Published:Updated:

``வாழ்க்கைல கல்யாண வீடியோவே பார்க்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்... ஏன்னா?'' - அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

`` `அறந்தாங்கி' நிஷாவா... அந்த ஆயா யாருனு என்னை மறந்துடுவாங்களே?” என்று கலகலச் சிரிப்போடு பேச ஆரம்பிக்கிறார் அவர்.

``கொரோனாவால வீட்டுலே இருந்து பிள்ளைகளை சமாளிக்கிறதே பெரும் வேலையா இருக்கு. இதுக்கு நடுவுல வீட்டு வேலைகள் பார்த்துக்கிட்டே மக்களை சந்தோஷப்படுத்திட்டிருக்கேன்.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

இல்லைன்னா 'அறந்தாங்கி' நிஷாவா... அந்த ஆயா யாருன்னு என்னை மறந்துடுவாங்களே?” என்று கலகலச் சிரிப்போடு பேச ஆரம்பிக்கிறார் நிஷா.

இந்த க்வாரன்டீன் நாள்கள் எப்படிப் போயிட்டிருக்கு?

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

``டாஸ்மாக்கை திறந்துவிட்ட மாதிரி பியூட்டி பார்லரையும் திறந்தா நாங்களும் அப்பப்போ அங்க போய் வந்துப்போம். எனக்காக சொல்லலை. பொதுவா சொல்றேன். மத்தபடி, வீட்டுக்குள்ளே இருந்து என் வீட்டுக்காரரோட மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருக்க கொஞ்சம் கொடூரமாதான் இருக்கு. லாக்டெளனுக்கு முன்னாடி எல்லாம் நாலஞ்சு நாள் ஷூட்டிங் போகும்போது `உங்களை ரொம்ப மிஸ் பண்ணறேன் மாமா. உங்ககூட இருந்தா ரொம்ப நல்லாருக்கும்’னு அங்க இருந்து மெசேஜ் அனுப்புவேன். அதுக்கு அவர், ‘ஆமா தங்கம். சீக்கிரம் வா’ன்னு ரிப்ளை பண்ணுவார். ஆனா இப்ப,`எப்போ இந்த லாக்டெளன் முடியும். எப்ப நீ ஷூட்டிங் கிளம்புவ, வீட்டை விட்டு கிளம்பு’னு ஒரே டார்ச்சர் பண்றார்.”

லாக்டெளன்ல மிஸ் பண்ற விஷயம்?

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

``இந்தச் சூழல்ல கோயில்கள், பள்ளிவாசல் எல்லாம் மூடப்பட்டிருக்கு. அங்க போக முடியலைனு வருத்தம் இருக்கு. இதுவரைக்கும் நான் மதம் சார்ந்து எங்கேயும் பேசினது இல்லை. ஆனா, இங்க பதிவு பண்ண விரும்பறேன். ரமலான் மாதத்துல நோன்பு கஞ்சியை பள்ளிவாசல்ல எல்லாரும் உணவா வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, இந்த வருஷம் சமூக இடைவெளியோட நோன்பு கஞ்சி வாங்கிட்டுப் போக அனுமதி தந்திருக்கலாம். அது நடக்காமப் போனது எனக்கு ரொம்ப வருத்தமான விஷயம்.”

கொரோனா சமயத்துல உங்க வீட்டுக்குள்ள என்ன மாதிரியான காமெடி எல்லாம் நடந்துக்கிட்டிருக்கு?

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

``எங்களை மாதிரி நகைச்சுவை கலைஞர்கள் வீட்டுல நடக்குற களேபரங்களையும் சேர்த்துதான் காமெடியா மாத்தி ஸ்டேஜ்ல பர்ஃபார்ம் பண்ணுவோம். இந்தச் சமயத்துல எல்லாரும் வீட்டுக்கு வெளிய வேப்பிலைய கட்டுறது, மஞ்சத்தண்ணி தெளிக்கிறதால நானும் எங்க மாமா கிட்ட, வெளிய போயிட்டு வந்தா மஞ்சத்தண்ணில கால் கழுவிட்டு வீட்டுக்குள்ள வரச் சொல்வேன். அதுக்கு அவர், `அதெல்லாம் எதுக்கு தங்கம். நீ சமைச்சதை எடுத்து வந்து வாசல்ல வெச்சிட்டா கொரோனா திரும்பி பார்க்காம ஓடிப்போயிரும்’கிறார். அப்புறம் `கொரோனா பொண்ணுங்களை எல்லாம் ஒண்ணும் பண்ணாது. ஒரு வைரஸ் இன்னொரு வைரஸை எப்படித் தாக்கும்னு கிறுக்குத்தனமா காமெடி பண்ணிக்கிட்டிருப்பார். இதுல இருந்து விடுதலை கிடைக்க சீக்கிரம் வெளிய வரணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.”

பசங்க பயங்கர சேட்டையா?

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

``ரொம்ப நாள் கழிச்சு நாங்க ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பிறந்துருக்கு. அவ எங்களோட பொக்கிஷம். இப்ப அவளோட நேரம் செலவிடுறது சந்தோஷமா இருக்கு. என் பெரிய பையன்தான் செம சேட்டை. ஒரு மாசம் லீவு கிடைச்சிருக்குனு எங்க கல்யாண ஆல்பம், வீடியோ எல்லாம் பார்த்துட்டு, `நான் எங்க... என்னை விட்டுட்டு ஏன் மாலை போட்டு கல்யாணம் பண்ணியிருக்கீங்க’னு அழுது ஒரு வழி பண்ணிட்டான். `இல்லடா, அப்ப நீ தூங்கிட்டு இருந்த’னு சொல்லி சமாளிச்சோம். இனிமே, வாழ்க்கைல கல்யாண வீடியோவே பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

என்ன விஷயங்கள் இந்த லாக்டெளன்ல கத்துக்கிட்டீங்க?

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

``சமாளிக்கக்கூடிய சேமிப்பு எல்லார்க்கிட்டையும் கட்டாயம் இருக்கணும்னு அதோட அவசியத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். இப்ப என்னோட கணவர் சம்பாத்தியம் இருக்குறதால ஓரளவு சமாளிக்கிறோம். இதை வேற அவர் அடிக்கடி சொல்லி கிண்டல் பண்ணுவார். `என் காசுலதான் இப்ப சாப்பிடுற. நான் நில்லுனா நிக்கணும். உட்காருன்னா உட்காரணும்’னு சீன் போடுறார்."

லாக்டெளன் முடிஞ்சதும் போக நினைக்கிற இடம்?

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

``தீவிரவாதியைப் பிடிச்சு உள்ள வெச்ச மாதிரி வீட்டுக்குள்ளே ஒரு மாசமா இருக்கேன். முன்னாடி எல்லாம் ஷூட்டிங்ல திட்டு வாங்கிட்டு வந்தா என் முகத்தைப் பார்த்ததும் மாமா கண்டுபிடிச்சிடுவார். `வா, வெளிய போலாம்’னு வண்டில சும்மா காவேரி பாலத்துல ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம். அந்த மாதிரி சும்மாவாச்சும் வெளிய போய் ஒரு கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டாலும் சந்தோஷம்தான்.”

அடுத்து என்ன புராஜெக்ட் பண்ண இருக்கீங்க?

``அஜீத் சாருக்கு ஹீரோயினா நடிச்சே ஆகணும்கிறது என் வாழ்நாள் லட்சியம் (சிரிக்கிறார்). அது சீக்கிரமே நிறைவேறிடும்னு நினைக்கறேன். ரெண்டு மூணு படத்துல கேரக்டர் ரோல் கேட்டிருக்காங்க. கொரோனா சரியானதும் போய் பார்க்கணும். அதைத் தவிர, இப்ப விஜய் டிவில ஒரு ஷோ ஆங்கர் பண்ணிட்டிருக்கேன்.”

அடுத்த கட்டுரைக்கு