Published:Updated:

ஆல்யா - சஞ்சீவ் கல்யாணமாகி, அம்மா ஆகப் போறாங்க... ஆனாலும்?!

ஆல்யா மானசா -  சஞ்சீவ்
News
ஆல்யா மானசா - சஞ்சீவ்

வேறு வழியில்லாமல், நிச்சயதார்த்தத்தைப் போலவே, நெருங்கிய சிலர் மட்டும் கலந்துகொள்ள, திருமணமும் அவசரத் திருமணமாகவே நடந்து முடிந்தது.

’சின்னய்யா – செம்பா’ இரண்டு பேரையும் எப்பதான் சந்தோஷமாக் குடும்பம் நடத்த விடுவாங்க?' - 2019-ன் தொடக்கத்தில் சீரியல் ரசிகர்களிடையே இருந்த மிகப்பெரிய ஏக்கம் இது. அந்தளவுக்கு, `ராஜா ராணி' தொடர் மக்களிடம் ரீச் ஆகியிருந்தது.

சஞ்சீவ் - ஆல்யா
சஞ்சீவ் - ஆல்யா

தொடரின் ஹீரோயின் ஆல்யா மானசா, ஹீரோ சஞ்சீவ் இடையே காதல் என ஆரம்பத்தில் தகவல்கள் றெக்கை விரிக்கத் தொடங்கிய போது யாரும் அதை நம்பவில்லை. ‘மானாட மயிலாட’ வில் உடன் ஆடிய மானஸ்தானே ஆல்யாவின் லவ்வர்?’ எனக் கேட்டார்கள்.

ஆனால் என்ன நடந்ததோ, எல்லாமே மாறியது. மானஸ் – ஆல்யா காதல் முறிந்து, ஒரு நல்ல நாள் பார்த்து சஞ்சீவைக் காதலிப்பதாகச் சொன்னார் ஆல்யா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஏற்கெனவே சிறப்பாகப் போய்க்கொண்டிருந்த சீரியல் இவர்கள் நிஜக் காதலர்களானதும் இன்னும் வேகமெடுத்தது. ’ஸ்பெஷல் ஷூட்டிங்’ என சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு எல்லாம் பறந்து படம்பிடித்தார்கள்.

‘அப்புறமென்னய்யா, அவங்க நிஜ லைஃப்லயே சேரப்போறாங்க, அதனால சீரீயல்லயும் நல்லபடியாதான் முடிச்சு வைப்பாங்க’ என ரசிகர்கள் நம்பத் தொடங்க, ’போதும், இத்தோட நிறுத்தி சுபம் போட்டுடலாம்’ என்கிற முடிவுக்கு வந்தது சேனல்.

ராஜா ராணி' சஞ்சீவ் - ஆல்யா மானஸா
ராஜா ராணி' சஞ்சீவ் - ஆல்யா மானஸா

சண்டை பிடிச்சிட்டு இருந்தவங்களை ‘சமாதானம் ஆக்கிடலாம்ப்பா’ என கதையை நகர்த்தி, ஒருவழியாக க்ளைமேக்ஸ் ஷூட்டிங் நாளும் வந்தது. அன்று ஒட்டுமொத்த யூனிட்டும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டு பெரும் சோகத்தில் மூழ்கியது.

ஃபேர்வெல் முடிந்து எல்லாரும் பிரியாவிடை கொடுத்துப் பிரிய, ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சீரியல் முடிவடைந்தது. ஆனால் அடுத்து எக்கச்சக்க ட்விஸ்டுகள் காத்திருந்தன, ஆல்யா – சஞ்சீவ் நிஜ வாழ்வில்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆல்யா வீட்டில் சஞ்சீவுடனான காதலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆல்யாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்கத் தொடங்கினார்கள். விளைவு, சேனலின் விருது விழாவில் வைத்து அவசர அவசரமாக நடைபெற்றது, இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி. ஆல்யா வீட்டிலிருந்து ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை.

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகி விடுமென நம்பியது இந்த ஜோடி. இரு தரப்புக்கும் பொதுவான சிலர் பேசிப் பார்த்தார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

`ராஜா ராணி' சஞ்சீவ்
`ராஜா ராணி' சஞ்சீவ்

வேறு வழியில்லாமல், நிச்சயதார்த்தத்தைப் போலவே, நெருங்கிய சிலர் மட்டும் கலந்துகொள்ள, திருமணமும் அவசரத் திருமணமாகவே நடந்து முடிந்தது.

இதனிடையில் ‘ராஜா ராணி’க்குப் பிறகு மீண்டும் இதே ஜோடி இன்னொரு சீரியலிலும் நடிப்பார்கள்’ என்கிற பேச்சுகள் கிளம்பின. ஆல்யாவும் தன் வாயாலேயே இதைச் சொல்லியிருந்தார். ஆனால் ஏனோ அது நடக்கவில்லை. சஞ்சீவ் மட்டும் `காற்றின் மொழி’ தொடரில் கமிட் ஆனார்.

‘ஆல்யா இல்லையா’ எனக் கேட்ட சீரியல் ரசிகர்களுக்கு ஆல்யா தரப்பிலிருந்து அந்த சந்தோஷச் செய்தி மட்டும் வந்தது, ’யெஸ்,, நான் அம்மா ஆகப் போறேன்’ என்றார் அவர்.

ஆல்யா கர்ப்பமடைந்தது குறித்து அறிவித்த போது, சஞ்சீவிடம் பேசியிருந்தேன். ‘ நடந்தது நடந்திடுச்சு. எங்களை ஏத்துக்கிடணும்னு ஆல்யா தரப்புல பல தடவை பேசிப் பார்த்துட்டேன். ஆனா அவங்க பிடிவாதமா இருக்காங்க. இந்த சந்தோஷமான செய்தியைக் கூட முதன்முதலா தன்னுடைய அம்மா அப்பாகிட்டத்தான் சொல்ல ஆசைப்பட்டாங்க ஆல்யா. என்னுடைய மாமனார் மட்டும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கார். ஆனா மாமியார் அதே கோபத்துலதான் இருக்காங்க. குழந்தை வர்றதுக்குள் அவங்க கோபம் சரியாகிடும்னு நாங்க நம்பறோம். குழந்தையை முதல்ல தன் அம்மா கையிலதான் கொடுக்கணும்னு ஆல்யா ஆசைப்படறாங்க. அது நடக்கும்னு நாங்க நம்பறோம் ப்ரோ’ எனச் சொல்லியிருந்தார்.

'செம்பா' ஆல்யா மானசா
'செம்பா' ஆல்யா மானசா

பையனோ பொண்ணோ அழகான ஓர் உறவு 2020 ல் இவர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. அந்த நேரம் ஆல்யாவின் ஆசையும் நிறைவேறட்டும் என வாழ்த்துவோமே!