Published:Updated:

``கல்யாணம் அவரோடதான்... ஆனா அந்தக் கல்யாண மண்டபம்?!'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா

’பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா
’பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா

''என் வருங்காலக் கணவர் பற்றி வந்த அந்தத் தகவல் தவறானது!'' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையாக நடிக்கும் சித்ராவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடந்தது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சித்ரா மணமுடிக்கப் போகும் மாப்பிள்ளை பெயர் ஹேமந்த் ரவி. சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். சித்ராவின் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. வாழ்த்துகள் சொல்லி சித்ராவிடம் பேசினேன்.

ஹேமந்த் ரவி
ஹேமந்த் ரவி
OLED தெரியும், TOLED தெரியுமா..? வருகிறது ஷாவ்மியின் டிரான்ஸ்பரன்ட் டிவி!

''ரொம்ப நாளாவே பார்க்குறவங்க எல்லாரும் என்கிட்ட கேட்டுட்டிருந்த கேள்விக்கு ஒருவழியா இப்பதான் விடை கிடைச்சிருக்கு. வாழ்க்கையின் முக்கியமான தருணம்கிறதால ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதேசமயம் நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அப்செட் ஆகுற மாதிரி சில சம்வங்கள். சிலர் பரபரப்புக்காக என்னுடைய வருங்காலக் கணவர் பத்தின தகவல்களை முழுசாக் கேட்டுத் தெரிஞ்சுக்காம அரைகுறையா எதையாச்சும் சொல்லிட்டிருக்காங்க. சென்னை திருவேற்காடு பக்கத்துல பிரமாண்டமா இருக்கிற ஒரு கல்யாண மண்டபம் அவரோடதுதான்னு ஒரு தகவல் வேகமாப் பரவிட்டிருக்கு. அது பொய். அந்தக் கல்யாண மண்டபம் அவரோடதில்லை. தயவுசெய்து இனிமே யாரும் இந்த மாதிரி பொய்யான தகவல்களைப் பரப்பாதீங்க'' என்றவரிடம் திருமணத் தேதியைக் கேட்டால், ''இனிமேல்தான் முடிவு செய்யணும்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு