Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!

தர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
தர்ஷினி

உதயா மியூசிக் பண்ணிட்டிருக்கும்போது கன்னட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் செகண்ட் லீடு ரோலில் நடிச்சேன்

ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!

உதயா மியூசிக் பண்ணிட்டிருக்கும்போது கன்னட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் செகண்ட் லீடு ரோலில் நடிச்சேன்

Published:Updated:
தர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
தர்ஷினி

“சீரியலில் மட்டும் நான் தைரியமான பொண்ணு இல்லைங்க... நிஜத்திலும்தான்! எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா யாரா இருந்தாலும் மூஞ்சில அடிக்கிற மாதிரி பளார்னு பேசிடுவேன்... அந்த குணத்தை மாத்திக்கச் சொல்லி அடிக்கடி என் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. ஆனாலும் இப்ப வரைக்கும் அந்த குணத்தை என்னால மாத்திக்க முடியலைங்க’’ என்கிறார் தர்ஷினி. ‘உதயா மியூசிக்’ தொகுப்பாளினியான அவர், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சில்லுனு ஒரு காதல்’ தொடரின் கதாநாயகி.

``தர்ஷினி பற்றிச் சொல்லுங்க?’’

“என்னோட சொந்த ஊர் மைசூர். டிப்ளமோ படிச்சிட்டு இருக்கும்போது, டி.வி பார்த்து நாமளும் ஏன் ஆங்கரிங் பண்ணக் கூடாதுன்னு தோணவும், நேரடியா அந்த லோக்கல் சேனலுக்கே போய் வாய்ப்பு கேட்டுட்டேன். அவங்களும் இங்கே ஆங்கரிங்கிற்கு ஆள் இருக்காங்கன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. நான் கேட்காம டார்ச்சர் பண்ணின காரணத்துனால எனக்கு ஆடிஷன் வச்சாங்க. அதில், என்னுடைய பர்ஃபாமன்ஸ் பிடிச்சிருந்ததால தொடர்ந்து அந்த லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ணச் சொன்னாங்க. காலேஜில் ரெண்டு பீரியட் கட் அடிச்சிட்டு ஜாலியா ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன்.

நான் ஆங்கர் பண்ணிட்டிருந்த லோக்கல் சேனலின் புரோகிராம் ஹெட் மூலமா பெங்களூரில் கஸ்தூரி மீடியாவில் எனக்கு வேலை கிடைச்சது. பிறகு, அங்கே என்னைப் பார்த்துட்டு உதயா மியூசிக் ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. அப்படித்தான் ‘உதயா மியூசிக்’ சேனலில் வாய்ப்பு கிடைச்சது.

ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!
ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!
ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!

``ஆங்கரிங்கில் மறக்கமுடியாத தருணம்..?’’

கஸ்தூரி மீடியாவில் ஆங்கரிங் பண்ணிட்டிருந்த சமயம் ‘கேஜிஎஃப் முதல் பாகம்’ படத்திற்காக நடிகர் யாஷை நான் பேட்டி எடுத்தேன். இப்பவே நேர்ல பார்க்கிறதுக்கு நான் ரொம்ப குட்டியா இருப்பேன். அப்போ இன்னும் குட்டியா இருப்பேன். ஆனாலும், அப்பவே அவரை இன்டர்வியூ பண்ணின தருணம் எனக்கு எப்பவும் ஸ்பெஷல்!’’

``ஆங்கர் டு ஆக்டர் எப்படி..?’’

``உதயா மியூசிக் பண்ணிட்டிருக்கும்போது கன்னட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் செகண்ட் லீடு ரோலில் நடிச்சேன். அந்த காஸ்டிங் ஏஜென்சி மூலமா ‘சில்லுனு ஒரு காதல்’ தமிழ் சீரியலுக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. எனக்குத் தமிழ் பேசத் தெரியாது. ஆனா, சின்ன வயசுல வீட்டில் அதிகமா தமிழ்ப் படங்கள் பார்த்ததனால தமிழ் புரியும். சரி, மேனேஜ் பண்ணிடலாம் என்கிற நம்பிக்கையில் ஓகே சொல்லிட்டேன்.

இது போலீஸ் கதாபாத்திரம் என்பதால் உடலளவில் ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஒரு நாளைக்கு பெரிய கிரவுண்டைச் சுற்றி முப்பது முறை ஓட வேண்டியிருக்கும். ஒரு சில நாள், போலீஸ் டிரெயினிங்கில் பண்ற மாதிரியான உடற்பயிற்சிகள் எல்லாமே நிஜத்தில் பண்ண வேண்டியிருக்கும். கம்பியைப் பிடிச்சுத் தொங்கிறதாக இருக்கட்டும்... டயரை உருட்டுற பயிற்சியா இருக்கட்டும்... எல்லாமே கஷ்டமாகத்தான் இருக்கும். ஒருநாள் முழுக்க கஷ்டப்பட்டு நடிச்சா அடுத்த நாள் அடிச்சுப் போட்ட மாதிரி உடல் வலி இருக்கும். ஆனா, அந்த வலியை முகத்தில் காட்டாம புத்துணர்ச்சியா அடுத்த சீன் நடிக்கத் தயாராகணும். அதெல்லாம், ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்ப பழகிடுச்சு!’’

ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!
ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!
ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!
ஆங்கர் to ஆக்டர்: கர்நாடகா டு தமிழ் சீரியல்!

``ரொம்ப மெனக்கெட்டு எடுத்த ஒரு சீன்..?’’

``ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்திடும். நான் அந்தத் துளை வழியாகப் போய் அந்தக் குழந்தையை மீட்டுக் கொண்டு வர்ற மாதிரி ஒரு சீன் எடுத்தாங்க. கிரேன் எல்லாம் கட்டி ரொம்பப் பாதுகாப்பாகத்தான் அந்த ஷாட் எடுத்தாங்க. ஆனாலும், அந்த சீன் நடிச்சு முடிக்கிற வரைக்கும் ரொம்ப பயமா இருந்துச்சு. எங்க வீட்டிலுமே அந்த சீனைப் பார்த்துப் பதறிட்டாங்க.’’

``மறுபடி ஆங்கரிங் பண்ணணும் என்கிற எண்ணம் இருக்கா..?’’

``நிச்சயமா இருக்கு. தமிழில் இன்னும் கோவையா எனக்குப் பேசத் தெரியல. நான் பேசுறதை நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும். நான் பயன்படுத்துற வார்த்தையையே திரும்பத் திரும்பப் பயன்படுத்தி மேட்ச் பண்ணிட்டு இருப்பேன். ஆங்கரிங்கிற்கு அப்படிப் பேசுறது செட் ஆகாது. இன்னும் கொஞ்ச நாளில் தெளிவா தமிழ் பேசக் கத்துக்கிட்ட பிறகு, தமிழில் ஆங்கரிங் பண்ணலாம். ஆனா, கன்னட மொழியில் ஆங்கரிங் பண்ண ஆர்வம் இருக்கு. அதே மாதிரி, ஸ்டேஜ் ஷோ, ரியாலிட்டி ஷோக்களைத் தொகுத்து வழங்கணும்னும் விருப்பம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism