Published:Updated:

“இன்னும் காதலை வீட்டில் சொல்லலை!”

அமல்ஜித்,  பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
அமல்ஜித், பவித்ரா

- டிவி - ரியல் ஜோடி

“இன்னும் காதலை வீட்டில் சொல்லலை!”

- டிவி - ரியல் ஜோடி

Published:Updated:
அமல்ஜித்,  பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
அமல்ஜித், பவித்ரா

`கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `அம்மன்.' இதன் ஹீரோ அமல்ஜித்தும், ஹீரோயின் பவித்ராவும் நிஜத்தில் காதலர்கள். பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா கேரள மருமகள் ஆகவிருக்கிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவர்களைத் தேநீர் இடைவேளையில் சந்தித்தோம்.

'``இதுவரை நாங்க காதலிக்கிறோம்னு சொல்லவே இல்லையே... இந்த இன்டர்வியூ பார்த்துதான் எங்க காதலைப் பற்றி ரெண்டு பேர் வீட்டிலும் தெரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்'' என்ற பவித்ரா, தன்னுடைய பர்சனல் விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

``எனக்கு நடிக்கணும்ங்கிற ஆசையெல்லாம் இல்லை. ஃபைனல் இயர் படிச்சிட்டிருக்கும்போது எங்க காலேஜுக்குப் பக்கத்துல ஒரு சீரியல் ஆடிஷன் நடந்தது. ஃப்ரெண்ட்ஸ் என்னை அதுல கலந்துக்கச் சொன்னாங்க. அவங்களுக்காகத்தான் போனேன். ஆனா, சரியா டயலாக் பேசத் தெரியாம சொதப்பி வச்சிட்டுதான் வந்தேன். ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் 'செலக்ட் ஆக மாட்டேன்'னு சொல்லியிருந்தேன். ஒருநாள் திடீர்னு ஒரு கால் வந்துச்சு. அதுல 'நீங்க செலக்ட் ஆகிட்டீங்க'ன்னு சொன்னாங்க. என்னால நம்பவே முடியல.

என் ஃப்ரெண்ட்ஸுக்காக அந்தக் கன்னட சீரியலில் நடிச்சேன். அதுல நெகட்டிவ் லீடு ரோல் பண்ணிட்டிருந்தேன். அந்த சீரியல் மூலமா தமிழில் `அம்மன்' சீரியல் ஆடிஷனுக்குக் கூப்டாங்க. அம்மன் கேரக்டரில் நடிக்கணும்னு சொன்னதால எனக்கும் அந்த கான்செப்ட் பிடிச்சிருந்துச்சுன்னு ஆடிஷனில் கலந்துகிட்டேன். பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் எல்லாம் ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. இந்த முறையும் செலக்ட் ஆக மாட்டேன்னுதான் நினைச்சேன். ஆனால், அந்தக் கேரக்டருக்கு நான் செட்டாவேன்னு டீம்ல எல்லாருக்கும் தோணுனதால என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. இப்படித்தான் நான் தமிழ் சீரியலுக்குள்ளே வந்தேன்'' என்றவரிடம் அமல்ஜித்தைக் காதலிக்க ஆரம்பித்த தருணம் குறித்துக் கேட்கவும், வெட்கப் புன்னகையோடு பேச ஆரம்பித்தார்.

“இன்னும் காதலை வீட்டில் சொல்லலை!”

``அமல்ஜித் செட்ல எப்பவும் அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பார். யார்கிட்டேயும் தேவையில்லாமப் பேச மாட்டார். அதனாலேயே அவரை எனக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. நட்பாகத்தான் பேச ஆரம்பிச்சேன். அந்த நட்பு அடுத்த கட்டத்துக்குப் போகும்னு நாங்களே எதிர்பார்க்கலை. இப்போதைக்கு ரெண்டு பேரும் எங்க காதலை வீட்ல சொல்லலை. தெரியும்போது எப்படி எடுத்துப்பாங்களோ'' என்றதும் அமல்ஜித் தொடர்ந்தார்.

``பவித்ரா எனக்கு இங்க ஃபர்ஸ்ட் கிடைச்ச பெஸ்ட் ஃப்ரெண்ட். என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. மத்தவங்களுக்கு உதவற குணம் அதிகம். எனக்கே பர்சனலா நிறைய முறை ஹெல்ப் பண்ணியிருக்காங்க. அந்த குணத்தைப் பார்த்து, `இவங்களே நம்ம லைஃப் பார்ட்னரா இருந்தா நல்லா இருக்குமே'ன்னு தோணுச்சு. அவங்ககிட்ட என் காதலை வெளிப்படுத்தின உடனேயே அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க. வீட்ல சொல்லி பர்மிஷன் வாங்கணும். சீக்கிரமே நல்ல சேதி சொல்றோம் என்றவர், தான் சீரியலுக்குள் நுழைந்த கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

``என் சொந்த ஊர் கேரளா. மலையாள சீரியல்களில் நடிச்சிட்டிருந்தப்போ 2017-ல் தமிழ் சீரியலுக்காக ஆடிஷனில் கலந்துகிட்டேன். அந்தச் சமயம் செலக்ட் ஆகலை. ரொம்ப வருஷம் கழிச்சு அம்மன் சீரியலுக்கான ஆடிஷனில் கலந்துக்கிட்டு செலக்ட் ஆனேன். நான் பயங்கர விஜய் ஃபேன். தமிழ் சீரியலில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசைப்பட்டுட்டு இருந்தேன். இந்த சீரியல் மூலமா அந்த ஆசை நிறைவேறிடுச்சு. எனக்கு சினிமாவில் நடிக்கணுங்கிறதுதான் மிகப்பெரிய கனவு. அது சீக்கிரம் நிறைவேறும்னு நம்புறேன்'' என்றவாறு பவித்ராவின் கரம் பற்றினார் அமல்ஜித்.