Published:Updated:

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லியா நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு!”

ப்ரீத்தி குமார்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீத்தி குமார்

“ ‘லட்சுமி வந்தாச்சு’ன்னு ஒரு சீரியலில் நடிச்சேன். அதில், எனக்கு கேன்சர் வந்திடும். என் குழந்தைகிட்ட ‘இனி அம்மா உன்கூட இருக்க மாட்டேன்

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்: “வில்லியா நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு!”

“ ‘லட்சுமி வந்தாச்சு’ன்னு ஒரு சீரியலில் நடிச்சேன். அதில், எனக்கு கேன்சர் வந்திடும். என் குழந்தைகிட்ட ‘இனி அம்மா உன்கூட இருக்க மாட்டேன்

Published:Updated:
ப்ரீத்தி குமார்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீத்தி குமார்

”புரோகிராம் புரொடியூசராகத்தான் என் கரியரை ஆரம்பிச்சேன். நியூஸ் சேனல் என்பதால் எங்க வீட்ல பெரிய அளவில் எதுவும் சொல்லலை. ஆனா, அதுக்குப் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதும் என் அப்பா ரொம்பவே கோபப்பட்டார். கிட்டத்தட்ட ஐந்து வருஷமா நடிச்சிட்டு இருக்கேன். ஆனாலும், இதுவரை என் அப்பா நான் நடிச்ச ஒரு சீரியல்கூடப் பார்த்ததில்லைங்க!” எனப் புன்னகைக்கிறார் ப்ரீத்தி குமார். வி.ஜேவாக அறிமுகமானவர் தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘வானத்தைப் போல’ தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“தந்தி டி.வி-யில் ஒளிபரப்பான ‘360 உலகைச் சுற்றி’ ஷோவின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரா இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக் கொடுப்பேன். ஆங்கர் அதைத் தொகுத்து வழங்குவாங்க. ஒருநாள் திடீர்னு ஆங்கர் யாரும் கிடைக்கலை. மணி ஆகிடுச்சு. ஷோ நடத்தியே ஆகணுங்கிற நிர்பந்தம். வேற வழியே இல்லாம நான் அன்னைக்கு ஷோவைத் தொகுத்து வழங்கினேன். திடீர்னு போய் கேமரா முன்னாடி நிற்கவும் கை கால் எல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. அன்னைக்குத்தான் என் ஆங்கர்ஸ் எல்லாரையும் நான் எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணியிருக்கேன்னு புரிஞ்சது. எப்படியோ அன்னைக்கு ஷோவைப் பண்ணி முடிச்சிட்டேன். பிறகு, என்னையே தொடர்ந்து ஆங்கரிங் பண்ணச் சொல்லிட்டாங்க. அப்படித்தான் என் ஆங்கரிங் பயணம் ஆரம்பிச்சது” என்றவர் சீரியல் வாய்ப்பு குறித்துப் பேசத் தொடங்கினார்.

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்:  “வில்லியா நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்:  “வில்லியா நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு!”

‘‘ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. எனக்கு சுத்தமா நடிக்கத் தெரியாது. நடிக்கணும்னு சொன்னாலே சிரிச்சிடுவேன். விஷ்ணு என்னோட நல்ல ஃப்ரெண்ட். அவனுக்கு ஜோடியாகத்தான் அந்த சீரியலில் நடிக்கணும். என் ஃப்ரெண்ட்டுங்கிறதனால எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணினான். அவனும், டைரக்டர் பிரம்மா சாரும் எப்படி நடிக்கணும்னு பொறுமையா எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த சீரியல் பண்ணுனதுக்குப் பிறகு ‘இனிமே சீரியல்தான் நமக்கான ஃபீல்டு’ன்னு தோணுற அளவுக்கு அந்தத் துறை எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. தொடர்ந்து பிஸியா பல சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.”

``தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் மட்டுமே நடிச்சீங்களே..?’’

``ஆமாங்க... ‘கேளடி கண்மணி’ என்கிற சீரியலில்தான் முதன்முதலில் வில்லியா நடிச்சேன். அந்த சீரியலில் என்னுடைய கேரக்டர் ரொம்பவே ரீச் ஆச்சு. அதுமட்டுமல்லாமல், அப்படி நடிக்கிறது ரொம்பவே நல்லா இருந்துச்சு. நிஜத்துல யாராலும் இந்த அளவுக்கெல்லாம் வில்லத்தனம் பண்ண முடியாது. நம்மோட இயல்பான கேரக்டரை அப்படியே நடிக்கிறதுல என்ன சுவாரஸ்யம் இருக்குன்னு தோணுச்சு. அதனால, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கலாம்னு முடிவு பண்ணினேன். டைட்டில் கேரக்டரில் ஹீரோயினா நடிக்கக்கூட பல முறை வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, வில்லியா நடிக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக அத்தனை வாய்ப்புகளையும் மறுத்தேன்.”

`` ‘வானத்தை போல’, ‘நினைத்தாலே இனிக்கும்’ இரண்டு தொடர்களிலும் பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கிறீங்களே..?’’

“தொடர்ந்து வில்லியாவே நடிச்சதனால கேஷூவலா எங்க அம்மாவைப் பார்த்தாகூட ‘என்னைப் பார்த்து ஏன் முறைக்கிறே’ன்னு அம்மா சலிப்பா கேட்கிற அளவுக்கு ஆகிடுச்சு. சரி, நெகட்டிவ் ரோல் பண்ணி, பண்ணி நம்ம உடல்மொழியும் மாறிடுச்சு. மாற்றம் ஒன்றுதானே மாறாதது. பாசிட்டிவ் ரோல் கிடைச்சப்போ, ‘சரி, கொஞ்ச நாள் மக்கள் என்னை நல்லவளா பார்க்கட்டுமே’ன்னு தோணுச்சு. நெகட்டிவ் நிறைய பண்ணிட்டு சட்டென பாசிட்டிவ் ரோலில் என்னால நடிக்க முடியலை. ஆரம்பத்தில், அந்தக் கதாபாத்திரத்திற்குள் உட்கார எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. பிறகு, சுலபமா பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆரம்பத்தில் என்னை நெகட்டிவ் ரோலிலேயே பார்த்துப் பழகினவங்களுக்கு சட்டுனு பாசமான பொண்ணா என்னைப் பார்க்க முடியலை. ‘நீங்க நெகட்டிவ் ரோலிலேயே நடிங்க’ன்னு சொன்னாங்க. ஆனா, இப்போ அவங்களும் என்னை ஏத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.”

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்:  “வில்லியா நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு!”
விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்:  “வில்லியா நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு!”

``சீரியலில் மறக்கமுடியாத எமோஷனல் தருணம்..?’’

“ ‘லட்சுமி வந்தாச்சு’ன்னு ஒரு சீரியலில் நடிச்சேன். அதில், எனக்கு கேன்சர் வந்திடும். என் குழந்தைகிட்ட ‘இனி அம்மா உன்கூட இருக்க மாட்டேன். நீயே உன் தேவையைப் பூர்த்திசெய்துக்கணும்’னு சொல்லிக் கொடுப்பேன். நானும், அவன் அப்பாவும் பிரிந்து இருக்கிறதனால நான் இறந்துபோகிறதுக்கு முன்னாடி அவரைச் சந்திச்சு அவர்கிட்ட குழந்தையை ஒப்படைப்பேன்.

இதை டி.வி-யில் பார்த்துட்டு ஒருத்தங்க எனக்கு ட்விட்டர் மூலமா மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. அதில், ‘நானும் கேன்சர் நோயாளிதான். ஆனா, என் கணவர் என் கூடவே இருக்கார். என் குழந்தைகிட்ட நீங்க சீரியலில் சொன்ன மாதிரிதான் நான் தினமும் சொல்லிட்டு இருக்கேன். அவனுக்கு நான் இறந்து போகப்போறேன்னு தெரியாது. எனக்கு உங்களை நேரில் சந்திக்கணும்போல இருக்கு. மீட் பண்ண முடியுமா’ன்னு கேட்டிருந்தாங்க. அவங்களை நேரில் சந்திச்சுப் பேசிட்டு வந்தேன். அந்தத் தருணம் ரொம்பவே எமோஷனலா இருந்தது. அவங்களை என் வாழ்நாள் முழுமைக்கும் என்னால மறக்க முடியாது!”

சொல்லும்போதே நெகிழ்கிறார் ப்ரீத்தி.