Published:Updated:

"விஜய் டிவி பக்கம் இனிமே போக வேண்டாம்னு முடிவெடுத்திருக்கேன்... ஏன்னா?!"- ஆங்கர் பாவனா

ஆங்கர் பாவனா

"முதல்வரின் முகத்துல அப்படியொரு சிரிப்பு. ஆனா தோனிக்கு சில நொடிகள் அது புரியலை. அர்த்தம் புரியாம சில விநாடிகள் குழம்பிப்போய் என்னைப் பார்த்தார் தோனி. அடுத்த செகண்ட் சிலர் விளக்க, பிறகு அவரும் செமையா சிரிச்சார்." - பாவனா

"விஜய் டிவி பக்கம் இனிமே போக வேண்டாம்னு முடிவெடுத்திருக்கேன்... ஏன்னா?!"- ஆங்கர் பாவனா

"முதல்வரின் முகத்துல அப்படியொரு சிரிப்பு. ஆனா தோனிக்கு சில நொடிகள் அது புரியலை. அர்த்தம் புரியாம சில விநாடிகள் குழம்பிப்போய் என்னைப் பார்த்தார் தோனி. அடுத்த செகண்ட் சிலர் விளக்க, பிறகு அவரும் செமையா சிரிச்சார்." - பாவனா

Published:Updated:
ஆங்கர் பாவனா
ஸ்போர்ட்ஸ் ஆங்கராக பரபரப்பாக இருந்த பாவனா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்டர்டெய்ன்மென்ட் பக்கம் வந்திருக்கிறார். கலர்ஸ் தமிழ் சேனலின் டான்ஸ் ஷோவை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவரிடம் பேசினேன்.

"'கிரிக்கெட் பக்கமே ஒதுங்கிடுவீங்கன்னு பார்த்தா, மறுபடியும் பழைய ரூட்டுக்கு வந்திருக்கீங்களே’னுதான் எல்லாரும் கேக்கறாங்க. ஸ்போர்ட்ஸ் ஆங்கரிங் ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது. ஒரு தயக்கத்துடன்தான் மும்பை போனேன். ஆனா அதுல இறங்குன சில நாள்கள்லயே எனக்கு செட் ஆகிடுச்சு.

அதனால அங்கயும் ஒரு கை பார்க்கலாம்னு ஆர்வமா பண்ணிட்டிருந்தேன். நிறைய ஷோக்கள், அதுல பல பெரிய ஜாம்பவான்களின் பக்கத்துல நானும் இருந்தேன்னு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. ஐ.பி.எல்., உலகக்கோப்பை, ஒரு பக்கம் ஸ்போர்ட்ஸ் ஷோக்களுடன் ‘தலைவி’, 'RRR', ஃபங்ஷன்னு சினிமா ஷோக்களூம் கலவையா அமைஞ்ச வருஷமா கடந்த வருஷம் இருந்தது. தேங்க் காட்!

பாவனா, தோனி
பாவனா, தோனி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முக்கியமா சமீபத்துல ஐ.பி.எல் கோப்பையை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிச்சதைக் கொண்டாடிய நிகழ்வைத் தொகுத்து வழங்கினேன். முதலமைச்சர் ஸ்டாலின், தோனி ரெண்டு பேரும் கலந்துகிட்ட அந்த நிகழ்ச்சியை என்னால மறக்கவே முடியாது.

மும்பையில இருந்த என்னை இந்த நிகழ்ச்சிக்காகக் கூப்பிட்டாங்க. சென்னை வந்து ஏர்போர்ட்ல இறங்குற வரை நிகழ்ச்சியில முதல்வர் கலந்துக்கற விஷயமே எனக்குத் தெரியாது.

தோனி கலந்துக்கிட்ட எத்தனையோ நிகழ்ச்சிகளை இதுக்கு முன்னாடி நான் ஹோஸ்ட் பண்ணியிருக்கேன். அப்பெல்லாம் எங்கிட்ட ஸ்கிரிப்ட் பார்க்கணும்னு கேக்க மாட்டாங்க. ஆனா அன்னைக்கு ஸ்கிரிப்ட் பார்க்கணும்னு கேட்டுட்டே இருந்தாங்க. காரணம் கேட்டப்பதான் விஷயத்தைச் சொன்னாங்க. அந்த நிமிஷத்துல இருந்து லேசா பதற்றம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆனா சூப்பரா ஹெண்டில் பண்ணுனேன். மேடையில பேசறப்ப ’தல’ தோனியையும் ’தளபதி’ ஸ்டாலினையும் ஒரே பன்ச்ல என் பக்கம் திரும்ப வச்சிட்டேன்.

அந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் வரை சென்னையில மழை பெய்ஞ்சிட்டிருந்தது. அன்னைக்குப் பார்த்தா அப்படியொரு வெயில். அதைப் பிடிச்சிக்கிட்டேன். ‘சென்னைக்கும் உங்களுக்குமான கனெக்‌ஷன் பாருங்க. நேத்து வரை பெய்ஞ்ச மழை இன்னைக்குக் காணோம். நீங்க சென்னை வர்றீங்கன்னதும் சூரியனே வெளியில வந்து வரவேற்குது’னு சொன்னதும் முதல்வரின் முகத்துல அப்படியொரு சிரிப்பு. ஆனா தோனிக்கு சில நொடிகள் அது புரியலை. அர்த்தம் புரியாம சில விநாடிகள் குழம்பிப் போய் என்னைப் பார்த்தார் தோனி. அடுத்த செகண்ட் சிலர் விளக்க, பிறகு அவரும் செமையா சிரிச்சார்’’ என்றவரிடம்,

"மறுபடி விஜய் டிவி வராம கலர்ஸ் தமிழ் பக்கம் போயிட்டீங்களே?" என்றேன்.

ஆங்கர் பாவனா
ஆங்கர் பாவனா

"விஜய் டிவி பக்கம் இனி போக வேண்டாம்னு நினைச்சிருக்கேன். ஏன்னா அவங்க ஸ்டைலும் என் ஸ்டைலும் இப்ப வேற ஆகிடுச்சு. அவங்க இப்ப காமெடியா கொண்டு போனா மட்டுமே ஃபோகஸ் செய்றாங்க. எனக்கு அது அவ்வளவா வர மாட்டேங்குது. அதனால விட்டுடலாம்.

அதுவும் போக எனக்கு ஜெயா டிவியில முதன் முதலா ஷோ தந்த வெங்கட்ரமணி சார்தான் கலர்ஸ் தமிழ் ஷோவுக்குக் கூப்பிட்டார். நாம எவ்ளோ உயரத்துக்குப் போனாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாதுன்னு நினைக்கிறவ நான். அதனால அவர் சொன்னதும் ஓகே சொல்லிட்டேன். அந்த டீமுடன் செம ஜாலியா போகுது வேலை" என்றார்.