சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “அண்ணி கேரக்டர் வேணாம்னு சொன்னேன்!”

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா

விகடன் TV

‘பொதுவா எல்லா அப்பா, அம்மாவும் பொண்ணு மீடியாவில் இருக்கான்னா சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்கன்னுதான் இயல்பா யோசிப்பாங்க. ஆனா, அந்த விதத்தில் நான் ரொம்பவே லக்கி! ஏன்னா, சொந்தக்காரங்க என்ன நினைப்பாங்களோன்னு எப்பவும் என் அப்பா, அம்மா யோசிச்சதேயில்லை. அவங்களோட பொண்ணைப் பற்றி அவங்களுக்கு நல்லாவே தெரியுங்கிறதனால அந்த ஒரு விஷயத்தில் என்னை எப்பவும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க!' என்கிறார் அர்ச்சனா. `ஆதித்யா' டி.வி-யில் ஆங்கராக அறிமுகமானவர் தற்போது, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'ராஜாராணி சீசன் 2'-ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆங்கர் to ஆக்டர்: “அண்ணி கேரக்டர் வேணாம்னு சொன்னேன்!”

“அப்பா புரொபசர். வீட்ல ரொம்பவே ஸ்ட்ரிக்ட். சின்ன வயசுல இருந்தே டி.வி பார்த்து நாமளும் அப்படி ஆகணும் என்கிற ஆசை இருந்துச்சு. காலேஜ் போனதுக்கு அப்புறம் அந்த ஆசை என்னை அறியாமலேயே வெளியே வர ஆரம்பிச்சிடுச்சு. ஆங்கரிங், டான்ஸ்னு ஒரு போட்டி விடாம எல்லாப் போட்டியிலும் கலந்துப்பேன். கல்சுரல்னாலே அர்ச்சனா தான்னு காலேஜ்ல எல்லாரும் சொல்லுவாங்க. டப்ஸ்மாஷ், டிக்டாக் எல்லாம் பிரபலமான டைம். நானும் எனக்குப் பிடிச்ச கேரக்டர் மாதிரி பேசி டப்ஸ்மாஷ் பண்ணினேன். ஆதித்யா டி.வி-யில் டப்ஸ்மாஷ் போட்டிக்கு நானும் என் வீடியோவை அனுப்பி வச்சேன். ஆதித்யா டி.வி-யில் `King, Queen of social media'ன்னு ஒரு ஆண், ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிற போட்டியில் என்னைக் கலந்துக்கச் சொல்லி போன் பண்ணினாங்க. அப்பா என்னை போட்டிக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னாங்க. அழுது அடம்பிடிச்ச பிறகு, ‘இதுதான் கடைசி... இதில் ஜெயிச்சா நீ நினைச்சதைப் பண்ணு... தோத்துட்டா ஒழுங்கா இன்ஜினீயரிங் முடிக்கிற வழியைப் பாரு’ன்னு கண்டிஷன் போட்டு அனுப்பினார். என் அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட். அவங்களைக் கூட்டிட்டு அந்தப் போட்டியில் கலந்துகிட்டேன். அந்த டைட்டில் எனக்குக் கிடைக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அதற்குப் பிறகு அவங்களே ஆங்கராகக் கூப்பிட்டாங்க. அப்படித்தான் ஆதித்யா டி.வி-யில் ஆங்கரானேன்.

ஆங்கர் to ஆக்டர்: “அண்ணி கேரக்டர் வேணாம்னு சொன்னேன்!”
ஆங்கர் to ஆக்டர்: “அண்ணி கேரக்டர் வேணாம்னு சொன்னேன்!”

ஆரம்பத்தில் எனக்கு லைவ் ஷோ எதுவும் கொடுக்கல. ரெக்கார்டட் ஷோதான் பண்ணிட்டு இருந்தேன். பசங்க ஸ்கூல், காலேஜுக்குக் கிளம்புற நேரத்துல என் ஷோ இருந்ததால பெருசா ரீச் ஆகலை. கடைசியா நான் வெளியே வர்றதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கு லைவ் ஷோ கொடுத்தாங்க. அதனால் ஆங்கரிங் அனுபவம் பத்திப் பெரிசா சொல்ல ஒண்ணுமில்லை.

பிரவீன் பென்னட் சார் என்னுடைய போட்டோ பார்த்துட்டு இந்தப் பொண்ணு யாருன்னு விசாரிச்சிருக்கார். இப்போ நான் நடிக்கிற கேரக்டருக்கு ஏற்கெனவே வேற ஒருத்தரை செலக்ட் பண்ணியிருந்திருக்காங்க. அவர் என்னை மீட் பண்ண வரச் சொன்னார். அவரோட சீரியலுக்கு நான் ரசிகை என்பதால் அவர்தான் நிஜமாகவே நம்மளைக் கூப்பிடுறாரா இல்லை யாராச்சும் கிண்டல் பண்றாங்களான்னு யோசிச்சிட்டே நம்பிக்கை இல்லாமதான் அவரைப் பார்க்கப் போனேன். அந்தச் சமயம் ஆதித்யா டி.வி-யில் என்னை ஆங்கராக எடுக்க இருந்தாங்க. அந்த அக்ரிமென்டில் கையெழுத்து போட்டால் அடுத்த ஐந்து வருஷத்துக்கு அங்கே மட்டும்தான் வேலை பார்க்க முடியும். அந்தச் சூழலில் பிரவீன் சார் என்கிட்ட ‘அண்ணி ரோல்... நீங்க காமெடியான வில்லி ரோலில் நடிக்கணும்’னு சொன்னார். ‘சார், எனக்கு 21 வயசுதான் ஆகுது. இப்போவே அண்ணி கேரக்டர் வேண்டாம்’னு தயங்கினேன். என்னை நம்பி வாங்கன்னு சொன்னார். ஆனாலும், எனக்கு அண்ணி ரோலில் நடிக்க உடன்பாடில்லைன்னு சொன்னதும் எனக்காக தம்பி மனைவியாக கேரக்டர் மாற்றித் தந்தாங்க. ஒரு வாரம் ரொம்ப யோசிச்சேன். ‘நடிக்கன்னு போய்ட்டா அது நமக்கு செட்டாகலைன்னா அடுத்து என்ன பண்றது... திடீர்னு நம்மளை சீரியலில் இருந்து தூக்கிட்டாங்கன்னா என்ன பண்றது... ஆங்கருக்கான அக்ரிமென்ட் நம்மகிட்ட இருக்கு. அதை விட்டுட்டு இதைத் தேர்ந்தெடுக்கிறது சரியா’ன்னு யோசிச்சேன். சரி, ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம்னு சீரியலில் நடிக்க ஓகே சொன்னேன்.

ஆங்கர் to ஆக்டர்: “அண்ணி கேரக்டர் வேணாம்னு சொன்னேன்!”

ஆரம்பத்தில் எனக்குப் பெரிசா கான்பிடன்ட் இல்லை. எப்படி நாம நடிக்கப் போறோம் என்கிற தயக்கம் இருந்துச்சு. நடிக்க நடிக்கத்தான் நடிப்புன்னா என்னன்னு கத்துக்கிட்டேன். இப்போ வெவ்வேறு சேனல்களில், வெவ்வேறு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வருது. அதே மாதிரி, வாராவாரம் பட வாய்ப்புகள் வருது. இப்போதைக்கு இந்த ஒரு சீரியல் போதும் என்கிற முடிவில் இருக்கேன்.”