Published:Updated:

AKS 60: `வளர்ப்பு சரியில்லை' எனக் கணவன் மனைவியைச் சொல்வது, `தான் பெரியவன்' என்கிற அதிமேதாவித்தனமா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (12-11-2021) வெளியான 60-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS 60: `வளர்ப்பு சரியில்லை' எனக் கணவன் மனைவியைச் சொல்வது, `தான் பெரியவன்' என்கிற அதிமேதாவித்தனமா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (12-11-2021) வெளியான 60-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

காயத்ரி மாதவிடாய் காரணமாக வயிற்று வலியால் படுத்திருக்கிறாள். எழுந்திருக்க முடியாத காரணத்தினால் ஜாகிங் வரவில்லை என்று சுந்தரிடம் கூறுகிறாள். தயிரில் வெந்தயம் ஊற வைத்து காயத்ரிக்குக் கொடுக்கிறான் சுந்தர். அதன் மனம் காயத்ரிக்கு குமட்டுகிறது. அதை குடித்தால் வாந்தி எடுத்துவிடுவேன் என்று சொல்கிறாள்.

சுந்தர் காயத்ரியிடம், “உனக்கு நல்ல விஷயம் எதுவுமே பிடிக்காதா?” என்று கேட்கிறான். இந்தக் கேள்வி சாதாரணமாக தோன்றினாலும் இதன் பின்னணியில் குறிப்பிடும் விஷயங்கள் மிகப் பெரியது. பொதுவாக திருமண வாழ்க்கையில் ஆண்கள் விளையாட்டுக்கு அல்லது சண்டையின்போது ”உங்கள் வீட்டில் உன்னை நன்றாக வளர்க்கவில்லை” என்று மனைவியைப் பார்த்து சொல்வார்கள். ஒரு பெண் இத்தனை ஆண்டு காலமாக என்னவாக வளர்ந்து இருக்கிறாளோ அதை மொத்தமாகக் கேள்வி கேட்பது அல்லது தவறு என்பதுதான் அதன் பொருள். அதுபோக வளர்ப்பு பற்றிய பேச்செல்லாம் பெண்களை சுற்றி மட்டும்தான் பேசப்படும். ஆண்களை நல்ல விதமாக வளர்க்கவில்லை என்பதை அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண் சண்டையின் போது தன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரிடம் சொல்லிவிட முடியாது.

AKS 60
AKS 60

பொதுவாக உடன் பிறந்தவர்களே குணத்தில், பண்புகளில், பழக்க வழக்கங்களில் ஒன்றுபோல இருப்பதில்லை. வெவ்வேறு குடும்பத்தில், வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு வாழ்க்கை முறையில் வளர்ந்த இருவர் திருமணம் என்கிற பெயரில் ஒன்றாக வாழ்வதே பெரிய சவால்தான். அந்தச் சவாலை பிரச்னை இல்லாமல் சமாளிக்க வேண்டுமானால் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அதை மதிக்கவும், ஏற்றுக் கொள்ளும் மனமும் வேண்டும். நாம் செய்யாத நமக்கு பழக்கமில்லாத விஷயங்களை நம்முடன் இருப்பவர்கள் செய்யும்போது வளர்ப்பு சரியில்லை என்கிற அர்த்தத்தில் பேச முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஒருவருக்கு பிடித்த உணவு இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒவ்வொருவருக்கும் சில ஒவ்வாமைகள் இருக்கக் கூடும். குறிப்பாக மாதவிடாய், அல்லது உடல் நலமில்லாத போது சில உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள முடியாது. தான் எல்லாவற்றையும் விட பெரியவன் என்றோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற அதிமேதாவித்தனத்துடன் இருப்பவர்கள் மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தங்களது உரிமையைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்துகின்றனர்.

காயத்ரியிடம் சுந்தர் அருகம்புல் ஜூஸ், பாவக்காய் ஜூஸ் குடிப்பது பற்றி எல்லாம் வகுப்பெடுக்கிறான். பொதுவாக ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத போது மற்றவர்கள் சொல்லும் எந்த அறிவுரையும் அவர்கள் மனதில் ஏறாது. உடல் நலம் சரியில்லாத போது தேவை எல்லாம் மருந்தும், ஓய்வும், ஆறுதலும் மட்டுமே. சாதாரணமாகவே இன்று இருபது வயதுக்கு மேல் இருக்கும் யாரும் அறிவுரைகளை ஏற்பதில்லை எனும்பொழுது சுந்தர் காயத்ரியின் பொறுமையை பயன்படுத்தி அவளுக்கு அறிவுரைகளை வாரி வழங்குகிறான்.

AKS 60
AKS 60

சுந்தர் தான் பாவக்காய் ஜூஸ் குடிப்பதைப் பற்றி பெருமையாகச் சொல்லும் போது காயத்ரி, ‘யூ கோ மேன்... வொய் மீ?’ என்பதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவனது அறிவுரையையும், தற்பெருமையையும் தாங்க முடியாமல் அவன் கொடுத்ததைச் சிரமப்பட்டுக் குடிக்கிறாள்.

சுந்தருடன் ஜீப்பில் செல்லும்போது காயத்ரிக்கு வாந்தி வருகிறது. வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்கிறாள். சுந்தர், “ஏன்? என்ன ஆச்சு?” என்று அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கையில் காயத்ரி வண்டி உள்ளேயே வாந்தி எடுத்துவிடுகிறாள். அவள் வாந்தி எடுத்ததைக் கண்டு சுந்தர் பதறுகிறான். பிறகு ஜிப்பில் வாந்தி எடுத்து ஜிப்பை அசுத்தம் செய்துவிட்டாய் என்று காயத்ரியிடம் சொல்கிறான். காயத்ரி அதிர்ச்சியாக அவனைப் பார்க்கவும் சுந்தர் பேச்சை மடை மாற்றுகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லா விஷயங்களிலும் தாங்கள் மிகவும் ’பெர்பக்ட்’ ஆக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களை விட பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காயத்ரி வாந்தி எடுத்தது, உடல் நலமில்லாதது பற்றிய கவலையை விட சுந்தருக்கு ஜீப் அசுத்தமாகி விட்டது என்பது தான் முதன்மை பிரச்னையாக இருக்கிறது. பலரும் இங்கு நம்முடைய வசதிக்குத்தான் பொருள்கள் என்பதை மறந்து பொருள்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளத்தான் நாம் உயிர் வாழ்கிறோம் என்கிற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அவரவர் மட்டும் சம்பந்தப்பட்டு இருந்தால் பிரச்னை இல்லை. சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் இதே அளவுகோலில் பார்க்கிறார்கள். உடன் இருக்கும் மனிதர்களைவிட தாங்கள் பயன்படுத்தும் பொருள்களின் மீதான அக்கறை மனிதத் தன்மைக்கு எதிரானது அல்லவா?

பரத் கொச்சி சென்று இருக்கும் புனிதாவிற்கு கால் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறான். ஆனால் புனிதா கோபத்தில் தன்னை பிளாக் செய்யக் கூடும் என்று யோசிக்கிறான். ஒருவழியாக முடிவெடுத்து புனிதாவிற்கு கால் செய்கிறான்.

AKS 60
AKS 60

புனிதாவின் செல்போனில் பரத்தின் காலை கிஷோர் எடுத்துப் பேசுகிறான். பரத்துக்கு அதிர்ச்சியும், கோபமும் ஒரு சேர வருகிறது. புனிதாவும் கிஷோரும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்களா என பரத் கேட்க, கிஷோர், ”ஆமாம்” என்று சொல்கிறான். கிஷோரின் மீது பரத் கோபப்படுகிறான்.

பாண்டியன் குழப்பத்தில் இருக்கிறான். சிவா பாண்டியனிடம், ‘பாண்டியனுக்கும் கவிதாவுக்கும் ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்கிறான். அலுவலகத்திற்கு தன்னுடன் வருமாறு சிவா அழைக்க, பாண்டியன் தான் பிறகு வருவதாக சொல்லி தனது அறைக்கு சென்று அலெக்ஸாவிடம் பேசுகிறான். பாண்டியன் தன் மனதில் இருப்பவை எல்லாவற்றையும் யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாண்டியன் கவிதாவை காதலிப்பதாக அலெக்ஸாவிடம் சொல்கிறான். கவிதாவுக்கும் அதே உணர்வு இருக்கலாம் என்றுதான் எண்ணுவதாக சொல்கிறான்.

கவிதா ராஜேஷை காதலிப்பதாகவும், தற்போது பாண்டியன் பொற்கொடியின் காதலை ஏற்றுக் கொண்டதால் தனக்கும் கவிதாவுக்கும் இருக்கும் காதலை வெளிப்படுத்துவது எல்லோருக்கும் மன வருத்தத்தை உண்டாக்கும் எனவும் பாண்டியன் நினைக்கிறான். ஆனால், அவனால் கவிதாவை பிரிந்தும் இருக்க முடியவில்லை. கவிதா ராஜேஷுடன் பெங்களூரு சென்று இருக்கும்போது பாண்டியனின் மனம் அதிகமாக கவிதாவைத் தேடியது. அவளைப் பிரிந்து அவனால் இருக்க முடியாத அளவிற்கு கவிதாவின் பிரிவு பாண்டியனுக்கு அழுகையை வர வைத்தது. கவிதா பாண்டியனிடம் பெங்களூரிலிருந்து பேசும்போது, ‘நாம் இருவரும் நண்பர்கள்தானே பாண்டியா’ என்று கேட்பாள்.

AKS 60
AKS 60

பாண்டியனால் அப்போது பதில் சொல்ல முடியாது. தனக்கும் கவிதாவுக்கும் இடையில் இருப்பது காதல் என்பது பாண்டியனுக்கு அப்போதுதான் புரிந்திருக்கும். குறைந்தபட்சம் அவன் கவிதா ஊரிலிருந்து வந்து நேரில் பேசுவதற்காக அவளுக்கு வாய்ப்பளித்து இருக்க வேண்டும்.

கவிதா பெங்களூரிலிருந்து வருவதற்குள் அவசரமாக பொற்கொடியின் காதலை ஏற்றுக் கொண்டதோடு தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்து விடுகிறான். தற்போது பாண்டியன், கவிதா, ராஜேஷ், பொற்கொடி என நான்கு பேரின் பிரச்னையாக இது உருமாறிவிட்டது.

பாண்டியன் கவிதா மீது உள்ள காதலை வெளிப்படுத்துவானா?
காயத்ரி சுந்தரை திருமணம் செய்துகொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்வாளா?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism