Published:Updated:

"உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை...!" - சாராவின் வைரல் பதிவு!

சாரா - அர்ச்சனா

"உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற வெறுப்புகளை ஊக்கப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை!" - சாராவின் பதிவு.

"உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை...!" - சாராவின் வைரல் பதிவு!

"உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற வெறுப்புகளை ஊக்கப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை!" - சாராவின் பதிவு.

Published:Updated:
சாரா - அர்ச்சனா

தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர், அர்ச்சனா. பிறகு, பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு பலரது பாராட்டையும் பெற்றார். தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் இவரும், இவரது மகள் சாராவும் சேர்ந்து நடித்து பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான `தாயில்லாமல் நானில்லை' நிகழ்ச்சியை அர்ச்சனாவும், அவருடைய மகள் சாராவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்ததை அடுத்து சாரா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது தொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

சாரா - அர்ச்சனா
சாரா - அர்ச்சனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நானும், என் அம்மாவும் இணைந்து ஆங்கரிங் பண்ணின ஒரு நிகழ்ச்சிக்கு எங்களுக்கு நிறைய ஹேட் கம்மென்ட்ஸ் வருது. அதற்கு என்ன காரணம் என எங்களுக்கு தெரியவில்லை. அதிலும் குறிப்பாக, பெண்களே என்னையும், என் அம்மாவையும் பற்றி தகாத மொழிகளில் பேசுகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களுக்கு எங்களை பிடிக்கவில்லை எனில் உங்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது எங்களை அதிகமாக பாதிக்கிறது. உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற வெறுப்புகளை ஊக்கப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

சாரா - அர்ச்சனா
சாரா - அர்ச்சனா

அர்ச்சனா அவருடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவிற்கும் பல நெகட்டிவ் கம்மென்டஸ் வந்தன. பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்த பிறகும் இது போன்ற நெகட்டிவ் கம்மென்ட்ஸ்களை எதிர் கொண்டார். விஜய் டிவியில் பிக்பாஸிலிருந்து அர்ச்சனா வந்தவுடன் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அர்ச்சனாவுடன்,சாராவும் நடனம் ஆடியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நெகட்டிவ் கம்மென்ட்ஸ் எந்த அளவிற்கு தன்னை பாதிக்கிறது என்பதை எதார்த்தமாகவும், மற்றவர்களுக்கு புரியும்படியும் பேசியிருப்பார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism