Published:Updated:

AKS - 78: லிவ்-இன் உறவு டாக்ஸிக்காக மாறாதா? `பிளாக்மெயில்' திருமணங்கள் எதில் போய் முடிகின்றன?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (08-12-2021) வெளியான 78-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 78: லிவ்-இன் உறவு டாக்ஸிக்காக மாறாதா? `பிளாக்மெயில்' திருமணங்கள் எதில் போய் முடிகின்றன?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (08-12-2021) வெளியான 78-வது எபிசோட் எப்படி இருந்தது?!

புனிதாவிற்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தனது அறைக்கு வரச் சொல்லும் கிஷோர், புனிதா அலுவலக ரீதியாக வெளிநாடு செல்ல வந்த ஆஃபர் கடிதத்தைக் கொடுக்கிறான். அதைக் கொண்டாட தன்னுடன் மது அருந்த சொல்லி கேட்கிறான். புனிதா மறுத்து விடுகிறாள். கிஷோர் குறைந்தபட்சம் தனக்கு கம்பெனி கொடுக்குமாறு சொல்ல புனிதா அருகில் உட்காருகிறாள்.

கிஷோர் புனிதாவிடம் பரத் அவளுக்கு பொருத்தமானவன் இல்லை என்றும் அவளுக்கு ஏற்றாற்போல் ஆளைத் தேர்வு செய்யுமாறும் சொல்கிறான். கிஷோர் புனிதாவிடம் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லி கையை பிடித்து இழுத்து ஐ லவ் யூ சொல்கிறான். அவன் தன்னுடைய காதலுக்காக பரத்தை பற்றி தவறாகக் கூறியதை புனிதா புரிந்து கொள்கிறாள். ஒருவகையில் புனிதா இவ்வளவு சீக்கிரம் புரிந்துகொண்டதும் கூட நல்லதுதான். இல்லையென்றால் பரத் அவளை விட்டு வெகுதூரம் சென்றிருப்பான்.

AKS - 78
AKS - 78

கிஷோர் எமோஷனலாக பேசும்போதும், புனிதாவின் கையை பிடித்து இழுக்கும்போதும் அவளுக்கு வரும் தைரியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டியது. குறிப்பாக வீட்டை விட்டு வெகு தூரம் வெளியூர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம் பெண்களுக்கு தங்களுக்கு ஒரு பிரச்னை வந்தவுடன் துவண்டுவிடாமல் அல்லது பயப்படாமல் தைரியமாக அதை எதிர்கொள்ள பழக வேண்டும். இவ்வளவு நாள்களாக கிஷோர் பேசும்போது அவனது உள்நோக்கம் புரியாத அதே புனிதாதான் கிஷோரின் பேச்சில் சிறிது மாறுதல் என்றதும் தன் எதிர்ப்பைக் காட்டுகிறாள்.

பரத் தனது ஜிம்முக்கு புதிதாக வந்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி சிவாவிடம் கூறுகிறான். அந்தப் பெண் தன்னிடம் நெருங்கி பழகும்போது பரத்திற்கு புனிதாவின் ஞாபகம் வந்தததால் கிளம்பி வந்துவிட்டதாகச் சொல்கிறான். பரத் சிவாவிடம் தன்னால் புனிதாவுக்கு துரோகம் நினைக்க முடியாது என்று சொல்கிறான். இதை பரத்துக்குத் தெரியாமல் புனிதா கேட்டுக் கொண்டிருக்கிறாள். வந்து பரத்தை கட்டிக் கொள்கிறாள். இருவரும் தங்களுடைய கோபத்தை மறந்து ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை பலரும் அது மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் என்பது போலவும் ஒருவர் ஒரே சமயத்தில் பலருடன் உறவில் இருப்பார் என்பது போலவும் புரிந்து கொள்கின்றனர். இந்தியாவில் திருமண உறவில் பல சிக்கல்கள் இருக்கின்றன. திருமண உறவுக்கு என்று பொறுப்புகளும் இருக்கின்றன. ஒருவர் திருமணம் செய்து கொள்ளும்போது இரண்டு குடும்பத்தினரின் கருத்தையும் கேட்க வேண்டி இருக்கிறது. அதுபோக ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் செல்வது, குழந்தை பெற்றுக் கொள்வது, பெற்றோர்களை பார்த்து கொள்வது என்று பல்வேறு விஷயங்கள் இங்கு கட்டாயமாக நடந்தே ஆக வேண்டிய எழுதப்படாத விதியாக இருக்கின்றது. இதில் ஏதாவது ஒன்று தங்களுக்கு ஒத்து வராது என்று நினைப்பவர்கள் அல்லது திருமணத்தை தள்ளிப்போட்டு இன்னும் கொஞ்சம் நன்றாக புரிந்து கொண்டபின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கிறார்கள். புரிந்து கொண்ட பின் திருமணம் செய்ய அல்லது விருப்பம் இல்லை எனும்போது ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி உறவை டாக்ஸிக்காக மாற்றிக் கொள்ளாமல் எளிதாக பிரிந்து விடுவது லிவ்-இன் உறவில் சாத்தியம்.

AKS - 78
AKS - 78

புனிதா கிஷோரை பற்றிய உண்மை தெரிந்தவுடன் நேரடியாக வந்த அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். எந்த உறவாக இருந்தாலும் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டால் அது புரியும்போது தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்பது உறவை பழையபடி சுமூகமாக வைத்துக் கொள்வதுடன் அவரவர் மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

காயத்ரி புனிதாவிற்கு கால் செய்து தனக்கு சுந்தருடன் மறுநாளே திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதாக கூறுகிறாள். தனக்கு தன்னுடைய தந்தையின் உயிர் முக்கியம் என்பதால் திருமணத்துக்கு சம்மதிப்பதாகச் சொல்கிறாள். புனிதா எல்லோரையும் காயத்ரியின் திருமணத்திற்குக் கிளம்ப சொல்கிறாள். அங்கே சிவாவிற்கும் காயத்ரிக்கும் திருமணம் செய்து வைப்பதாக சிவாவிற்கு உறுதி கூறுகிறாள். காயத்ரி சிவாவை திருமணம் செய்வதைவிட சுந்தரை திருமணம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். சுந்தர் எதற்கெடுத்தாலும் காயத்ரியை எமோஷனல் பிளாக்மெயில் செய்து வாழ்க்கை முழுவதும் காயத்ரிக்கு நிம்மதி இல்லாமல் செய்து விடுவான் என்று புனிதா பயப்படுகிறாள்.

எப்படியாவது இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தி காயத்ரியை சிவாவுடன் சேர்த்து வைக்கலாம் என்று புனிதா நம்புகிறாள். காயத்ரியின் அண்ணன் மற்றும் அண்ணியிடம் சிவா மற்றும் காயத்ரிக்கு இடையில் இருக்கும் காதலை பற்றி புனிதா சொல்கிறாள். காயத்ரியின் அண்ணன் திருமணம் சொன்ன தேதியில் சொன்னதைபோல நடக்கும் என்றும் பிரச்னை செய்பவர்களை உயிருடன் விட மாட்டேன் என்றும் எச்சரிக்கை செய்கிறார்.

AKS - 78
AKS - 78

இதுபோன்ற ஒரு சம்பவம் தோழி ஒருத்திக்கு நடந்தது. திருமணம் முடிவானதில் இருந்து 'இப்போது தனக்கு திருமணம் வேண்டாம்' என்கிற எண்ணம் அவள் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஒரு பக்கம் திருமண வேலைகள் நடக்கின்றன. மறுபக்கம் வீட்டை எதிர்த்து திருமணம் வேண்டாம் என்று சொல்ல முடியாத சூழ்நிலை. வீட்டில் காரணம் கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. வேறு காதலும் இல்லை. நிச்சயம் முடிந்த மறுநாள் அவளுக்கு உறுதியாக தனக்கு இந்தத் திருமணம் தற்போது வேண்டாம் என்று புரிந்தது. அதை தனது சகோதரன் மூலம் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னபோது அதை அவர்கள் விளையாட்டாக எடுத்து கடக்க முயற்சி செய்தனர்.

AKS - 78
AKS - 78

அதே சமயம் அவள் திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்து விடுவாளோ என்று பயந்து அவளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள். அவளுக்குக் காதல் இருக்கும் என்றும் நினைத்துக் கொண்டார்கள். யாருக்கும் பிரச்னை வராத வகையில், அதே சமயம் தான் நினைப்பதையும் நடத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லா முயற்சிகளையும் செய்து காத்திருந்த தோழிக்குக் குழப்பங்களுக்கு இடையே திருமணம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அந்தத் திருமணத்தில் இன்று வரையிலும்கூட அவள் ஏதோ ஒரு மாற்றத்தைத் தேடிக் கொண்டிருப்பவளாகவே இருக்கிறாள்.

வேறு காதல், வேலை அல்லது திருமணத்தில் முழுதாக உடன்பாடு இல்லாமல் பிள்ளைகள் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லும்போது பெற்றோர்கள் அதை காதில் வாங்காமல் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பொத்தாம் பொதுவாக பேசி, கட்டாயப்படுத்தி, எமோஷனல் பிளாக்மெயில் செய்து திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள்.

காயத்ரியின் அண்ணன், “அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் நெஞ்சுவலி வந்ததற்கு நீதான் காரணம்” என்று சொல்லி திருமணத்தை நடத்துவது போலதான் பெரும்பாலான வீடுகளில் இன்று திருமணங்கள் எமோஷனல் பிளாக்மெயில் மூலமாக நடக்கின்றன.

AKS - 78
AKS - 78

பரத், சிவா மற்றும் பாண்டியனுடன் தனது கிராமத்திற்கு வரும் புனிதாவை மாடர்ன் உடையில் பார்க்கும் புனிதாவின் அம்மா அவளைத் திட்டிக் கொண்டே இருக்கிறார். ஊரில் எல்லோரும் அவளது உடை மற்றும் தலைமுடியை பார்த்து தவறாக பேசுவார்கள் என்று புலம்புகிறார். புனிதாவின் தந்தை அவளுக்கு சமாதானம் சொல்கிறார்.

புனிதா தனது காதலை எப்படி வீட்டில் சொல்ல போகிறாள்?
காயத்ரி சுந்தர் திருமணம் நடக்குமா?
Nail-biting அடுத்த எபிசோடிற்காக...

காத்திருப்போம்!