Published:Updated:

``23 வயசுதாங்க ஆகுது. அம்மா நல்ல சாப்பாடு கொடுத்து, கொஞ்சம் குண்டா வளர்த்திருக்காங்க!'' - ஜாக்குலின்

ஜாக்குலின்
ஜாக்குலின்

``அம்மாவோட பாசம், அரவணைப்பு இருந்தாலும், அப்பாவின் இழப்பு எனக்குப் பெருசு. ஸ்கூல் படிக்கிற பெண் பஸ்ஸுக்காக நிற்கிறப்போ யாராவது சீண்டுவாங்களோனு பயந்துகிட்டு நிற்கிறா பாருங்க.. அவள் இடத்திலிருந்து பார்த்தாதான், அந்த வலி தெரியும். எனக்கு அந்தப் பயம் இப்போவரை இருக்கு" - ஜாக்குலின்.

விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர், ஜாக்குலின். கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வில் இருப்பவர், இப்போது சினிமாவில் முழுவீச்சில் களமிறங்கத் தயாராக இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

``உங்களுடைய மிகப்பெரிய பலம் என்ன?"

''எங்கே போனாலும் தைரியமா பேசிட்டு வந்திடுவேன். அதேபோல, 'என் பொண்ணு எந்தத் தவறும் செய்யமாட்டாள்'னு என்னை முழுமையாக நம்பும் ஒரே மனுஷி, எங்க அம்மாதான். அவங்கதான் என் மிகப்பெரிய பலம். நான் ப்ளஸ் டூ-வுல நல்ல மதிப்பெண் எடுத்தேன். லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்தேன். 'தயவுசெய்து டிகிரி முடிச்சுட்டு வேலைக்குப் போய், நாலு காசு சம்பாதிச்சா போதும்'னுதான் சொந்தங்கள் சொல்லுச்சு. எங்க அம்மாதான் நிதானமா எனக்குப் பிடிச்சதை செய்ய வெச்சாங்க. இப்போ, ஓரளவுக்கு என் வாழ்க்கையைப் பார்த்துக்க முடியுது. எங்களை ஏளனமா பார்த்த சொந்தங்கள் பலரும், அவங்க குழந்தைக்கு என்னை உதாரணமாகச் சொல்லி, வளர்க்குறாங்க."

''சோஷியல் மீடியாவின் வளர்ச்சியை நீங்க எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?''

''ஒரு படத்துக்காக ஹீரோயின் கவர்ச்சியான உடையைப் போட்டா, அது அவங்க வேலை. ஆனா, நாம அப்படி இல்லை. இன்றைக்குத் தினமும் எவ்வளவு குற்றங்களைப் பார்க்கிறோம். அதற்கான முதல் புள்ளி, இதுபோன்ற இடத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஒரு செல்போனில் உங்கள் அந்தரங்க வீடியோவை, படத்தைப் பார்க்க முடியும் என்பது எவ்வளவு அருவெறுக்கத்தக்கது. நான் சுடிதார் போட்டதுக்கே 'இவ்வளவு அசிங்கமா டிரெஸ் பண்ற'ன்னு கேட்குறாங்க. பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் இப்போல்லாம் அப்படித்தான் உடையணிந்து வீடியோ பண்றாங்க. முகத்தைச் சுளிக்க வைக்கிற மாதிரியான விஷயங்களைப் பண்ணாமல் இருங்களேன்."

ஜாக்குலின்
ஜாக்குலின்

''உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு?''

''அம்மா செஞ்சு கொடுக்கிற மீன் குழம்பு பிடிக்கும். ஊறுகாய், பச்சடி, ரசம், முட்டை மாதிரியான காம்பினேஷன் இருந்தா போதும், உயிர் வாழ்ந்திடுவேன்."

''ஒருநாள் உங்களைப் பேசாமல் இருக்கச் சொன்னால்?''

''அது மட்டும் என்னால முடியவே முடியாதே! கோமா ஸ்டேஜுக்குப் போனாக்கூட நான் பேசிட்டுதான் இருப்பேன்.''

''என் தலைவன் செல்வராகவன் என்ன படம் எடுத்தாலும் பார்ப்பேன். சமீபத்தில் வெளியான 'என்.ஜி.கே' படமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது."
- ஜாக்குலின்

''உங்களுக்குப் பிடித்த நடிகர், இயக்குநர்?''

``தனுஷ். என் ஆல்டைம் ஃபேவரைட். 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தைப் பார்த்த பிறகுதான், `துள்ளுவதோ இளமை' பார்த்தேன். அதிலிருந்து தனுஷின் தீவிர ரசிகை ஆகிட்டேன். `சுள்ளான்' படத்தைப் பலமுறை பார்த்திருக்கேன். தனுஷ் சார் `கலக்கப்போவது யாரு' ஆள்களுக்கு போன் பண்ணிப் பேசியிருக்கார். அப்போ, எனக்கும் எப்போவாவது போன் பண்ணிப் பேசமாட்டாரானு நினைச்சிருக்கேன். 'மாரி 2' படத்துல நிஷாக்கா நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, ஒரு முறையாவது தனுஷைச் சந்திக்க வாய்ப்பு வாங்கிக் கொடுங்கக்கானு கேட்டிருக்கேன். 'சரி வா'னு சொன்னாங்க. அடுத்த நாள் ஷூட்டிங் முடியப்போகுதுன்னு சொல்லிட்டாங்க. நிஷாக்கா, நீங்க என்னை ஏமாத்திட்டீங்க!''

''சமீபத்தில் பார்த்து வியந்த படம்?''

'' 'சூப்பர் டீலக்ஸ்' ரொம்பப் பிடிச்சிருந்தது. சினிமாவுடைய பேட்டர்னையே உடைத்த கதைன்னு சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எந்த சினிமாவாக இருந்தாலும், இரண்டரை மணி நேரம் சலிப்பு தட்டாமல் பார்க்க வைத்துவிட்டால், அது வெற்றிப் படம்தான். அந்த வரிசையில் 'தடம்' படமும் பிடிச்சிருந்தது. மத்தபடி, என் தலைவன் செல்வராகவன் என்ன படம் எடுத்தாலும் பார்ப்பேன். சமீபத்தில் வெளியான 'என்.ஜி.கே' படமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.''

ஜாக்குலின்
ஜாக்குலின்

''முதல் விருது, பாராட்டு ஞாபகம் இருக்கா?''

''என் முதல் விருது விகடன் தந்ததுதான். முதல் காதல், முதல் பாசம், முதல் ஃப்ரண்ட்ஷிப் மாதிரி முதல் விருதும் எப்போதுமே ஸ்பெஷல். என்னை நம்பி, 'இந்தப் பொண்ணு சாதிப்பாள்'னு விகடன் கொடுத்த விருது எப்போதும் எனக்குப் பொக்கிஷம்."

''சினிமாவில் எந்த கேரக்டரில் நடிக்க ஆசை?''

''பொதுவாகவே நான் எவ்வளவு திட்டு வாங்குனாலும், கலாய் வாங்கினாலும் அமைதியா இருப்பேன். ஆனா, சீரியஸான கேரக்டரில் நடிக்கணும்னு ஆசையா இருக்கு."

Vikatan

''சினிமாவில் உங்க இன்ஸ்பிரேஷன்?''

''நான் டிவி-தான் அதிகம் பார்த்திருக்கேன். 9-ஆம் வகுப்பு படிக்கும்போது, இரவு 3 மணி வரைக்கும் விஜய் டிவி பார்ப்பேன். அப்போ, சிவகார்த்திகேயனை ரொம்பப் பிடிக்கும். டிடி அக்காவும் என் ஃபேவரைட். அர்ச்சனா அக்காவும் பிடிக்கும். இவங்க எல்லோரையும் பார்க்கும்போது, நாமும் ஒருநாள் விஜே ஆகணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். இப்போ விஜே ஆகிட்டோம்ல!''

Vikatan

''உங்க உண்மையான வயசுதான் என்ன?''

''எனக்கு இப்போது 23 வயசுதான் ஆகுது. 1996-ல் பிறந்தேன். எங்க அம்மா எனக்கு நல்ல சாப்பாடு கொடுத்து, கொஞ்சம் குண்டா வளர்த்திருக்காங்க; அவ்வளவுதான்.'' எனச் சிரிக்கிறார், ஜாக்குலின்

அடுத்த கட்டுரைக்கு