Published:Updated:

10 வருடம்... காதல் டு கல்யாணம் அனுபவம் சொல்லும் 'ஆதித்யா' தாப்பா!

வே.கிருஷ்ணவேணி

''பத்து வருஷக் காதல் எங்களுடையது. எத்தனையோ தடைகள், பிரச்னைகளைத் தாண்டி இன்று கரம்பிடித்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

தாப்பா
தாப்பா

ஆதித்யா சேனலில் லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கிவருபவர் தாப்பா. அஜித் நடித்த`வேதாளம்', `விஸ்வாசம்' என சில படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போதும், ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருக்கிறார். பல பேட்டிகளில் அவருக்கு எப்போது திருமணம் என கேட்டும், எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார்.

தாப்பா
தாப்பா

இந்நிலையில், இன்று காலை சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் ரகு என்பவரை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். அவருடைய திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மஹாலில் ஏற்பாடு செய்துள்ளார். காதல் திருமணம் கைகூடிய சந்தோஷத்தில் இருந்த தாப்பாவுக்கு திருமண வாழ்த்துச் சொல்ல, அலை பேசினேன்.

''இருவீட்டாரின் சம்மதத்துடன் பேரில் இந்த திருமணம் நடந்திருக்கு. ரசிகர்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.''
தாப்பா
தாப்பா
தாப்பா

''பத்து வருஷக் காதல் எங்களுடையது. எத்தனையோ தடைகள், பிரச்னைகளைத் தாண்டி இன்று கரம்பிடித்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க வீட்ல பர்மிஷன் வாங்கத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தோம். இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கு. பெரியவர்கள், நல்லவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும். ரசிகர்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'' என்றவர்,

''என் கணவர் பெயர் ரகு. பிருந்தா மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் என பல நடன இயக்குநர்களுக்கு உதவி நடன இயக்குநராக இருக்கிறார். எங்கள் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சியைச் சேர்ந்த நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தவிருக்கிறார்கள்.'' என்றவர், திருமணத்தில் நடக்கும் அடுத்தடுத்த சடங்குகளில் பங்கேற்க பிஸியானார் .

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.