகின்றது.

AKS 57
AKS 57
மனிதர்களிடத்தில் அடிப்படையாக இருக்க வேண்டிய சகிப்புத்தன்மை, சக மனிதர்களுடன் ஒத்துப்போகும் பழக்கம் முதலியவை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வரும் சமூகத்தில் பாண்டியன் மிக இயல்பாக மனிதத் தன்மையுடன் நடந்து கொள்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்களின் தனிமனித தேவைகள் அதிகரித்து எவ்வளவு வருமானம் வந்தாலும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க மனிதர்களுக்கு நேரமில்லை. மனிதர்கள் மீதான அன்பு என்பது பேஸ்புக்கின் கேர் ஸ்மைலியாகவும் வாட்ஸ்அப்பில் ஹார்ட்டினாகவும் சுருங்கிவிட்ட காலத்தில் பாண்டியன் உண்மையான அன்பு மற்றும் சக மனிதர்கள் மீதான அக்கறையுடன் இருப்பது பொற்கொடியை வியக்கச் செய்கிறது. அதுவே பாண்டியனை அவள் காதலிக்க காரணமாக இருக்கிறது என அவள் கவிதாவிடம் சொல்கிறாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவிதா இவற்றை எல்லாம் கலங்கிய மனதுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறாள். கவிதாவிற்கு பொற்கொடியை பிடித்திருந்தால் மட்டுமே அவளது காதலை தான் ஏற்றுக் கொள்வதாக பாண்டியன் பொற்கொடியிடம் சொல்லி இருக்கிறான். அதற்காக பாண்டியனும் பொற்கொடியும் கவிதா வருவதற்காக காத்திருக்கிறார்கள். நல்வாய்ப்பாக கவிதா சொன்ன தேதிக்கு இரண்டு நாள்கள் முன்பாகவே வந்து விட்டாள். பொற்கொடி அதற்காக மகிழ்ச்சி அடைகிறாள். தான் ராஜேஷை நேர்காணல் செய்தது போல கவிதா பொற்கொடியை நேர்காணல் செய்து முடிவு சொல்ல வேண்டுமென பாண்டியன் கவிதாவிடம் கேட்கிறான்.

AKS 57
AKS 57

கவிதா எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்கிறாள். பாண்டியன் மற்றும் கவிதாவின் இடையில் இருக்கும் நட்பை மதித்து தான் பாண்டியனை தனக்கு அதிகம் பிடித்திருப்பதாக பொற்கொடி சொல்கிறாள். தன்னுடைய பிரண்டுக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள சம்மதம் என்று கவிதா ராஜேஷிடம் சொல்லும்போது ராஜேஷ் ஏற்றுக் கொண்டதைப் போல பொற்கொடியும் பாண்டியன் சொல்வதை மதித்து ஏற்றுக் கொள்கிறாள். பொதுவாக இதுபோல் இன்னொருவரிடம் கேட்கவேண்டும் என்று சொல்லும்போது யாருக்கும் கோபம் வரும். ஆனால் ராஜேஷுக்கும் பொற்கொடிக்கும் தங்களது காதல் மீது இருக்கும் நம்பிக்கையும், பிடித்தமும் தவறாக எண்ண செய்யாமல் புரிந்து கொள்ள வைக்கிறது.

எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் கவிதா கலகலவென்று பேசி சிரித்துக் கொண்டிருப்பாள். முதல் முறையாக கவிதா அமைதியாக கவனித்துக் கொண்டிருக்க, கவிதாவின் இடத்தில் பொற்கொடி நவம்பர் மாத சென்னை மழையை போல விடாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்.
AKS 57
AKS 57

அலுவலகத்தில் காயத்ரியும் சிவாவும், சிவாவின் அறையில் பேசிக் கொண்டிருக்கையில் மாயா அங்கு வருகிறாள். இருவரும் தடுமாறுவதை மாயா கவனிக்கிறாள். மாயாவை சிவா அறிமுகம் செய்ததும் காயத்ரி தனக்கு வேலை இருப்பதாக சொல்லி எழுந்து சென்று விடுகிறாள். சிவாவிற்கு ஏற்கெனவே ஒரு காதலி இருந்தது தெரிய வந்தபோது காயத்ரிக்கு கலக்கமாக இருக்கின்றது. மாயாவை கண்டதும் பதற்றத்தில் அவள் வெளியேறுகிறாள். மாயா காயத்ரியிடம் சிவா யாரையாவது காதலிக்கிறானா என்று கேட்கிறாள். மாயா தான் சிவாவுடனான காதலை விட்ட இடத்திலிருந்து தொடர நினைப்பதாகவும் ஆனால் சிவா விட்டால் போதும் என்று இருப்பதாகவும் காயத்ரியிடம் முறையிடுகிறாள். காயத்ரி என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பத்தில் நிற்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயத்ரியின் மீது சிவாவுக்கு காதல் இருப்பதாக மாயா சொல்லியபோது தனக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயமாகி விட்டது என்று காயத்ரி தெளிவுபடுத்துகிறாள். மாயா மகிழ்ச்சி அடைகிறாள். அப்படியென்றால் சிவாவிடம் பேசி தன்னையும் சிவாவையும் சேர்த்து வைக்கும்படி மாயா காயத்ரியிடம் கேட்கிறாள். சிவாவிற்கும் காயத்ரிக்கும் இடையில் காதல் இருக்கலாம் என்று மாயா முதலில் நினைக்கிறாள். பிறகு காயத்ரி தனக்கு நிச்சயமாகிவிட்டது என்று சொன்னவுடன் சிவாவிற்கு காயத்ரி மீது காதல் இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறாள். அல்லது குறைந்தபட்சம் சிவாவிற்கு காயத்ரியிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று மாயா நம்புகிறாள்.

AKS 57
AKS 57

தன்னை காதலித்தவனுக்கு தன்னுடனான சிறு பிரச்னையில் பிரிவு ஏற்பட்டபோது உடனடியாக வேறு ஒரு பெண்ணின் மீது காதல் வந்திருக்கிறது என்பது பொதுவாக பெண்களுக்கு கோபமூட்டும் விஷயமாக இருக்கும். இன்னொரு காரணம் சிவா பிரிந்த பிறகும் கூட மாயா சிவாவையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவனுடைய தவறுகளை மறந்து அவனுடன் சேர விரும்புகிறாள். அப்படி மாயா சிவாவை நினைத்துக் கொண்டிருக்கும்போது சிவா வேறு ஒரு பெண்ணை நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரியும்போது மாயாவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

ஆனால் மாயாவிற்கு தன்னுடைய காதல் முக்கியமானதாக இருக்கின்றது. அதேபோல காதல் இயல்பாக ஏற்படக் கூடியது என்கிற புரிதலும் இருக்கின்றது. நமக்கு பிடித்தவர்களுக்கு பிடித்ததை நாமும் நேசிக்கும் மனம் வருவது மிக அரிது. மாயாவிற்கு அந்த மனம் எளிதாக வாய்த்திருக்கிறது. அவளால் சிவா காதலித்த பெண்ணுடன் சகஜமாக பேசி தங்களுடைய காதலை சேர்த்து வைக்குமாறு சொல்ல முடிகிறது. இரண்டு பெண்களுக்குள் நிகழும் இந்த உரையாடல் ஒரு பாசிட்டிவ் ஃபீட்பேக் கொடுக்கின்றது.

அதேபோல் கவிதாவின் முடிவை தன் முடிவாக ஏற்றுக் கொள்வேன் என்று பாண்டியன் சொன்ன பிறகும் கவிதாவுக்காகக் காத்திருந்து அவளிடம் தங்கள் கதையை சொல்லி அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொற்கொடியின் மனமும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பொற்கொடி மாயா இருவரும் தாங்கள் விரும்பும் ஆண்களின் வாழ்வில் இருக்கும் பெண்களை மதிக்கவும் அவர்கள் மேல் அன்பு செலுத்தவும் செய்கின்றனர்.

AKS 57
AKS 57
மாயாவின் காதலை காயத்ரி சிவாவுக்கு புரிய வைப்பாளா?
பொற்கொடி கவிதாவின் தேர்வில் வெற்றி பெறுவாளா?
யார் யாருடன் சேர்வார்கள் என்கிற ஆவலுடன் அடுத்த எபிசோடுக்காக...

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism