சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: பீகேர்ஃபுல்!

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா

நம்ம மக்கள் ரெண்டு டைப்பா இருக்காங்க. ஒரு குரூப் அநியாயத்துக்குப் பீதியில இருக்காங்க.

‘கொரோனாப் பிணிக் காலத்தை எதிர்கொள்வதில் நீங்கள் ஃபாலோ செய்யும் சில விஷயங்களைப் பகிர முடியுமா’ என இவர்களைக் கேட்டோம்.

அர்ச்சனா

நம்ம மக்கள் ரெண்டு டைப்பா இருக்காங்க. ஒரு குரூப் அநியாயத்துக்குப் பீதியில இருக்காங்க. கூரியர் ஆள் வந்தாலோ, ஏன் நம்ம வீட்டுல வேலை செய்றவங்க வீட்டுக்கு வர்றப்பக்கூட இவங்களாலதான் கொரோனாக் கிருமி வீட்டுக்குள்ள வருதுனு நினைக்கிறவங்க இவங்கதான். இது தேவையில்லாத பீதி.

இன்னொரு டைப் ஆளுங்க, ‘அட விடுங்கப்பா, ஒன்றரை வருஷமா பார்த்துட்டுதானே இருக்கோம்’னு அசால்ட்டா மாஸ்க்கூடப் போடாம வெளியில சுத்திட்டிருக்கிறாங்க. இவங்க பண்றதும் ரொம்பத் தப்பு.

விகடன் TV: பீகேர்ஃபுல்!

இந்த ரெண்டு டைப்பாவும் இல்லாம, நடுநிலையா இருக்கறதுதான் இப்போதைக்கு ரொம்பவே அவசியம். நான் அப்படித்தான் இருக்கேன். சானிட்டைசர், மாஸ்க், சோஷியல் டிஸ்டன்ஸ் இந்த மூணுமே ரொம்ப முக்கியம். சம்மர்னு வீட்டுல ஏசியை ஆன் பண்ணிட்டுத் தூங்காதீங்க. கூடுமானவரை எல்லா ஜன்னலையும் திறந்து வச்சிருங்க.

என்னுடைய மாமனார், மாமியார் இப்பதான் மீண்டு வந்தாங்க. கணவருக்கும் பாதிப்பு இருந்தது. ஆஸ்பிடல்ல பெட் போதுமான அளவு இல்லைங்கிறதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். அதனால சுயப் பொறுப்புணர்வோட நடந்துக்கிடறதுதான் ஒரே வழி.’’

ரச்சிதா

“எங்களுடைய கிச்சன் கடந்த ஒரு வருஷமாகவே ஒரு மினி க்ளினிக்தான். காலையில காபி, டீக்குப் பதிலா கசாயம், கபசுரக் குடிநீர்தான். கபசுரக் குடிநீர் தினமும் எடுத்துக்க வேண்டாம். வாரத்துக்கு ரெண்டு நாள்.

காலை டிபன்ல பூண்டு சட்னி, இஞ்சி சட்னி மூணு நாளுக்கொரு முறை இருக்கும்.

மதிய சாப்பாட்டுல தினமும் ரசம் இருக்கும். மிளகு, மல்லி, சீரகம் மூணும் தூக்கலா இருக்கிற ரசம் அது.

விகடன் TV: பீகேர்ஃபுல்!

நெல்லிக்காய் தினசரி பச்சையா ஆளுக்கொண்ணு சாப்பிடுவோம். அப்பப்ப நெல்லிக்காய் சாதமும் செஞ்சு சாப்பிடலாம். சாயங்காலம் ஏதாவதொரு சுண்டல்.

ராத்திரி படுக்கப்போறதுக்கு முன்னாடி வேப்பிலை, மஞ்சள் போட்டுக் கொதிக்க வச்ச தண்ணியில ஆவி பிடிச்சிட வேண்டியதுதான்.

இதை எல்லாத்தையும் பண்றதோட ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தைச் செய்துட்டு வர்றோம். அவசியம் இல்லாம வீட்டு கேட்டைத் தாண்டறதே இல்லை.’’