Published:Updated:

"என் லவ் ஏன் உடைஞ்சதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!" - ரிலேஷன்ஷிப் பற்றி டிடி என்ன சொல்கிறார்?!

டிடி பேட்டி

டிவியில் 20 வருடங்களைக் கடந்தும் செம ஹிட் தொகுப்பாளினியாக லைக்ஸ் அள்ளுகிறார் டிடி. கே.பாலச்சந்தரின் சீரியலில் நடித்த அனுபவத்தில் ஆரம்பித்து தொகுப்பாளினி அனுபவம் உள்ளிட்ட பல கேள்விகளை அவரிடம் கேட்டேன்.  

"என் லவ் ஏன் உடைஞ்சதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!" - ரிலேஷன்ஷிப் பற்றி டிடி என்ன சொல்கிறார்?!

டிவியில் 20 வருடங்களைக் கடந்தும் செம ஹிட் தொகுப்பாளினியாக லைக்ஸ் அள்ளுகிறார் டிடி. கே.பாலச்சந்தரின் சீரியலில் நடித்த அனுபவத்தில் ஆரம்பித்து தொகுப்பாளினி அனுபவம் உள்ளிட்ட பல கேள்விகளை அவரிடம் கேட்டேன்.  

Published:Updated:
டிடி பேட்டி

கே.பாலச்சந்தரின் சீரியலில் நடித்த அனுபவம்?

" 'றெக்கை கட்டிய மனசு' சீரியல்ல என் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம், அந்தக் கதாபாத்திரம் அப்போ மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. ஒரு பொண்ணோட வயித்துல குழந்தை உண்டாகுது. வீட்டுல அந்தப் பொண்ணோட அப்பா அம்மா சப்போர்ட்டா இருக்காங்க. அந்தப் பொண்ணுக்கு அந்தக் குழந்தையோட உறவு மட்டும்தான் தேவைப்படுது. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணுக்கு வேற ஒரு நபர் மேல லவ் வருதுனு கே.பி சார் அவ்வளவு ஆழமா அதோட கதையை எழுதியிருப்பார். அந்த சமயம் என்னை வெளியில பார்க்கிறவங்க, `என்னம்மா குழந்தை எப்படி இருக்கு'னு கேட்பாங்க. `இங்க பாருங்க என் வயித்துல ஒண்ணும் இல்லை, நல்லாதான் இருக்கேன்'னு விளையாட்டா சொல்வேன். அப்போ எல்லா சீரியலுக்கும் லைவ் ரெக்கார்டிங்தான். ஸோ, டயலாக் பக்கம் பக்கமா இருந்தாலும் மனப்பாடம் பண்ணிடுவேன். அங்க ஆரம்பிச்சது ஆங்கரிங் வரைக்கும் உதவியா இருக்கு.''

டிடி
டிடி

இப்போ இருக்கிற யூ-டியூப் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?

"அப்ப ரொம்ப குறுகிய வட்டத்துலதான் இந்த வெளி செயல்பட்டுட்டிருந்தது. இப்ப ரொம்பவே பெருசா வளர்ந்துடுச்சு. எந்த வேலையா இருந்தாலும் நிலைச்சிருக்குறதுதான் முக்கியம். யூ-டியூப்ல வர்ற படைப்புகள் நிச்சயம் வரவேற்கக்கூடிய விஷயம். அதுல இன்னும் அடுத்ததா என்ன பண்ணணும்னுதான் பார்க்கணுமே தவிர, `அந்தக் காலத்துல நாங்க எல்லாம்...'னு பேசுறது எனக்கு எப்பவுமே பிடிக்காது. இன்னும் 10 பத்து வருஷம் கழிச்சு என்ன நடக்கப் போகுதுனு நமக்குத் தெரியாது. 80, 90-கள்ல இருந்தவங்களோட அனுபவம் வேற, இந்த மில்லியனைச் சேர்ந்தவங்களோட அனுபவம் வேற. அதை நாம புரிஞ்சிக்கணும், அவங்களோட சேர்ந்து நாமும் பயணிக்கணும்."

`காபி வித் டிடி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம்?

"அந்த ஷோ எனக்குப் பெரிய ப்ரஷரோடதான் ஆரம்பிச்சது. எனக்கு முன்னாடி பண்ண ரெண்டு பேரும் சினிமா துறையைச் சேர்ந்தவங்க. என் காதுல, `நீ இண்டஸ்ட்ரியில இல்லை, உனக்கு இது செட் ஆகாது'னு மட்டும்தான் கேட்டுட்டே இருந்தது. அதுக்கப்புறம் பண்ணிப் பாத்துடலாம்னு சின்னதா நம்பிக்கை வந்தது. சில ஃபார்முலாக்களைப் பயன்படுத்தி ஷோல பண்ணேன். சூப்பரா வொர்க்அவுட் ஆச்சு. அப்புறம் அவங்களே இந்த நிகழ்ச்சியை விடறதா இல்லை. அதிகபட்சமா 10 எபிசோடுகள்தான் பண்ணணும். ஆனா, முதல் சீசன்ல 42 எபிசோடுகளும், ரெண்டாவது சீசன்ல 36 எபிசோடுகளும் பண்ணோம். ரொம்ப மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான நாள்கள் அவை."

டிடி
டிடி

திடீர்னு உங்களை திவ்யதர்ஷினினு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பீங்களா?

(சிரிக்கிறார்) "எனக்குத் தெரிஞ்சு பார்க்க மாட்டேன்னுதான் நினைக்கிறேன். அந்தப் பெயர் எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே வந்துடுச்சு. ஸ்லாம்புக்ல எழுதும்போது டிடினுதான் எழுதுவேன். டிவி நடிகர் தீபக்கை எனக்குச் சின்ன வயசுல இருந்தே தெரியும். அப்ப இருந்தே என்னை டிடினுதான் அவன் கூப்பிடுவான். ஜோடில அவன்கூட சேர்ந்து ஆங்கரிங் பண்ணும்போது டிடினு கூப்பிட்டு செட்ல இருக்கிற எல்லாருக்கும் அது பழகிடுச்சு. அப்படியே வந்ததுதான் இந்த டிடி."

நீங்க ரஜினியோட தீவிர ரசிகையாமே?

"ரஜினி சாரை வெளியில எங்கேயாவது பார்த்தா எனக்குப் பேச்சு வராது. ஒரு ஓரமாப் போய் நின்னு அழுதுட்டு இருப்பேன். வேலைனு வந்துட்டா மட்டும் பெரிய மைண்ட் செட் கொண்டு வந்து அந்த வேலையைப் பார்ப்பேன். சின்ன வயசுல `அன்னை ஓர் ஆலயம்' படத்தை டிவியில பார்த்துட்டு தேம்பித் தேம்பி அழுததா அம்மா சொல்வாங்க. ஸோ, அந்த ஒரு கனெக்ட்னால என்னவோ... அவரைப் பார்த்தாலே எமோஷனல் ஆகி அழுகை வந்துடும். சில சமயங்கள்ல பார்க்காமத் தவிர்த்த நாள்களும் உண்டு."

டிடி
டிடி

ஜேம்ஸ் வசந்தன், பெப்சி உமா, கோபிநாத் போன்றவர்கள் லிஸ்ட்டில் நீங்க. இந்த வரிசையில் அடுத்த ஜெனரேஷன் எப்படி இருக்கிறதா உணர்றீங்க?

"நிறைய பேர், `உங்களைப் பார்த்துத்தான் மேம் ஆங்கரிங் பண்ணிட்டிருக்கேன்'னு சொல்லும்போது ரொம்ப நெகிழ்ச்சியாகிடும். இந்த ஆங்கரிங்கிற ப்ளாட்பார்ம்ல நாமளும் ஏதோ ஒரு செங்கல் எடுத்து வெச்சு உதவியிருக்கோம்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இதைவிட ஒரு படி தாண்டி `என் பொண்ணு உங்களை மாதிரி பெரிய ஆங்கரா வரணும்'னு சொல்ற சிலரோட வார்த்தைகள்லாம் எனக்கு விலை மதிக்க முடியாதது. பையன், பொண்ணுனு இல்லாம எல்லாரும் அவங்க மனசுக்குப் பிடிச்ச வேலையைப் பார்க்கணும். யூ-டியூப்ல சிலர் வேற லெவல்ல ஆங்கரும், பர்ஃபார்மும் பண்றாங்க. அவங்களைப் பார்த்தும் நான் நிறைய அப்டேட் பண்ணிக்குறேன்."

'ஃப்ரோஸன்' படத்துக்கு டப்பிங் பேசின அனுபவம் எப்படி இருந்தது?

"எல்லா பொண்ணுங்களோட ஃபேரி டேலும் டிஸ்னில வர்ற இளவரசிதான். ஸோ, அப்படியான ஆன்னாவுக்குக் டப்பிங் பேசினது ரொம்ப உற்சாகமா இருந்தது. காதல், வீரம்னு அந்தக் கேரக்டருக்காகப் பேசினது செம எனர்ஜி. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அதுக்கப்புறம் லைனைப் பிடிச்சு பண்ண ஆரம்பிச்சதும் சுலபமாகிடுச்சு. அந்த கேரக்டரோட அக்கா வாய்ஸை ஸ்ருதி ஹாசன் பேசியிருந்தாங்க. என்னுடைய டப்பிங்கைக் கேட்டுட்டு, `ரொம்ப நல்லா பண்ணியிருக்க. எனக்கு நீ பேசினதைக் கேட்டுட்டு டப்பிங் பேசுறதுக்கு ஈஸியா இருந்தது'னு சொன்னாங்க. ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது."

டிடி
டிடி

உங்களோட ரிலேஷன்ஷிப் பத்தி?

"ரிலேஷன்ஷிப்ங்கிறது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். சூழ்நிலை காரணமா லவ் உடையவும் செய்யும். சில பேர் நம்மளை சப்போர்ட் பண்ணுவாங்க, சிலர், They will let you down. என் லவ் ஏன் உடைஞ்சதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்... அதுமட்டுமல்லாம...''

- முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "அன்பு என்பது பார்ட்னர்ஷிப் கேம்!" - டிடி சிறப்பு நேர்காணல்.. க்ளிக் செய்க http://bit.ly/32OkHVN

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9