சமூகத்தின் வேர்களான இலக்கியத்துக்கும் சமூகப்பணிக்கும் ஊடகத்துக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது ஆனந்த விகடன். சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த கவிதைத் தொகுப்பு என இலக்கியத்துறையில் சாதித்தவர்களின் மீதும், தன்னலம் விடுத்து மக்களுக்கான அறச் செயல்பாடுகளில் ஈடுபடும் நிஜ நாயகர்களின் மீதும் வெளிச்சம் பாய்ச்சி மேடையேற்றி வருகிறது ஆனந்த விகடன். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. அதில் பெற்றவர்களின் பட்டியல் இதோ...
நம் நம்பிக்கை நாயகர்கள் `ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்’ வாங்கிய விழா நாளை பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் 6 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

விருது பெற்றவர்களின் முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்...