Published:Updated:

பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில்... க்வாரன்டீனில் அர்ச்சனா... பிரச்னை தீர்ந்ததா?! #BiggBossTamil

அர்ச்சனா

பிக் பாஸ் 4-வது சீசனில் புதிய போட்டியாளராக ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா!

பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில்... க்வாரன்டீனில் அர்ச்சனா... பிரச்னை தீர்ந்ததா?! #BiggBossTamil

பிக் பாஸ் 4-வது சீசனில் புதிய போட்டியாளராக ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா!

Published:Updated:
அர்ச்சனா
பிக் பாஸ் தமிழ் 4-வது சீசன் கடந்த ஞாயிறு தொடங்கியது. 16 போட்டியாளர்கள் முதல் நாளன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்த 16 பேரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெயர் விஜே அர்ச்சனா. சீனியர் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார் என நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், முதல் நாள் வீட்டுக்குள் போனவர்களில் அர்ச்சனா இல்லை.

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தும் அர்ச்சனாவும் இன்னொரு சேனலில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பதால், இந்த ஷோவில் கலந்து கொள்வதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன. சன் டிவி-யில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அர்ச்சனா விஷயத்தில் மட்டும் ஜீ டிவி தரப்பில் இருந்து சட்டசிக்கல்கள் இருந்ததாகத் தெரிகிறது.

அர்ச்சனா
அர்ச்சனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிக்பாஸ் ஷூட்டிங் தொடங்கும் கடைசி நிமிடம் வரை சிக்கல் நீடித்ததாலேயே, அர்ச்சனாவால் மற்ற போட்டியாளர்களைப் போல முதல் நாளில் கலந்து கொள்ள முடியவில்லை. ‘அர்ச்சனா இருக்கிறாரா, இல்லையா’ என பிக் பாஸ் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்க, முதல் நாள் ஒளிபரப்பு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் அர்ச்சனா. ஆம், ’ஹாலி டே மோட் ’ என குடும்பத்துடன் வெளியில் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இன்னொருபுறம் 'டாக்டர்’ படத்தின் டப்பிங்கில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், "அர்ச்சனா ஷோவில் கலந்து கொள்ள இருந்த சிக்கல்கள் நல்லபடியாகத் தீர்ந்து விட்டதால் அடுத்த சில தினங்களில் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்" என்கிறார்கள் நம்முடைய நம்பகமான ரகசிய செய்தியாளர்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'’ஜீ தமிழ் சேனல்ல இருந்தாங்க அர்ச்சனா. லாக்டௌன் தொடங்கியது முதலே டிவியில் நிகழ்ச்சிகள் எதுவும் ஒளிபரப்பாகாததால் அவங்க கைவசம் ஷோக்கள் எதுவும் இல்லை. இந்தச் சூழல்லதான் பிக் பாஸ் 4-வது சீசன்ல போட்டியாளர் வாய்ப்பு அவங்களுக்கு வந்தது. பொதுவா சில செலிபிரிட்டிகளுக்கு நிறைய ஃபேன் ஃபாலோயர்ஸ் இருப்பாங்க. அந்த செலிபிரிட்டிகளை நிகழ்ச்சிக்குள் இழுக்கிறது மூலமா அவங்களோட ஆடியன்ஸை நிகழ்ச்சியின் பக்கம் திருப்பறதுங்கிறது வழக்கமான ஒரு ரியாலிட்டி ஷோ டெக்னிக்தான்.

அந்த அடிப்படையிலதான் ஓரளவுக்கு ரசிகர்களைக் கொண்ட அர்ச்சனாவையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதாச் சொல்றாங்க.

ஏற்கெனவே இருந்த சேனல்ல ‘இனி அடுத்த வருஷம்தான் ஷோ’னு சொல்லப்பட்டதால, பிக் பாஸ்ல கலந்துக்க விரும்பியிருக்கார் அர்ச்சனா. ஆனா, சம்பந்தப்பட்ட அந்தச் சேனல் இதை ரசிக்கலைனு தெரியுது.

அர்ச்சனாவின் பதிவு
அர்ச்சனாவின் பதிவு

பிக் பாஸோ, ’நல்லபடியாப் பேசி சிக்கல் இல்லாம வந்து சேருங்க’னு சொல்லியிருக்கார். அந்தச் சிக்கல் இப்பச் சரியாகிடுச்சு. இப்ப பிக் பாஸ்ல கலந்து கொள்வதுனு தீர்மானமா முடிவெடுத்து, தன் முடிவை முன்பு இருந்த சேனலுக்கும் தெரிவித்து விட்டு வந்துட்டார். கான்ட்ராக்ட் சிக்கல்களும் தீர்ந்திருக்கின்றன" என்றார்கள் அவர்கள்.

கடந்த சீசனில் எப்படி மீரா மிதுன் நிகழ்ச்சி தொடங்கிய அடுத்த சில தினங்களில் உள்ளே நுழைந்தாரோ அதேபோல், அர்ச்சனாவும் இன்னும் ஓரிரு தினங்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்.

தற்போது க்வாரன்டீனில் இருக்கும் அரச்சனாவை அநேகமாக இந்த வார இறுதி எபிசோடில் பிக்பாஸ் வீட்டுக்குள், கமல்ஹாசன் கொண்டுபோய்விடலாம் என எதிர்பார்க்கலாம்.