Published:Updated:

`அந்த ஸ்பாட்லயே ஈகோ காணாம போயிடுச்சு..!’ - சந்திரன் - அஞ்சனா ஜோடியின் பர்சனல் ஷேரிங்ஸ்

சந்திரன், அஞ்சனா
சந்திரன், அஞ்சனா

``நான் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். அஞ்சனாவுக்காக இல்ல, எல்லாப் பெண்களுக்காகவும் இதைச் சொல்றேன்...''

காதல், திருமணம், குழந்தை என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்பு முதிர்ச்சிபெற்று வெவ்வேறு பரிமாணங்களை அடையும். கோலிவுட்டின் க்யூட்டான நட்சத்திர ஜோடி சந்திரமெளலி- அஞ்சனா. குழந்தை பிறந்த பிறகு காதல் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்டனர்.

சந்திரமெளலி
சந்திரமெளலி

`கயல்’ சந்திரமெளலி

``குழந்தை பிறந்த பிறகு, என் லைஃப் ஸ்டைல் பெருசா மாறல. ஆனா, அஞ்சனாவுக்கு தூக்கம், உணவு-ன்னு எல்லாமே மாறிடுச்சு. நான் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். அஞ்சனாவுக்காக இல்ல, எல்லாப் பெண்களுக்காகவும் இதைச் சொல்றேன். ஆண்கள், தங்கள் மனைவியின் பிரசவத்தின்போது கண்டிப்பா கூட இருக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வரணும். காதல், காமம் இது எல்லாத்தையும் தாண்டி, அவங்க மேல ஒரு மிகப்பெரிய மதிப்பு வரும்.

நான், அஞ்சனா துடிச்சதை கூட இருந்து பார்த்தேன். இவ்வளவு நாள் எனக்குள்ள இருந்த ஈகோ, அந்த ஸ்பாட்லயே காணாமப் போச்சு. அதே மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க தங்களோட கணவர் பெயரை இனிஷியலா மாத்துறதிலும் எனக்கு உடன்பாடு இல்ல. அஞ்சனா, இப்போ வரைக்கும் எங்கேயுமே தன்னோட பேரை மாத்தல. பாஸ்போர்ட், பான் கார்டு எல்லாவற்றிலும் அஞ்சனா ரங்கன்னு இருக்குறத, கல்யாணம் ஆனதும் ஒரேநாள்ல அஞ்சனா சந்திரமெளலி-ன்னு மாத்துறதுல ஒரு அர்த்தமும் இல்ல. ’’

சந்திரமெளலி
சந்திரமெளலி

``எங்களுக்குள்ள நிறைய சண்டைகள் வரும். ஆனா, யாராவது ஒருத்தர் ஈகோவை விட்டுட்டு பேசத் தொடங்கிடுவோம். லவ் பண்ணும்போதிலிருந்தே, `நீ இத மாத்திக்கோ, அப்படி மாறு'-ன்னு ரெண்டு பேருமே சொல்லிக்கிட்டது கிடையாது. `நீ, நீயா இரு. நான், நானா இருக்கேன்'. இதுதான் எங்க பாலிசி. நான், போன்ல வீடியோஸ் பார்க்குறதுல நேரம் செலவிடுவது அஞ்சனாவுக்கு பிடிக்காது.

திட்டிக்கிட்டே இருப்பாங்க. நான் போன்ல வாட்ஸ்அப், ஃபேஸ்புக்-லாம் பார்க்க மாட்டேன். பயனுள்ள வீடியோக்களைப் பார்ப்பேன். அவங்களுக்கும் அது புரியும். ஆனாலும் திட்டுவாங்க. நான் அதை ரசிப்பேன்.’’

என்று சந்திரன் புன்னகை வீச, அஞ்சனா நமக்குக் கொஞ்சம் காதல் பாடம் நடத்தினார்.

சந்திரன், அஞ்சனா
சந்திரன், அஞ்சனா

``லவ் பண்றவங்க வாழ்கைல நிம்மதியா இருக்கணும்னா, நான் ஒரு ஃபார்முலா சொல்றேன். காதலர்கள், கணவன்-மனைவி யாரா இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரின் போனை மட்டும் எடுத்துப் பார்க்காதீங்க. நம்ம இணைக்கு ஒரு சின்ன பர்சனல் ஸ்பேஸ் கொடுக்கணும். நானும் சந்திரனின் போனை எடுத்துப் பார்க்க மாட்டேன். சந்திரனும் என் போனைப் பார்க்க மாட்டார்.

Vikatan
அஞ்சனா
அஞ்சனா

புரிதலும் நம்பிக்கையும்தான் காதலின் அடித்தளம். தேவையில்லாம போனைப் பார்த்து நாமளே கற்பனை பண்ணி, `அந்தப் பொண்ணுகிட்ட நீ பேசுவியா, இந்த பொண்ணுகிட்ட நீ பேசுவியா'-ன்னு மாத்தி மாத்தி சண்டைபோட்டு, ஸ்ட்ரெஸ் ஆகுறதுல எந்த அர்த்தமும் இல்ல. இருக்குறது ஒரே லைஃப். ஹேப்பியா வாழ்ந்துட்டு போயிரலாம்’’ என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு