Published:Updated:

AKS - 80: பர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பதே ஓர் உணர்வு ரீதியான வன்முறைதான்... கிளைமாக்ஸ் சொல்லும் மெசேஜ்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸின் இறுதி அத்தியாயம் (80-வது எபிசோடு) எப்படி இருந்தது?!

AKS - 80: பர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பதே ஓர் உணர்வு ரீதியான வன்முறைதான்... கிளைமாக்ஸ் சொல்லும் மெசேஜ்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸின் இறுதி அத்தியாயம் (80-வது எபிசோடு) எப்படி இருந்தது?!

Published:Updated:

சுந்தர் மணமேடையில் காத்திருக்க காயத்ரியின் தந்தை தள்ளு நாற்காலியில் அழைத்து வரப்படுகிறார். எல்லோரும் திருமண வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க புனிதா, பரத், சிவா, பாண்டியன் மட்டும் குழப்பமாக நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மணப்பெண்ணான காயத்ரி அழைத்து வரப்படுகிறாள். மணமேடைக்கு வரும்போது காயத்ரி சிவாவை திரும்பி பார்த்துவிட்டு கண் கலங்க வருகிறாள். காயத்ரியின் தந்தை அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். சுந்தரின் அருகில் உட்காரச் செல்லும் காயத்ரியை அவளது தந்தை வேண்டாம் எனச் சொல்கிறார். எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். இந்த திருமணம் நடக்காது என்கிறார். காயத்ரி மற்றும் சிவாவின் காதலைப் பற்றி புனிதா தன்னிடம் பேசியதற்கு பிறகு தான் குழப்பமாக இருந்ததாகவும், தற்போது காயத்ரி மணமேடைக்கு வரும்போது அவள் விருப்பமில்லாமல் பதற்றத்துடன் வந்ததாகவும் அதைக் கவனித்ததிலிருந்து திருமணம் வேண்டாம் என்று தோன்றிவிட்டதாகவும் காயத்ரியின் அப்பா சொல்கிறார்.

AKS - 80
AKS - 80

கிராமத்தில் வளர்ந்து ஊர் மற்றும் உறவுக்காரர்களின் பேச்சுக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவராகவும் இருக்கும் காயத்ரியின் அப்பாவுக்கு இந்தத் திருமணத்தை திடீரென்று நிறுத்துவது மிகப்பெரிய முடிவாக இருந்திருக்கலாம். புனிதா திருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென்று காயத்ரிக்கு வேறு காதல் இருப்பதாகச்க் சொன்னபோது அவருக்கு கொடுத்த வாக்கா, பெண்ணின் வாழ்க்கையா என முடிவெடுக்க முடியாமல் குழப்பமாக இருந்திருக்கிறது. ஆனாலும் அவருக்கு தன் பெண்ணின் மீதுள்ள அன்பினால் அவளது வாழ்க்கை முக்கியமாக இருக்கின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வி, வேலை, காதல், திருமணம் என வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் தேர்வையே பிள்ளைகளின் மீது திணிக்கின்றனர். தங்களின் அனுபவத்தின் மூலம் தாங்கள் எடுக்கும் முடிவுதான் பிள்ளைகளுக்கு நல்லது என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். திருமண விஷயத்தில் கூட தங்கள் பிள்ளைகள் முடிவெடுக்கத் தெரியாத குழந்தைகள் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். அந்த தவற்றை காயத்ரியின் தந்தையும் செய்தார். காயத்ரி தனக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் எனச் சொன்னபோதே காயத்ரியின் தந்தை புரிந்துகொண்டு அவளின் விருப்பத்திற்கு துணை நின்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இறுதி நொடியிலாவது அவருக்கு புரிந்தது என ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.

திருமணத்தை நிறுத்தும் விஷயத்தை கேட்டு சுந்தரின் அக்கா கோபப்படுகிறார். திடீரென்று திருமணத்தை நிறுத்துவது எப்படிச் சரியாகும் என்று கேட்கிறார். காயத்ரிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பது சுந்தருக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் சுந்தர் தற்கொலைக்கு முயன்ற விஷயத்தையும் காயத்ரியின் அப்பா சொல்கிறார். சுந்தரின் தந்தை அவனை கண்டிக்கிறார்.

AKS - 80
AKS - 80
பெரும்பாலும் பெற்றோர்கள் தங்களின் மகன் என்ன தவறு செய்தாலும் மகனுக்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள். பெற்றோரின் இடத்தில் சுந்தரின் அக்கா அவனுக்கு ஆதரவாக பேச, சுந்தரின் அப்பா அது தவறு எனக் கண்டிக்கிறார். பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்கிற கூற்றை ஒரு ஆண்தான் உருவாக்கி இருக்க வேண்டும் என நம்பிக் கொண்டிருந்தாலும் சுந்தரின் அக்காவை போன்றவர்கள் அது சரிதான் என நிரூபிப்பது போல் நடந்து கொள்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுந்தர் வழக்கம்போல தான் போய் செத்துவிடுவதாக பிளாக்மெயில் செய்கிறான். உடனே எல்லோருக்குமே சுந்தரை பற்றி காயத்ரியின் தந்தை கூறியது எவ்வளவு சரி என்று புரிகிறது. சாகப் போகிறேன் என்று சொல்லும் சுந்தரிடம் அவனது அப்பா போய் சாவு என்று நேரடியாகவே சொல்கிறார். சுந்தரை போல பர்ஃபெக்‌ஷனை எதிர்ப்பார்ப்பவர்கள் அதை தன்னைத் தாண்டி மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது உணர்வு ரீதியான வன்முறை என்று காயத்ரியின் தந்தை சொல்வது சுந்தரின் கதாபாத்திரம் போல் நிஜ வாழ்வில் இருப்பவர்களுக்கும் புரிய வைத்திருக்கும்.

AKS - 80
AKS - 80

பாண்டியன், கவிதா, பொற்கொடி மற்றும் ராஜேஷின் காதல் கதைகளை சரியாக முடிக்காமல் அவசரத்தில் முடிவெடுத்தது போல் இருந்தன காட்சிகள். கவிதா ஏற்கெனவே பாண்டியன் அலெக்சாவில் பேசி பதிவு செய்திருந்தை கேட்டுவிட்டு அவனுக்காகக் காத்திருந்தபோது பாண்டியன் பொற்கொடியின் பெயரை டாட்டூவாக போட்டுக் கொண்டு வருகிறான். தனக்கு பொற்கொடிதான் என பாண்டியன் ஒரு வழியாக மனமொத்து முடிவு செய்கிறான். பாண்டியனின் இந்த முடிவு ப்ராக்டிகலானது என எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் கவிதா, ராஜேஷின் விஷயத்தில் கவிதா பாண்டியனைக் காதலிப்பது தெரிந்து ராஜேஷ் விலகுவதுடன் கவிதாவின் பெற்றோர்கள் வரும்போது அவளுடைய காதலனாகக் கூட நடிக்க முடியாது என உறுதியாகக் கூறிவிடுகிறான். அப்படி இருக்கையில் திடீரென்று ராஜேஷின் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்கிற கேள்வி எழும்போதே காதலுக்குக் காரணம் தேவையா என்கிற எதிர் கேள்வியும் உடன் வந்து சமாதானம் செய்கிறது. ஆனாலும் அதை இன்னும் சிறிது தெளிவாகச் சொல்லி இருக்கலாம்.

AKS - 80
AKS - 80
புனிதா பரத் இருவருக்குள்ளும் மீண்டும் பழைய காதல் அழகாய் பூத்திருக்கிறது. புனிதா வெளிநாடு செல்கிறாள். அவளைப் பிரிந்து இருக்க முடியாமல் அவள் வருவதற்காக பரத் காத்திருக்கிறான்.

முற்றும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism