Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”

திவ்யா கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா கணேஷ்

இயல்பாகவே நான் ரொம்ப பயப்படுற ஆள். இருட்டைப் பார்த்தாலே ஓடிடுவேன். அந்த நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்ண என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க.

ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”

இயல்பாகவே நான் ரொம்ப பயப்படுற ஆள். இருட்டைப் பார்த்தாலே ஓடிடுவேன். அந்த நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்ண என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க.

Published:Updated:
திவ்யா கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா கணேஷ்

‘`லீடு ரோலில் நடிச்சிட்டு ஏன் `பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்க சம்மதிச்சீங்கன்னு பலர் கேட்டாங்க. கதாநாயகியா நடிச்சா தொடர்ந்து கதாநாயகியாகத்தான் நடிக்கணும்னு என்ன அவசியம் இருக்கு? நிஜத்தில் இன்னும் திருமணம் ஆகாத நான் சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகக்கூட நடிச்சிருக்கேன். எதார்த்தமா என் கரியரா அமைஞ்சதுதான் ஆக்டிங்! அதில், புதுசு புதுசா பல விஷயங்கள் கத்துக்கிட்டு எக்ஸ்ப்ளோர் பண்ணணும்னு விரும்புறேன். எனக்குக் கொடுத்த வேலையை பர்பெக்ட்டா செய்திருக்கேன்னு மக்கள்கிட்ட பாராட்டு வாங்கினேனா அதுவே எனக்குப் போதும்! `பாக்கியலட்சுமி' சீரியலில் என்கிட்ட கதை சொல்லும்போது பிடிச்சிருந்ததாலதான் அந்தத் தொடரில் நடிக்க சம்மதிச்சேன்!'’ என்கிறார் திவ்யா கணேஷ்.

ஆங்கராக தன் கரியரை ஆரம்பித்தவர் தற்போது `பாக்கியலட்சுமி' தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஜெனி மாதிரி வெகுளியான மருமகள் எங்களுக்கும் வேண்டும் என ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு தன் எதார்த்தமான நடிப்பினால் ஸ்கோர் செய்துகொண்டிருக்கும் திவ்யாவைச் சந்தித்தேன்.

ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”
ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”

“சொந்த ஊர் ராமநாதபுரம். மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்தேன். நான் மீடியாவிற்குள் வந்ததற்கு முழுக் காரணம் என் அக்கா! அவங்க சொன்னதாலதான் ஆங்கரிங்குக்கான ஆடிஷனில் கலந்துக்க ஆரம்பிச்சேன். லோக்கல் சேனலில் இருந்து பெரிய, பெரிய சேனல்கள் வரைக்குமே ஆடிஷனுக்குப் போயிருக்கேன். வேந்தர் டி.வி-யில் `மூன்றாவது கண்' என்கிற ஷோவைத் தொகுத்து வழங்கினேன். காடு, மலை எல்லாம் அலைஞ்சு அமானுஷ்யம், ஜீவ சமாதி, மயானக்கொள்ளை போன்ற விஷயங்களைத் தொகுத்து வழங்கி அங்கே இருக்கிறவங்ககிட்ட பேசி மக்களுக்குக் கொண்டு சேர்க்கிற மாதிரியான நிகழ்ச்சி.

இயல்பாகவே நான் ரொம்ப பயப்படுற ஆள். இருட்டைப் பார்த்தாலே ஓடிடுவேன். அந்த நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்ண என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க. மேக்கப் இல்லாம வெயிலில் சுற்றி, காடு, மலையேறி அலைந்து அந்த ஷோ பண்ணினேன். ஒரு ஷூட்டுக்காக ஏதாவது ஒரு ஊருக்குக் கிளம்பினோம்னா திரும்ப வர்றதுக்கு நான்கைந்து நாள்கூட ஆகும். நான் மட்டும்தான் பொண்ணுங்கிறதனால துணைக்கு என் ஃப்ரெண்ட் ஒருத்தியையும் எல்லா ஷூட்டுக்கும் கூட்டிட்டுப் போவேன். கிராமப்புறப் பகுதிகளில்தான் இதுமாதிரியான நம்பிக்கைகள் அதிகம் இருக்கும் என்பதால், அந்த மாதிரியான ஊர்களுக்குப் போகும்போது தங்க நல்ல இடம் வசதிகூட இருக்காது. இப்படிப் பல கஷ்டங்களை அனுபவிச்சு அந்த ஷோ தொகுத்து வழங்கினதால எனக்குப் பல பாராட்டுகள் கிடைச்சிருக்கு’’ என்று சிரித்தவரிடம், சீரியல் என்ட்ரி குறித்துக் கேட்டேன்.

ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”
ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”

‘‘சீரியலில் நடிக்கணும்னு எனக்கு ஆசை கிடையாது. அதுவும் என் அக்கா சொல்லித்தான் பண்ணினேன். `கேளடி கண்மணி' சீரியல் மூலமா சின்னத்திரைக்குள் என்ட்ரியானேன். சன் டி.வி `சுமங்கலி' சீரியலில் லீடு ரோலில் நடிச்சேன். அந்த சீரியல் நடிக்கும்போதே சன் டி.வி-யில் ஸ்பெஷல் ஷோக்களைத் தொகுத்தும் வழங்கிட்டு இருந்தேன். ஆங்கரிங்கிலிருந்து ஆக்டிங் வந்ததும் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. அடிக்கடி கண்ணைச் சிமிட்டிடுவேன். அதை கன்ட்ரோல் பண்றதே பெரிய விஷயம் ஆகிடுச்சு. நடிப்புன்னா என்னன்னு கத்துக்க ஆரம்பிச்சேன்.

ஆங்கர் to ஆக்டர்: “ஆங்கரிங்... என்னைத் தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க!”

`பாக்கியலட்சுமி' சீரியலில் ஒரு நாள் டெலிகாஸ்ட்டில் நான் வரலைன்னா `நீங்க இன்னைக்கு ஏன் ஜெனி வரல... உங்களை நாங்க மிஸ் பண்ணினோம்’னு அத்தனை மெசேஜ் வரும். அதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்ப விஜய் டி.வி-யில் புதுசா வரப்போகும் ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். அந்த சீரியலில் நெகட்டிவ் லீடு ரோலில் நடிக்கிறேன். ஜெனிக்கும், அந்த கேரக்டருக்கும் பயங்கர வித்தியாசம் இருக்கும். அதை ஸ்கிரீன்ல பார்க்கும்போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism