Published:Updated:

டீக்கடை ராஜா... மீ டூ குயிலு... எப்படியிருக்கிறது `வொண்டர்லேண்ட்' அலெக்ஸின் இரட்டை நாடகங்கள்?!

அலெக்ஸ்

சென்னைக்கு அடுத்தபடியாக பாண்டிச்சேரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நாடகங்கள் அரங்கேற இருக்கின்றன. இந்நிலையில் சென்னை ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஹைனா அரங்கில் நடந்த முதல் நாடகம் எப்படி இருந்தது?

Published:Updated:

டீக்கடை ராஜா... மீ டூ குயிலு... எப்படியிருக்கிறது `வொண்டர்லேண்ட்' அலெக்ஸின் இரட்டை நாடகங்கள்?!

சென்னைக்கு அடுத்தபடியாக பாண்டிச்சேரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நாடகங்கள் அரங்கேற இருக்கின்றன. இந்நிலையில் சென்னை ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஹைனா அரங்கில் நடந்த முதல் நாடகம் எப்படி இருந்தது?

அலெக்ஸ்

ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்ஸ் இப்போது நாடக நடிகராகவும் அப்ளாஸ் அள்ளுகிறார். வினோதினி வைத்யநாதன் இயக்கத்தில் அலெக்ஸாண்டர் பாபு தயாரித்து வழங்கும் 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் - நாடகக் கம்பெனியும்' என்கிற இரண்டு நாடகங்கள் சென்னையில் அரங்கேறத்தொடங்கியிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக பாண்டிச்சேரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நாடகங்கள் அரங்கேற இருக்கின்றன. இந்நிலையில் சென்னை ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஹைனா அரங்கில் நடந்த முதல் நாடகம் எப்படி இருந்தது?

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்!

நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பயணிக்கும் இருவர் `ஜானி வாக்கர்' கட்டிங்குகளோடு கலாய்ப்புகளை ஆரம்பிக்கிறார்கள். திடீரென இவர்கள் இருக்கும் பெட்டிக்குள் ஒரு சம்பவம் நடக்க அதனைத் தொடர்ந்து அரங்கேறும் களேபரங்கள்தான் கதை. 1 மணி நேரம் ஒன்லைனர்களால் சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கிறது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நாடகம்.

அலெக்ஸ்
அலெக்ஸ்

ரெயில் பெட்டிக்குள் கட்டிங் நண்பர்களாக அலெக்ஸாண்டர் பாபுவும் பாகியும் நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1 மணி நேரமும் இவர்கள் இருவரும்தான் மேடையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஆனால், 1 நொடிகூட அலுப்புத்தட்டவில்லை. போர்வெல் பிரச்னை தொடங்கி அரசியல் அக்கப்போர்கள் வரை கலாய்த்துத் தள்ளியிருக்கிறார்கள். ஆனால், இந்த நாடகத்தில் அலெக்ஸின் பலமான இசை இல்லை.

நாடக கம்பெனி!

தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தம் அவர்களின் `ஓர் ஒத்திகை' நாடகத்தை ட்ரெண்டுக்கேற்றபடி மாற்றி அரங்கேறியிருக்கிறது `நாடக கம்பெனி.' டீக்கடை ராஜா முதல் மீ டூ, குடியுரிமைச் சட்டம், மாணவர் தாக்குதல், க்ரிட்டிக்ஸ் அக்கப்போர்கள் என சமகால சோகங்களை சட்டையர் செய்து இடைவிடா கைத்தட்டல்களை அள்ளுகிறது நாடக கம்பெனி. அலெக்ஸ், பாகி, விகாஸ், அரவிந்த் சுந்தர், நரேஷ், ஷரவன், வட்சன் மற்றும் இயக்குநர் வினோதினி என எல்லோருமே பர்ஃபாமென்ஸில் பின்னியெடுத்திருக்கிறார்கள். நடிப்பெல்லாம் வேற லெவல். வாழ்த்துகள் நண்பர்களே. முதல் நாடகத்தில் மிஸ்ஸான அலெக்ஸின் இசை இரண்டாவது நாடகத்தில் கொஞ்சம் அன்லிமிடெட் விருந்தாகவே அமைந்தது.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர நாடகங்கள் கொஞ்சம் கூட சலிப்புத்தட்டாமல் ரசிக்கவைத்ததில் வெற்றிபெற்றிருக்கிறது வினோதினி வைத்யநாதன்- அலெக்ஸ் பாபு கூட்டணி. நகைச்சுவையும், நையாண்டியும், அபார நடிப்பும் என நாடகக் கலைக்கு உயிர்கொடுத்திருக்கிறது இந்த இளம் கூட்டணி. ஆனால், சில சென்சிட்டிவ் விஷயங்களை இன்னும் கொஞ்சம் சென்சிட்டிவிட்டியோடு அணுகியிருக்கலாம் என்பதோடு, தேவையில்லாத இரட்டை அர்த்த கேலிகளைத் தவிர்த்திருக்கலாம். அதுவும் ஒரு பெண் இயக்குநரே இப்படிப்பட்ட வசனங்களைச் சேர்த்திருப்பது ரசிக்கும்படியாக இல்லை.

நாடகம் குறித்து நாடக ஆசிரியர் - இயக்குநர் வினோதினி வைத்யநாதனிடம் பேசினோம். ``மனிதர்களைச் சிரிக்க வைப்பதைத் தாண்டி இன்னைக்கு இந்தச் சமூகத்துல எப்படி இருக்கோம் என்பதை இந்த இரண்டு நாடகங்களில் சொல்லியிருக்கோம். எங்களால் முடிஞ்சளவுக்கு நாடகம்குற கண்ணாடி வழியா பார்வையாளர்களுக்குச் சமுதாயத்தைக் காட்டி இதுதான் நம் நிலைன்னு சொல்றோம். இந்த நாடகத்துல நடிச்சிருக்கிற அரவிந்த் சுந்தர், பாகி, நரேஷ், சர்வன், வட்ஸன், விகாஸ்னு இதுல நடிச்சிருந்தவங்க எல்லாரும் சினிமா, விளம்பரம், குறும்படம், வெப்சீரிஸ்னு எல்லா தளங்களிலும் இயங்கிட்டு இருக்காங்க. "

வினோதினி
வினோதினி

``சினிமால நடிக்கிறது ஒருத்தர், அவருக்குக் குரல் வேறொருத்தர்னுலாம் பல விஷயங்கள் இருக்கு. ஆனால் மேடை நாடகத்துல பாட, ஆட எல்லாம் தெரிஞ்சிருக்கணும். சில அடவுகள் தெரிஞ்சிருக்கணும். இதெல்லாம் அடிப்படையான அவசியம். சினிமால கேரக்டர் ரோல் பண்ற நிறைய கலைஞர்கள் நாடகத்துல வாய்ப்பு இருந்தா சொல்லுங்கனு கேட்பாங்க. 'மூணு மாதத்துக்குத் தொடர்ந்து ஆறு மணிநேரம் ரிகர்சலுக்கு வரணும். வெறும் 1000 ரூபாய் சம்பளத்துக்கு வருவீங்களா...? வந்தா நிச்சயம் நடிக்கலாம்'னு சொல்வேன். ஏன்னா, நாடகப் பயிற்சி குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஆறு மணிநேரம் நடக்கும். சொற்பமான சம்பளத்துக்குத்தான் கலைஞர்கள் நடிக்குறாங்க. அலெக்ஸ் உட்பட.

நாங்க இதுவரைக்கும் போட்டிருந்த நாடகங்களின் ஷோக்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளா இருந்தும் தயாரிப்பாளருக்கு நஷ்டமாச்சு. ஏன்னா, டிக்கெட் விற்பனை மட்டுமே எங்களுக்கு வருமானத்தைத் தராது. கலைஞர்களுக்கான சம்பளமே இதுல முடிஞ்சிரும். ஆனால், இப்போ `அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்' ரசிகர்களை இந்த மாதிரியான நல்ல விஷயத்துக்குக் கொண்டு வரணும்னு அலெக்ஸ் யோசிச்சு நாடகத் தயாரிப்புல இறங்கியிருக்கார். அலெக்ஸின் அன்பா ஆர்ட்ஸுக்கு நன்றி. நல்லது நடக்கும்'' என்கிறார் வினோதினி வைத்யநாதன்.

வொண்டர்கள் தொடரட்டும்!