Published:Updated:

ஆங்கர் to ஆக்டர் - “தனுஷுக்கு என் சிரிப்பு பிடிக்கும்!”

சுல்தான் ஷா
பிரீமியம் ஸ்டோரி
சுல்தான் ஷா

யூடியூப்பில் ‘ரிவ்யூ ராஜா’ என்கிற பெயரில் படங்களை ரிவ்யூ பண்ணிட்டு இருந்தேன். அதற்குப் பெரிய அளவில் ரீச் கிடைச்சது.

ஆங்கர் to ஆக்டர் - “தனுஷுக்கு என் சிரிப்பு பிடிக்கும்!”

யூடியூப்பில் ‘ரிவ்யூ ராஜா’ என்கிற பெயரில் படங்களை ரிவ்யூ பண்ணிட்டு இருந்தேன். அதற்குப் பெரிய அளவில் ரீச் கிடைச்சது.

Published:Updated:
சுல்தான் ஷா
பிரீமியம் ஸ்டோரி
சுல்தான் ஷா

காமெடியில் லுக் ரொம்பவே முக்கியம். காமெடி ஆங்கருக்கும், காமெடியனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நான் காமெடி ஆங்கராகத்தான் ‘குக்கு வித் கோமாளி’யில் என்னை வெளிப்படுத்த விரும்பினேன். அது பலருக்கும் பிடிச்சிருந்தது... `குக்கு வித் கோமாளியில் நீங்க கோமாளியா சூப்பரா பண்ணீங்க’ன்னு வெளிநாட்டில் இருக்கிறவங்ககூட நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கிறாங்கன்னா அதைவிட மிகப்பெரிய சந்தோஷம் என்னவாக இருந்துவிட முடியும்?’’ என்கிறார் சுல்தான் ஷா.

ஆங்கர் to ஆக்டர் - “தனுஷுக்கு என் சிரிப்பு பிடிக்கும்!”

‘`என் பெயர் சுல்தான் ஷா. ஆனா, எல்லாருக்கும் பப்புன்னு சொன்னாதான் தெரியும். என் அப்பா பாலு மகேந்திரா சார்கிட்ட அசோசியேட் டைரக்டராக இருந்தார். அதனால, சின்ன வயசில சார்கிட்ட கூட்டிட்டுப் போகும்போது அவர் என்னை ‘பப்பு’ன்னு செல்லமா கூப்பிட்டிருக்கார். பிறகு, அந்தப் பெயரே என் அடையாளமாகிடுச்சு. சுட்டி டி.வி-யில் ஒரு தொடரில் நடிச்சேன். அப்பவே அந்த டி.வி-யில் காலையில் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினேன். குழந்தை நட்சத்திரமாகத்தான் மீடியாவில் என்ட்ரியானேன். பத்தாம் வகுப்பு வந்தவுடன் ஒரு வருஷம் பிரேக் எடுத்துட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். ப்ளஸ் ஒன் படிக்கும்போதே தமிழன் டி.வி-யில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. ஃப்ரீலான்சிங் ஆங்கரா கிட்டத்தட்ட 20 சேனல்களில் ஒர்க் பண்ணினேன்.

ஆங்கர் to ஆக்டர் - “தனுஷுக்கு என் சிரிப்பு பிடிக்கும்!”

பிறகு, யூடியூப்பில் ‘ரிவ்யூ ராஜா’ என்கிற பெயரில் படங்களை ரிவ்யூ பண்ணிட்டு இருந்தேன். அதற்குப் பெரிய அளவில் ரீச் கிடைச்சது. அப்போவே வேற வேற சேனல்களில் ஆங்கரிங் டிரை பண்ணிட்டிருந்தேன். அப்ப தான் விஜய் டி.வி-யில், ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு காமெடி ஆங்கரா அந்த ஷோவை என்டர்டெயினா என்னால கொண்டு போக முடியும்னு நம்பினேன். அதே மாதிரி, ரொம்ப ஜாலியா அந்த ஷோவை ஒரு வருஷத்துக்கும் மேல தொகுத்து வழங்கினேன்” என்றவரிடம் சீரியல் வாய்ப்பு குறித்துக் கேட்டேன்.

“அந்த ஷோ பண்ணிட்டிருக்கும்போதே விஜய் டி.வி-யில் ‘சின்னத்தம்பி’ன்னு ஒரு சீரியல் வாய்ப்பு கிடைச்சது. சின்ன வயசிலேயே நடிச்ச அனுபவம் இருந்ததனால வாய்ப்பு வந்ததும் ஓகே சொல்லிட்டேன். சீரியலும் ஆங்கரிங்கும் சேர்ந்து பண்ணிட்டிருந்தேன்.

‘சிவா மனசுல சக்தி’ தொடருக்குப் பிறகு ‘குக்கு வித் கோமாளி’ வாய்ப்பு கிடைச்சது. அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன் அண்ணா மாதிரி காமெடி ஆங்கரா என்னால எந்த அளவுக்கு பர்ஃபாம் பண்ண முடியுமோ அதைப் பண்ணினேன். அந்த நிகழ்ச்சி எனக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இப்போ மூன்றாவது சீசனுக்கும் என்னைக் கேட்டிருக்காங்க. சீரியல், சினிமா என தேதிகள் கொடுத்ததனால் இந்த சீசனில் கலந்து கொள்வது குறித்து இன்னும் உறுதியாகவில்லை. இப்போ விஜய் டி.வி-யில் ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ சீரியலிலும், கலர்ஸ் தமிழில் ‘அபி டெய்லர்’ சீரியலிலும் நடிச்சிட்டிருக்கேன்.

ஆங்கர் to ஆக்டர் - “தனுஷுக்கு என் சிரிப்பு பிடிக்கும்!”

‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ ஆங்கரிங் பண்ணுன சமயம் ஒருநாள் பிரியங்கா அக்கா போன் பண்ணி ‘தனுஷ் சார் உன்னை விஷ் பண்ணணும்னு சொன்னாங்க. நீ போய் அவங்களை மீட் பண்ணு’ன்னு சொன்னாங்க. அக்கா என்கிட்ட விளையாடுறாங்கன்னு நினைச்சு அதை சீரியஸாவே எடுத்துக்காம, அவங்க சொன்ன இடத்துக்குப் போனேன். அங்கே போனதுக்குப் பிறகுதான் உண்மையாகவே தனுஷ் சாரை மீட் பண்ணப் போறேன்னு தெரிஞ்சது. அவர் என்னைப் பார்த்து ‘உங்களை ரொம்பப் பிடிக்கும். நான் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். உங்க சிரிப்பு அழகா இருக்கு’ன்னு சொன்னார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் பேசிட்டு அவர்கூட சாப்பிட்டது என் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத அனுபவம்” என்றவரிடம் பட வாய்ப்புகள் குறித்துக் கேட்டேன்.

“ஸ்ரீகாந்த் சாருடன் ஒரு படத்திலும், விக்ரம்பிரபு சாருடன் ஒரு படத்திலும் நடிச்சிருக்கேன். அதுதவிர, ‘காதல் கண் கட்டுதே’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் லீடு ரோலில் நடிச்சிருக்கேன். இதுதவிர, Hotstar-ல் ஒரு வெப் சீரீஸில் நடிச்சிருக்கேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism