கட்டுரைகள்
Published:Updated:

“துணி துவைக்க கத்துக்கிட்டேன்!”

நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திரா

படங்கள்: கிரண் சா

படபடப் பேச்சும் விரிந்த கண்களும் குவிந்த சிரிப்புமாய் டிவி ஷோக்களில் முன்னணித் தொகுப்பாளினியாக வலம்வருபவர் நட்சத்திரா.

ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாது சீரியல், குறும்படங்கள் என நடிப்புத்துறையிலும் கவனம் செலுத்தி பிஸியாக இருப்பவர். க்வாரன்டீன் நாள்கள் எல்லோரையும் வீட்டில் கட்டிப்போட்டிருக்க, ஆல்ரவுண்டராக எல்லாப் பக்கமும் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தவர் இந்த நாள்களில் என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினேன்.

நட்சத்திரா
நட்சத்திரா

‘`க்வாரன்டீன் நாள்கள் உங்களுக்கு எப்படிப் போயிட்டிருக்கு?’’

``நான் சின்ன வயசுல இருந்தே அதிகம் வீட்ல இருக்கவே மாட்டேன். அதேமாதிரி, இவ்வளவு நாள் சம்மர் வெக்கேஷன் வந்தாகூட ‘அங்க போலாமா, இங்க போலாமா’ன்னு ப்ளான் போட்டு வெளியேதான் சுத்திட்டிருப்பேன். அந்தமாதிரி இருந்த பொண்ணை இப்போ வீட்டுக்குள்ளேயே இருக்க வச்சிருக்குது இந்த நாள்கள். இதுவும் நல்லாதான் இருக்கு. அம்மா, அப்பாகூட நேரம் செலவழிச்சுட்டு, இவ்வளவு நாள்கள் செய்யாம விட்ட வேலைகள், கத்துக்கணும்னு நினைச்ச விஷயங்கள், பார்க்காம விட்ட படங்கள், வெப்சீரிஸ்னு நிறைய விஷயங்கள் பண்ணிட்டிருக்கேன்.”

நட்சத்திரா
நட்சத்திரா

‘`அப்போ ஹிட்டடிச்ச நிறைய நாஸ்டால்ஜியா நிகழ்ச்சிகளை சேனல்கள் இப்போ மறு ஒளிபரப்பு செஞ்சுட்டிருக்காங்க. இந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கு?’’

``நானும் 90’ஸ் கிட்ஸ்தான்பா. ‘மெட்டிஒலி’ சீரியல்லாம் ஒரு எபிசோடு விடாம தாத்தா, பாட்டிகூட உட்கார்ந்து பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு, அதுவும் கடைசி எபிசோடு அப்போ தெரிஞ்ச ஒருத்தரோட கல்யாண ரிசப்ஷனுக்குக்கூடப் போகாம எங்க குடும்பமே உட்கார்ந்து பார்த்தோம். அதெல்லாம் இப்போ நினைச்சா சிரிப்பா இருக்கு. ஆனா, அந்த அனுபவம் எல்லாம் இப்போ இருக்கிற மில்லினியல் தலைமுறைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வீட்டுக்குள்ள இருக்கும் இந்த மாதிரியான அனுபவம் எல்லாம் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சுப் பேசும்போது நிச்சயம் சுவாரஸ்யமா இருக்கும்.”

நட்சத்திரா
நட்சத்திரா

``க்வாரன்டீன் நாள்களைக் கலாய்ச்சு வர மீம்ஸ் எல்லாம் சோஷியல் மீடியால பார்க்கறீங்களா?’’

``எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதுக்கு மீம் போடறதுங்கற டிரெண்ட் வந்து ரொம்ப காலம் ஆகுது. இந்தக் கொரோனா நாள்களை மையமா வச்சு வர சில மீம்ஸ் எல்லாம் ரசிக்கும்படியா இருந்தாலும் பலது ரொம்ப முட்டாள்தனமா இருக்கு. கன்டென்ட் உருவாக்கணும், டிரெண்ட்ல வரணும்னே சிலபேர் அர்த்தமே இல்லாம பண்ணிட்டு இருக்காங்க. இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமான்னு கேட்டா கண்டிப்பா முடியாதுதான். என்னைக் கேட்டா, அதையெல்லாம் கண்டுக்காம இருக்கறதுதான் சிறந்த வழின்னு சொல்வேன். அதேமாதிரி கைதட்டறது, விளக்கு ஏத்தறது இதையெல்லாம் கலாய்ச்சும் நிறைய மீம்ஸ் போயிட்டு இருக்கு. நமக்காக இந்த கஷ்டமான சூழ்நிலையில வேலை பார்க்கறவங்களுக்காக நாம செலுத்தற ஒரு சின்ன பதில் மரியாதைதான் அது. இது குற்றம் சொல்ற அளவுக்குப் பெரிய தப்பில்லை.”

நட்சத்திரா
நட்சத்திரா

``இந்த நாள்களில் நீங்க புதுசா கத்துக்கிட்ட விஷயங்கள்?’’

``சரியா சொல்லணும்னா, நம்ம திறமையை வளர்த்துக்கறதுக்கான நேரம் இது. மேக்கப் போட கத்துக்கறது, சமையல் கத்துக்கறது, புத்தகங்கள் படிக்கறது, ஆன்லைன் கோர்ஸ் பண்றதுன்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. நான் துணி துவைக்க இந்த நாள்களில் கத்துக்கிட்டேன். கேட்க கொஞ்சம் சிரிப்பா இருந்தாலும், அதுதான் உண்மை. சமைக்கறது, துவைக்கறது இந்த மாதிரியான அடிப்படை விஷ யங்கள்தான் சர்வைவல். அதனால இந்த விஷயங்களெல்லாம் தெரியாம இருக்கறவங்க இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கலாம்.”