Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “இளையராஜா என் மாமாதான்!”

விலாசினி
பிரீமியம் ஸ்டோரி
விலாசினி

ஆங்கரிங் தவிர எதுவும் தெரியாததனால் அதிலேயே முயற்சி பண்ணினேன். கடைசியா 2013-ல் ராஜ் டி.வி-யில் ‘சூப்பர் டான்சர்ஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன்.

ஆங்கர் to ஆக்டர்: “இளையராஜா என் மாமாதான்!”

ஆங்கரிங் தவிர எதுவும் தெரியாததனால் அதிலேயே முயற்சி பண்ணினேன். கடைசியா 2013-ல் ராஜ் டி.வி-யில் ‘சூப்பர் டான்சர்ஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன்.

Published:Updated:
விலாசினி
பிரீமியம் ஸ்டோரி
விலாசினி

‘‘வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மொத்தமா சறுக்கி மீண்டும் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. உடைஞ்சு உட்கார்ந்திடாம தொடர்ந்து வேலைகளைத் தேட ஆரம்பிச்சேன். அதற்காகக் கடினமா உழைச்சேன். அந்த உழைப்பின் பலன் இப்ப கிடைக்க ஆரம்பிச்சிருக்கு!’’ எனத் தன்னம்பிக்கை ததும்பப் பேச ஆரம்பித்தார் விலாசினி @ ஹாசினி. ஆங்கராகவும், பண்பலை தொகுப்பாளராகவும் நம்மிடையே அறிமுகமானவர். தற்போது, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாவம் கணேசன்’ தொடரில் ‘சித்ரா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“ரேடியோ சிட்டி ஆங்கராகத்தான் என் மீடியாப் பயணம் ஆரம்பிச்சது. அப்புறம் டி.வி-யில் ஆங்கரிங் ட்ரை பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். ஆனந்த கண்ணன் எனக்கு நண்பர். அவர்கிட்ட சொல்லி சன் மியூசிக்கில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைக்குமான்னு கேட்டிருந்தேன். அவரும் வாய்ப்பு வரும்போது சொல்றேன்னு சொல்லியிருந்தார். பொதுவாக, அப்போதெல்லாம் நான் எங்கே ஆடிஷனுக்குப் போனாலும் என்னுடைய டஸ்கி ஸ்கின் டோனை காரணம் காட்டி ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ஃபைனல் ஆடிஷன் வரைக்கும் போய் என்னுடைய நிறத்தினால் நிராகரிக்கப்பட்டிருக்கேன். அப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமா இருக்கும்.

பிறகு, ஆதவன்கிட்ட ஆதித்யா டி.வி-யில் ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லச் சொல்லிக் கேட்டிருந்தேன். அவர் கேட்டுட்டு ஆடிஷனுக்கு வரச் சொன்னார். நான் சில நடிகர்களை இமிட்டேட் பண்ணிப் பேசுவேன். அதெல்லாம் ஆடிஷனில் பண்ணிக் காட்டினேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்ததால என்னை செலக்ட் பண்ணினாங்க. நான் ஆதித்யாவில் சேர்ந்த சமயம் நான் மட்டும்தான் அங்கே பெண் ஆங்கர். அதனால, பெரும்பாலான ஷோக்கள் என்னுடைய காம்பினேஷனில் இருக்கும். ‘அலட்டல் அலமேலு’ன்னு ஒரு லைவ் ஷோ பண்ணினேன். அந்த ஷோ முழுக்க கோவை சரளா மேம் மாதிரி பேசி ஆங்கரிங் பண்ணுவேன். அதுதான் என்னுடைய முதல் ஷோ. பிறகு, ஈரோடு மகேஷ், ஆதவன்கூட சேர்ந்து ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். சன் டி.வி, ஆதித்யா, சன் மியூசிக்கிற்காக கிரெடிட் லைன்களும் படிக்க ஆரம்பிச்சேன். இப்படியே போயிட்டிருந்தப்போ அவங்ககிட்ட சூரியன் எஃப்.எம்-மில் ஆர்.ஜே பண்ண வாய்ப்பு கேட்டேன். நான் ஏற்கெனவே ஆர்.ஜே-வாக இருந்ததனால் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிப் பண்றேன்னு சொன்னேன். ஆனா, அவங்க அதைப் பெருசா எடுத்துக்கல. சரின்னு, ஆங்கரிங்கிலிருந்து விலகி மறுபடியும் ரேடியோவிற்கு வந்தேன்.

ஆங்கர் to ஆக்டர்: “இளையராஜா என் மாமாதான்!”

ரேடியோவில் ஆர்.ஜே-வாக இருக்கும் போது தற்செயலா டப்பிங் வாய்ப்பு அமைஞ்சது. படங்களுக்கு டப்பிங் பேச ஆரம்பிச்சேன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் ரெஜினாவிற்கு நான்தான் டப்பிங் பேசினேன். அப்போதிலிருந்து இப்ப ‘சக்ரா’ வரைக்குமே ரெஜினாவிற்கு நான்தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே மாதிரி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் திவ்யாவிற்கும் நான்தான் டப்பிங் பேசினேன். இப்படி டப்பிங்கிலும் பிசியாக இருந்தப்போதான் எனக்குத் திருமணம் ஆச்சு. தவறான வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ததனால் என்னுடைய கரியர் மொத்தமும் போச்சு. அதுவரை சம்பாதிச்சு வச்சிருந்த பெயர், புகழ், பணம்னு எல்லாம் கைவிட்டுப் போச்சு. வாழ்க்கையில் பயங்கர போராட்டத்தை எதிர்கொண்டேன்.

மறுபடியும் என் அம்மா, அப்பாவுக்காக ஓடணும்னு முடிவு பண்ணினேன். ஆங்கரிங் தவிர எதுவும் தெரியாததனால் அதிலேயே முயற்சி பண்ணினேன். கடைசியா 2013-ல் ராஜ் டி.வி-யில் ‘சூப்பர் டான்சர்ஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதனால, ஆங்கரிங்கிலேயே மீண்டும் கரியரை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். விஜய் டி.வி-யில் அதற்காக முயற்சி பண்ணும் போது பிரதீப் சார்தான் ‘இங்கே ஆங்கரிங்கிற்கு நிறைய பேர் இருக்காங்க. நீங்க ஆர்ட்டிஸ்ட் ஆக முயற்சி பண்ணுங்க’ன்னு சொன்னார். நடிக்கிறதுக்கு என்ன வகையில் நான் செட்டாவேன்னு எனக்கு தெரியல. ஏற்கெனவே, என் ஸ்கின் டோனை பல இடங்களில் காரணம் காட்டினதனால சீரியலில் எந்தக் கேரக்டருக்கு நம்ம முகம் செட் ஆகும் என்கிற தயக்கம் இருந்துச்சு.

எதேச்சையா அருண் - அரவிந்த் ட்வின்ஸ்கிட்ட என் போட்டோ கொடுத்து வச்சிருந்தேன். அவங்க என் புகைப்படத்தை சீரியல் காஸ்டிங் லிஸ்டில் கொடுத்திருக்காங்க. அந்த ஷோவுடைய எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் காயத்ரிக்கு என்னை ஏற்கெனவே தெரியும் என்பதால் அவங்க என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க. அப்படித்தான் ‘பாவம் கணேசன்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது.

கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டி.வி-யில் ‘ராஜபார்வை’ என்ற ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சது. ‘இளையராஜா’ என்னுடைய சொந்த மாமா என்பதால் ரீ- என்ட்ரியில் என் மாமாவுடைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்துச்சு. அந்த ஷோவில் யுவன் கலந்துக்கிட்டபோது என் ஆங்கரிங் பார்த்துட்டு, ‘ரொம்ப வருடம் கழிச்சு ஆங்கரிங் பண்ற. நல்லா பண்ணியிருக்க... இன்னும் நிறைய ஷோ ஆங்கரிங் பண்ணு’ன்னு வாழ்த்து சொன்னார்” என்று உற்சாகமாகிறார்.