Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “பாம்பா நடிச்சவ பாம்பை விரட்டினேன்!”

வைகா
பிரீமியம் ஸ்டோரி
வைகா

நான் அதிகமா பேச மாட்டேன். கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்லுவேன். மிர்ச்சி விஜய் கலகலன்னு பேசுற ஆள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு

ஆங்கர் to ஆக்டர்: “பாம்பா நடிச்சவ பாம்பை விரட்டினேன்!”

நான் அதிகமா பேச மாட்டேன். கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்லுவேன். மிர்ச்சி விஜய் கலகலன்னு பேசுற ஆள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு

Published:Updated:
வைகா
பிரீமியம் ஸ்டோரி
வைகா

‘`எனக்கு மாடர்ன் டிரஸ்தான் ரொம்பப் பிடிக்கும். சீரியலுக்காக எட்டு மாசம் தினமும் சேலையிலேயே நடிக்க வேண்டியிருந்தது. பேன்ட், ஷர்ட் போட்டுப் பழக்கப்பட்ட எனக்கு டக்குனு சேலைக்கு மாறவும் அது செளகரியமா இல்லை. சீரியலுக்காகப் பொறுத்துக்கிட்டு நடிச்சேன்’' என்றபடி பேசத் தொடங்கினார் வைகா. ‘கலர்ஸ்’ தமிழில் ஒளிபரப்பான ‘அம்மன்’ தொடரில் பாம்பாக நடித்து அனைவரையும் மிரள வைத்தவருடன் ஒரு ஜாலி சாட்!

“நான் மீடியாவுக்குள்ள வந்ததே தற்செயல்தான். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வேடிக்கை பார்க்கிறதுக்காகப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துத் தேடி வந்த வாய்ப்புதான் ‘Alexander The Great’ என்கிற மலையாளத் திரைப்படம். 2010-ல் நடிச்சேன். அதுக்கு அடுத்து ரெண்டு வருஷம் கழிச்சுதான் அடுத்த பட வாய்ப்பு வந்தது. எங்க வீட்ல யாரும் மீடியாத் துறையைச் சார்ந்தவங்க இல்லைங்கிறதனால மீடியா எனக்கு ரொம்பவே புதுசு. அந்தப் படத்திற்குப் பிறகு நானா எந்தப் பட வாய்ப்பும் தேடலை. 2012-ல் மீண்டும் என்னைத் தேடிப் பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. ரெண்டு வருஷத்துக்குள்ளேயே 12 படங்களில் நடிச்சேன். பி.ஜி படிக்கணும்னு 2015-ல் பிரேக் எடுத்துக்கிட்டேன்.

ஆங்கர் to ஆக்டர்:  “பாம்பா நடிச்சவ பாம்பை விரட்டினேன்!”

எங்க ஃபேமிலி தவிர்த்து சொந்தக்காரங்க எல்லாரும், நான் நடிக்கிறேன்னு எங்ககிட்ட பேசக் கூட மாட்டாங்க. அப்போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். இப்ப எல்லாம் மாறிடுச்சு. எனக்குப் பிறகு என் அக்கா ரெம்யாவும் மீடியாவுக்குள் வந்துட்டாங்க. இப்ப அவங்க விஜய் டி.வி-யில் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் நடிச்சிட்டிருக்காங்க” என்றவர், தொடர்ந்து பேசினார்.

“ ‘Dare The Fear’ என்கிற ரியாலிட்டி ஷோ மூலமா மறுபடி மீடியாவிற்குள் என்ட்ரியானேன். தொடர்ந்து மலையாளப் படங்கள், சீரியல்கள் பண்ணினேன். தவிர, மலையாளத்தில் ஆங்கரிங்கும் பண்ண ஆரம்பிச்சேன். ‘கலர்ஸ்’ தமிழில் ஒரு நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்றதுக்கு மலையாளமும் தமிழும் கலந்து பேசுற பொண்ணு வேணும்னு தேடியிருக்காங்க. அப்ப மலையாளத்தில் நான் நடிச்ச ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்னைப் பத்திச் சொல்லியிருக்கார். அப்படித்தான் ‘கலர்ஸ் காமெடி நைட்ஸ்’ நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் சேர்ந்து தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைச்சது.

நான் அதிகமா பேச மாட்டேன். கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்லுவேன். மிர்ச்சி விஜய் கலகலன்னு பேசுற ஆள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. தமிழ் கலந்து மலையாளத்தில் பேசணும் என்பதும் சிரமமான ஒன்றுதான். அதே மாதிரி எனக்கு ஃபேமஸ் ஆன காமெடி பன்ச் தெரியும். ஆனா, கவுண்டமணி - செந்தில் காமெடி எல்லாம் அந்த அளவுக்குப் பரிச்சயம் இல்லை. எங்க ஷோவுக்கு கெஸ்ட்டா ஒருமுறை செந்தில் சார் வந்திருந்தார். அப்ப வாழைப்பழ காமெடியை விஜய் சொன்னார். எனக்கு அது என்னன்னே புரியல. அதுக்கப்புறம் நிறைய தமிழ் காமெடிகள் பார்க்க ஆரம்பிச்சேன்.

ஆங்கர் to ஆக்டர்:  “பாம்பா நடிச்சவ பாம்பை விரட்டினேன்!”

ஆங்கரிங் மூலமாத்தான் அம்மன் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் ‘வாசுகி’ என்கிற கேரக்டரில் பாம்பாக நடிச்சேன். எனக்குக் கோபம் வரும்போதெல்லாம் பாம்பாக மாறிடுவேன். விஷுவல் எபெக்ட் எல்லாம் பண்ணி டி.வி-யில் பாம்பு மாதிரி என்னைப் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. ஒன்றரை மணி நேரம் அந்த சீரியலை டெலிகாஸ்ட் பண்ணினாங்க. அதனால தினமும் ஷூட் இருக்கும். என்னுடைய கேரக்டர் தினமும் டிராவல் ஆகுற மாதிரி இருந்தது. படத்திற்காக ரெண்டு, மூணு நாள் தேதி ஒதுக்க வேண்டியிருந்தது. அதனால, வேற வழியில்லாம என் கேரக்டரை முடிக்க வேண்டியதாகிடுச்சு. அந்தக் கேரக்டர் பண்ண முடியலைங்கிற வருத்தத்தில் ரெண்டு நாளா நான் தூங்கவே இல்லை.

பாம்பாக நடிச்சதனாலேயா என்னன்னு தெரியல... பாம்பைப் பார்த்தாலே இப்ப பயம் இல்லாமப்போயிடுச்சு. செட்ல ஒரு முறை நிஜப் பாம்பு வந்துச்சு. எல்லாரும் பயந்து அலறினாங்க. நான் என்னன்னா பூனையை விரட்டுற மாதிரி பாம்பை விரட்டிட்டு இருந்தேன். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றி வாழ்ந்துட்டேன் போல!” என்று சிரிக்கிறார்.