Published:Updated:

கார்த்திக்கிற்குப் பதிலாக... `செம்பருத்தி’ சீரியலின் புதிய ஹீரோவானார் யூடியூப் விஜே!

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் ஹிட் சீரியலில் இருந்து திடீரென விலகியதற்கான காரணம் குறித்து கார்த்திக் இதுவரை எதுவும் பேசவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து ஹீரோ கார்த்திக் வெளியேறியதை இரு தினங்களுக்கு முன் முறைப்படி அறிவித்தது சேனல்.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் ஹிட் சீரியலில் இருந்து திடீரென விலகியதற்கான காரணம் குறித்து கார்த்திக் இதுவரை எதுவும் பேசவில்லை.

கார்த்திக் சொந்தக் காரணங்களுக்காகவே வெளியேறினார் எனச் சிலரும், சீரியலில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் மனம் வெதும்பி அதிருப்தியில் வெளியேறினார் எனச் சிலரும் சொல்கிறார்கள்.

சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் கார்த்திக்கும் பிரச்னை உருவானதாகவும் அந்த நடிகையே சேனலில் காய் நகர்த்தி கார்த்திக்கை மாற்ற வைத்தார் என்கிற பேச்சுகளையும் கேட்க முடிகிறது.

கார்த்திக் - செம்பருத்தி
கார்த்திக் - செம்பருத்தி

தொடர்ந்து இரண்டு வாரங்களாக கார்த்திக் இல்லாத சீன்களே ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

நேற்று (15/12/20) முதல் கார்த்திக்கிற்குப் பதில் புதிய ஹீரோவாக யூடியூப் சேனல் ஒன்றில் நேர்காணல்கள் செய்து கொண்டிருந்த அக்னி வந்திருக்கிறார்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ள அக்னி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரையும் யூடியூப் சேனலுக்காகப் பேட்டிகள் எடுத்துள்ளார்.

தாடியுடன் ஓரளவு கார்த்திக்கின் உருவ அமைப்பிலேயே இருந்ததால், சேனல் இவரைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு