Published:Updated:

ஆங்கர் to ஆக்டர் - “சவுரி முடி அவிழ்ந்து பப்பிஷேம் ஆகிடுச்சு!”

ஸ்வேதா சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வேதா சுப்பிரமணியன்

``நிறைய ஈவன்ட்களைத் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். அதுதவிர, ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொடர்பாகவும் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்

ஆங்கர் to ஆக்டர் - “சவுரி முடி அவிழ்ந்து பப்பிஷேம் ஆகிடுச்சு!”

``நிறைய ஈவன்ட்களைத் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். அதுதவிர, ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொடர்பாகவும் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்

Published:Updated:
ஸ்வேதா சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வேதா சுப்பிரமணியன்

"என்னைப் பார்க்கிற பலரும் ‘நீங்க இப்போ என்ன பண்ணிட்டிருக்கீங்க... மீடியாவில் தொடர்ந்து உங்களைப் பார்க்க முடியலையே’ன்னு கேட்பாங்க. ‘ஏங்க நான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சித்திரம் பேசுதடி’ தொடரில் இப்பவும் நடிச்சிட்டிருக்கேன்’னு பதில் சொல்லுவேன். ‘அப்படியா’ன்னு கேட்பாங்க. இன்னும் சிலர், ‘சின்ன வயசில இருந்து உங்களைப் பார்த்துட்டு இருக்கேன்’னு சொல்லுவாங்க. உண்மையில் அவங்க என்னைவிட வயசில மூத்தவங்களா இருப்பாங்க. இவங்ககிட்ட விளக்கம் கொடுத்து என்ன ஆகப்போகுதுன்னு அமைதியா சிரிச்சிட்டே கடந்து வந்திடுவேன். ஸ்கூல் படிக்கும்போதே மீடியாவிற்குள் வந்துட்டேன். இப்போ எனக்கு 29 வயசாகுது. என் வயசை வெளிப்படையாச் சொல்றதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார், ஸ்வேதா சுப்பிரமணியன்.

``ஸ்கூல் படிக்கும்போதே மீடியாவிற்குள் என்ட்ரி... எப்படி?’’

“என் சொந்த ஊர் கோயம்புத்தூர். சின்ன வயசில இருந்தே டான்ஸ் ஆர்வம் அதிகம். அப்பா - அம்மாவும் என் அக்காவும் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணாங்க. படிப்பு, டான்ஸ் ரெண்டிலும் நான்தான் நம்பர் 1. பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘சூப்பர் டான்ஸர்’ என்கிற நடனப் போட்டியில் கலந்துக்கிட்டேன். பிறகு, ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ ஆடிஷனில் செலக்ட் ஆனேன். அந்த நிகழ்ச்சியில் டாப் 10 போட்டியாளர்களுள் ஒருவரா இடம் பிடிச்சேன். 11-ம் வகுப்பு படிக்கும்போது ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு இடையே +2 பொதுத்தேர்வு எழுதினேன். காலையில் பரீட்சை எழுதிட்டு நேரா பிராக்டீஸுக்கு வந்திடுவேன். கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர் எல்லாரும் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. ‘மானாட மயிலாட சீசன் 5’-ல் டைட்டில் வின்னர் ஆன பிறகு, ஜோடி நம்பர் 1-ல் ஆடினேன்.

ஆங்கர் to ஆக்டர் - “சவுரி முடி அவிழ்ந்து பப்பிஷேம் ஆகிடுச்சு!”

அதுக்கப்புறம் முதன்முதலா விஜய் டி.வி-யில் ‘சுவை தேடி’ என்கிற ஷோவை ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்தில் என் குரலை வச்சு என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. பலரும் நான் பேசும்போது குழந்தைத்தன்மையோட இருக்கணுங்கிறதுக்காக என் குரலை மாற்றிப் பேசுறதா நினைக்கிறாங்க. இயல்பிலேயே என் குரல் அப்படித்தான் என்பது, என்கூட இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனாலும், அந்தக் கேலிப் பேச்சுகளையெல்லாம் காதில் வாங்கிக்காம ஹேப்பியா ஆங்கரிங் பண்ணினேன்.

அதுக்குப் பிறகு ‘கனா காணும் காலங்கள்’ வாய்ப்பு வந்தது. தாடி பாலாஜி அண்ணாவைப் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கேன். அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். சின்னப் பொண்ணுன்னு பலரும் என் மேல அக்கறையோடு இருப்பாங்க. அதில் அவரும் ஒருத்தர்! அவர்தான் ‘கனா காணும் காலங்கள்’ சீரியலுக்காக ஒர்க்‌ஷாப் நடக்குது... நீயும் அதில் கலந்துக்கோன்னு சொன்னாங்க. அந்தச் சமயம் நான் ‘மானாட மயிலாட’ டைட்டில் வின் பண்ணியிருந்ததனால அங்கே போனதும் என்னை செலிபிரிட்டி மாதிரி பார்த்தாங்க. பேச ஆரம்பிச்சதும் எல்லாரும் ஜெல் ஆகிட்டோம். ஜோடி நம்பர் 1-ல் ஆடுறதுக்கு வாய்ப்பு வர, சீரியலில் நடிக்க முடியாமப்போச்சு. ஜோடியில் டான்ஸ் ஆடும்போது எனக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அதனால, தொடர்ந்து ஆட முடியாம வெளியேறிட்டேன். அதனால, மறுபடி அதே சீரியலில் இருந்து வாய்ப்பு வந்தது. அப்படித்தான் அந்தத் தொடரில் நுழைஞ்சேன்.’’

ஸ்வேதா சுப்பிரமணியன்
ஸ்வேதா சுப்பிரமணியன்

``இடையில் மீடியாவிலிருந்து விலகி இருந்தீங்களே..?’’

``ஆமாங்க... மேற்படிப்பு படிக்கிறதுக்காக பிரான்ஸ் போயிட்டேன். எனக்கு இந்தியாவில்தான் செட்டில் ஆகணும்னு இருந்துச்சு. அதனால, படிப்பு முடிஞ்சதும் திரும்ப நம்ம ஊருக்கே வந்துட்டேன். இங்கே வந்து நிறைய ஐ.டி கம்பெனிகளில் இன்டர்வியூ போனேன். எல்லாத் தேர்வும் முடிஞ்சு நேரடித்தேர்வு நடக்கும்போது என்னை அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்க. ‘ஏங்க, மீடியாவிலேயே அவ்வளவு ஃபேமஸா இருக்கும்போது இங்கே ஏன் வரணும்னு நினைக்கிறீங்க’ன்னு கேட்பாங்க. என்ன காரணம் சொன்னாலும் கேட்காம ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. தொடர்ந்து இப்படிப் பல கம்பெனியில் ஆச்சு. அப்போதான் `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நடன நிகழ்ச்சியில் கலந்துக்க வாய்ப்பு வந்துச்சு. அதன் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்தேன்.’’

``மறக்கமுடியாத ஆங்கரிங் அனுபவம்..?’’

``சன் டி.வி-தான் என்னை ஆங்கரா அடையாளம் காட்டின சேனல். ‘சண்டே கலாட்டா’ன்னு ஒரு நிகழ்ச்சியை மதுரை முத்து அண்ணாகூடச் சேர்ந்து தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சது. இன்னைக்கு ‘குக்கு வித் கோமாளி’யில் அவர் சொல்கிற காமெடி நல்லாருக்குன்னு பேசுறாங்க. ஆனா, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவருடைய பல காமெடிகளை அந்த ஷோவில் கொண்டாடியிருக்கோம். அவர்கூட நான் ஒர்க் பண்ணின மொமன்ட் என்னால எப்பவும் மறக்கமுடியாது. அதே மாதிரி, ‘ஆர்கே நகர்’ பட புரொமோஷனுக்காக வெங்கட்பிரபு, வைபவ் எல்லாரும் வந்திருந்தாங்க. அந்த நிகழ்ச்சியை நான்தான் தொகுத்து வழங்கினேன். ஹோஸ்ட் பண்ணிட்டு இருக்கும்போது என்னுடைய சவுரி முடி அவிழ்ந்து விழுந்து ஒரே பப்பி ஷேமாகிடுச்சு. எல்லாரும் சிரிச்சிட்டாங்க. ஆனாலும், மேனேஜ் பண்ணி ஷோவைக் கொண்டு போயிட்டேன். ஷோ முடிஞ்சதும் ‘நல்லா ஆங்கரிங் பண்ணீங்க’ன்னு எல்லாரும் பாராட்டினாங்க.’’

``இப்பவும் ஆங்கரிங் பண்ணிட்டிருக்கீங்களாமே..?’’

``நிறைய ஈவன்ட்களைத் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். அதுதவிர, ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொடர்பாகவும் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். என்கிட்ட ஒரு குட்டி டான்ஸ் டீம் இருக்காங்க. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-னு பல பிரைவேட் ஈவன்ட்களை எடுத்துப் பண்ணிட்டிருக்கோம். பல கார்ப்பரேட் கம்பெனிகளில் நடக்கிற ஈவன்ட்களுக்கு கோரியோகிராபி பண்ணிட்டிருக்கோம்.’’