Published:Updated:

AKS - 63: மேலோட்டமான லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள பாதிப்புகள் என்னென்ன? பிரிவு காதலை அதிகரிக்குமா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (17-11-2021) வெளியான 63-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 63: மேலோட்டமான லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள பாதிப்புகள் என்னென்ன? பிரிவு காதலை அதிகரிக்குமா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (17-11-2021) வெளியான 63-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

புனிதா அலுவலக ரீதியான பயிற்சிக்காக கிஷோருடன் கொச்சி சென்றிருக்கிறாள். பரத் புனிதாவுக்கு கால் செய்யும்போது புனிதா குளியலறையில் இருக்கிறாள். அவளது அறைக்கு வரும் கிஷோர் பரத்தின் போன் காலை எடுத்துப் பேசுகிறான். கிஷோர், பரத்திடம் இருவரும் ஒன்றாக தங்கி இருப்பதாக சொல்கிறான். பரத் அதை நம்பிக் கொண்டு புனிதாவை சந்தேகப்படுகிறான். கோபத்தில் மது அருந்திவிட்டு மீண்டும் புனிதாவிற்கு கால் செய்கிறான்.

இருவரும் ஒரே அறையில் தங்கி இருப்பதாக கிஷோர் கூறியதை பற்றி புனிதாவிடம் பரத் கேட்கிறான். புனிதா கோபப்பட்டு பரத் அப்படி பேசுவான் என்று தெரிந்ததால்தான் போனை அட்டென்ட் செய்யவில்லை என்று சொல்கிறாள். அந்த நேரம் கிஷோர் புனிதாவின் அறைக்கு வருகிறான். புனிதாவிடம் தன்னோடு மது அருந்த தயாரா என்று கேட்கிறான். பரத் அதைக் கேட்டு விடுகிறான். பரத் புனிதாவிடம் கிஷோருடன் சேர்ந்து மது அருந்தக் கூடாது என்று கூறுகிறான். புனிதாவிற்குக் கோபம் வருகிறது.

AKS - 63
AKS - 63

புனிதா பரத்துடன் லிவ்-இன் உறவில் நேர்மையாக இருக்கிறாள். எல்லாவற்றையும் மறைக்காமல் வெளிப்படையாக கூறுகிறாள். ஆனால் கிஷோரின் பேச்சை நம்பி பரத், புனிதாவை சந்தேகப்படுகிறான். பரத் இவ்வளவு நாள்களாக புனிதாவின் ஆடை விஷயங்களில் முற்போக்காக இருந்தாலும் ரிலேஷன்ஷிப் விஷயத்தில் சராசரி ஆண்களைப் போல ஆணாதிக்கவாதியாக நடந்துக் கொள்கிறான். பரத், புனிதா சொல்வதை நம்ப வேண்டும் அல்லது கிஷோரின் பேச்சை நம்பாமல் புனிதாவுக்கு சிறிது ஸ்பேஸ் கொடுத்து பொறுமையாக முடிவு எடுத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரத் இப்போது நடந்து கொள்வதைப் பார்க்கும் போது இவ்வளவு காலமும் புனிதாவுடன் எதையும் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக லிவ் - இன் உறவில் இருந்திருக்கிறான் என்பதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புனிதா பரத்திடம் அவன் ஒரு ஆண் என்று அதிகாரம் செலுத்த நினைக்கிறானா என்று கேட்கிறாள். சாதாரணமாக இதை பார்க்கும் போது புனிதா தவறு செய்வது போலவும், பரத் கேட்பது சாதாரண விஷயமாகவும் தெரியும். எந்த ஒரு சம்பவத்தையும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நம் குடும்பத்தினரை பற்றி நமக்கு ஆகாதவர்கள் கூறும் விஷயங்களை பெரிதுபடுத்திக் கொண்டு உடன் இருப்பவர்களை சந்தேகப்பட முடியாது என்கிற அடிப்படை, பரத்திற்கு புரியாத அளவிற்கு சந்தேகமும் ஆணாதிக்கமும் அதிகமாக இருக்கின்றன.

AKS - 63
AKS - 63

பரத் புனிதாவிடம் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சிவா, புனிதா தைரியமான பெண் என்றும் அவளது தைரியமான போக்கைத் தவறாக எண்ண வேண்டாம் என்றும் கூறுகின்றான். தொடக்கத்தில் சிவாவின் முன்கோபத்தை வைத்து அவன் முரடனாக, யாரையும் புரிந்துகொண்டு அனுசரித்து செல்லாதவனாக தெரிந்தாலும் முதல் நாளே காயத்ரி வேலையை விட்டுவிட்டு ஊருக்குச் சென்றுவிடக்கூடாது என்று எண்ணியதிலிருந்து, புனிதா மற்றும் கவிதாவை அவர்களுக்கான சுதந்திரம் மற்றும் தனித்தன்மையுடன் புரிந்து கொள்வதுவரை சிவா தனித்து விளங்குகிறான். அதே சமயம் முதல் நாள் புனிதாவுடன் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தும் பரத் அந்தப் முற்போக்கை மது அருந்துவது மற்றும் ஆடை விஷயத்தில் மட்டும்தான் கடைப்பிடித்து வந்திருக்கிறான். அதுவும் புனிதாவை எதிர்த்து பேச முடியாது என்று நன்றாகத் தெரிந்திருக்கும் காரணத்தினாலும் இருக்கலாம்.

AKS - 63
AKS - 63

பாண்டியன் இரவு தனது அறையில் படுத்திருக்கிறான். கவிதா வரும்போது தூங்குவதுபோல் பாவனை செய்கிறான். கவிதா அவனை பார்க்க முடியாமல் திரும்பிக் கொள்கிறாள். பாண்டியன் எழுந்து உட்கார்ந்து கவிதாவை பார்த்துக் கொண்டிருக்கிறான். கவிதா எழுந்து பாண்டியனை எதற்காக பார்க்கிறாய் என்று கேட்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னால் பாண்டியனுடன் இனிமேல் ஒரே கட்டிலில் படுத்துக் தூங்க முடியாது என்றும் தனக்கு அது தவறாக படுகிறது என்றும் சொல்லும் கவிதாவிடம், பாண்டியன் தனக்கும் அதுதான் நல்லது என தோன்றுகிறது என்று சொல்கிறான். காயத்ரியின் அறை காலியாக இருப்பதால் அங்கு சென்று படுத்து கொள்வதாக சொல்லி விட்டுச் செல்கிறாள். கவிதா - பாண்டியன் இடையில் காதல் உணர்வு ஏற்பட்ட பிறகு சாதாரண தொடுதல் கூட இருவருக்கும் வேறு ஓர் உணர்வை தருவதால் விலகி இருக்க முயற்சி செய்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே அறையில் படுக்கவேண்டாம் என்று கவிதா புரிந்துக் கொண்டு தனியாகச் செல்வது ஒரு வகையில் நல்லது. அப்படிச் செல்லும்போது இருவருக்கும் உருவாகும் பிரிவு, மீண்டும் துன்பம் தருமானால் அது காதல் என்று இருவரும் புரிந்து கொள்வார்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாமல் இறுதியாக காதலைப் பகிர்ந்து கொள்வார்கள். ராஜேஷுக்கு கவிதா - பாண்டியன் காதல் தெரிந்தது போல் பொற்கொடிக்கும் தெரிந்து ஆரம்பத்திலேயே விலகிவிட்டால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு பொற்கொடி ஆளாக மாட்டாள். அதேபோல் தேவையில்லாத குற்றவுணர்ச்சி கவிதாவுக்கும் பாண்டியனுக்கும் ஏற்படாமல் தடுக்கலாம்.

AKS - 63
AKS - 63

கிஷோர் மது அருந்த புனிதாவை கம்பெனி கொடுக்குமாறு சொல்லி அவளது அறையில் உட்கார்ந்து மது அருந்துகிறான். ஒரு முறை கொஞ்சமாக குடிக்க சொல்லி கிஷோர் புனிதாவைக் கட்டாயப்படுத்துகிறான். அவள் தன்னுடைய இணையான பரத்துடன் மட்டும்தான் குடிப்பேன் என்று உறுதியாகச் சொல்லி விடுகிறாள். முன்பே ஒருமுறை கிஷோர் புனிதாவை அழைத்தபோது பரத்துடன் மட்டும்தான் மது அருந்துவேன் என்று கூறியிருப்பாள். அதற்காகத்தான் பரத்தையும் அழைத்து வரச் சொல்லி மது அருந்தும்போது கிஷோருக்கும் பரத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இப்போது மீண்டும் புனிதாவிடம் கிஷோர் மது அருந்துமாறு வற்புறுத்துகிறான். அதுபோக குடித்துவிட்டு புனிதாவின் அறையிலேயே மயக்கம் போட்டு விழுகிறான்.

பொதுவாக நம் சமூகத்தில் முற்போக்காக இருக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட பிரச்னைகள் அதிகம் ஏற்படும். ஒரு பெண் சிறிது முற்போக்காக பேசினால், அவளது வசதிக்கு ஏற்ப உடை அணிந்தால், மது அருந்தினால் அவளிடம் எந்த உரிமையும் எடுத்துக் கொண்டு உரையாடலாம் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது பொதுப் புத்தி. பல பெண்கள் தங்களின் கரியரில் முன்னேறாமல் போவதற்கும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கின்றது.

AKS - 63
AKS - 63
சிவா சொன்னதை ஏற்று பரத் புனிதாவை புரிந்துகொள்வானா?
பாண்டியன் கவிதாவின் விலகலை எப்படிச் சமாளிக்கப் போகிறான்?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism