Published:Updated:

" 'பொன்மகள் வந்தாள்' விக்கி - மேக்னா, நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா?!"

`பொன்மகள் வந்தாள்' தொடரில் நடிக்கும் ஹீரோவும், ஹீரோயினும் நிஜ வாழ்வில் இணைகிறார்களா?!

விக்கி - மேக்னா
விக்கி - மேக்னா

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிற சீரியல், `பொன்மகள் வந்தாள்'. விஜய், சிம்ரன் நடிப்பில் `ஒப்பந்தத் திருமண'த்தைப் படமாகக் காட்டினார்களே... அதே `ப்ரியமானவளே' வகைக் கதைதான். தங்களுக்கு நடந்தது `ஒப்பந்தத் திருமணம்' என்பது ஹீரோ, ஹீரோயினுக்குத் தெரியாமலேயே ஆரம்ப எபிசோடுகள் நகர்த்தப்பட்டன. ஹீரோவாக `வாணி ராணி' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த விக்கியும், ஹீரோயினாக ஆயிஷாவும் கமிட் ஆனார்கள். சில எபிசோடுகள் கடந்த நிலையில், ஹீரோயின் ஆயிஷாவுக்கு யூனிட்டுடன் பிரச்னை ஏற்பட, சீரியலிலிருந்து வெளியேறினார். பிறகு, ஆயிஷாவின் இடத்துக்கு வந்தார் `தெய்வம் தந்த வீடு' தொடர் மூலம் பரிச்சயமாகியிருந்த மேக்னா.

விக்கியுடன் மேக்னா ஜோடி சேர்ந்த நாள் முதலே சின்னத்திரை ஏரியாவில் இந்தத் தொடர் குறித்த பேச்சு கிசுகிசுக்களாகக் கிளம்பத் தொடங்கிவிட்டன.

கதைப்படி, தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் எபிசோடுகளில்தான் தனக்கு நடந்தது `அக்ரிமென்ட் மேரேஜ்' என்பது மேக்னாவுக்குத் தெரியவருகிறது.

`பிறகென்ன, இனி சீரியல் விறுவிறுப்பா போகும்ல!' என்கிறீர்களா?

சீரியலின் கதை இருக்கட்டும், சின்னத்திரை ஏரியா முழுக்க தொடர் குறித்து நிலவும் பேச்சுக்கள் அது குறித்தல்ல. அதாவது, ஆன் ஸ்க்ரீனில் நடப்பவை அல்ல. பின்னணியில் இருக்கிறது ஒரு விவகாரம்.

`தொடரைச் சுற்றி அப்படி என்ன நடக்கிறது?' - விசாரித்தோம்.

``நடக்கிறதெல்லாம் சமயங்கள்ல எங்களுக்கே வேடிக்கையா இருக்குங்க. `பிடிக்காத கல்யாணம்'ங்கிறதுதான் சீரியலோட கதை. யூனிட்கூட பிரச்னை வந்து வெளியேறினாரே, அந்த முதல் ஹீரோயின்.. தன்னோட முதல் திருமணம் தோல்வியடைஞ்ச சூழல்லதான் சீரியலுக்குள்ளே வந்தார். கொஞ்சநாள்ல அவரே வெளியேறிட்டார். அவருக்குப் பிறகு வந்த மேக்னாவுக்கு சில வருடங்களுக்கு முன்னாடிதான் திருமணம் நடந்திருந்தது. கேரளாவுல கணவர் ஜுவல்லரி பிசினஸ் பண்ணிட்டிருக்கிறதாகவும், தங்களோடது லவ் கம் அரேஞ்ச் மேரேஜ்னும் சொன்னாங்க. தொடர்ல ஹீரோவா நடிக்கிறாரே விக்கி. அவருமேகூட `வாணி ராணி'யில் நடித்த ஹரிப்ரியாவைத் திருமணம் செய்துகொண்டார். விக்கி - ஹரிப்ரியா தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

விக்கி - மேக்னா
விக்கி - மேக்னா

இந்த நிலையிலதான், சீரியலோட கதையும் ஹீரோ, ஹீரோயினோட நிஜக் கதையும் ஒரே டிராக்ல போகுதோனு எங்களுக்கு சந்தேகம்.

கதைப்படி ஹீரோவுக்கும் சரி, ஹீரோயினுக்கும் சரி தங்களுக்கு நடந்த திருமணத்தில் விருப்பமிருக்காது. அதேபோல, விக்கி - மேக்னா இருவருக்குமே அவங்கவங்க திருமண வாழ்க்கை சரியா அமையலைனு ஷூட்டிங் ஸ்பாட்லேயே எங்களால கண்டுபிடிக்க முடிஞ்சது." என்கிற யூனிட்டின் அந்த டெக்னீஷியன், முதலில் மேக்னா விவகாரம் குறித்து இப்படிச் சொன்னார்.

``கணவருக்குக் குடும்பம், மனைவி எல்லாமே பிசினஸுக்குப் பிறகுதான்கிறது, மேக்னாவுக்கு திருமணத்துக்குப் பிறகே தெரிய வந்திருக்கு. அதாவது மாடலிங், சீரியல்னு எந்த வாய்ப்பு வந்தாலும் மேக்னாவை நடிக்கச்சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்திருக்கார், அவர். உடல்நிலை சரியில்லாத சூழலிலும் நடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கார். அவரோட இந்த நடவடிக்கைகள் பிடிக்காம, கொஞ்சநாளா அம்மா வீட்டுலதான் மேக்னா இருக்கிறதா சொல்றாங்க. `அவருக்கு எந்த நேரமும் பணம்தான்; ஃப்ரெண்ட் ஒருத்தி பேச்சை நம்பி இப்படியொருத்தர்கிட்ட சிக்கிட்டேன்' எனத் தற்போது புலம்பி வரும் மேக்னா, சட்டப்படி கணவரைப் பிரிவதற்கான முயற்சியைத் தொடங்கிட்டார்." என்கிறார்.

மேக்னா விவகாரம் போலவே, ஹீரோ விக்கியின் குடும்பத்திலும் பணம்தான் பிரச்னை என்கிறார்கள், அவரை அறிந்தவர்கள். மேக்னாவுக்கு கணவர் என்றால், விக்கிக்கு அவரின் மாமியார் வீட்டிலிருந்து பிக்கல் பிடுங்கல் என்கிறார்கள் இவர்கள். சில நாள்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்த விக்கிக்கு அவரின் மனைவியிடமிருந்து போன் வர, போனிலேயே அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. ஆக, இவர்களுக்குள்ளும் பிரச்னை முற்றும் நிலையில் உள்ளதாம்.

மேக்னா தரப்பைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது அவரது எண் `நாட்-ரீச்சபிள்' ஏரியாவிலேயே இருந்தது. ஹரிப்ரியாவிடம் கேட்டதற்கு, `இந்த விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை' என மறுத்துவிட்டார்.

`பொன்மகள் வந்தாள்' யூனிட் மட்டுமல்ல, சின்னத்திரை ஏரியா முழுக்கவே உலா வரும் இன்னொரு தகவல்தான் ஹைலைட். அதாவது, விருப்பமில்லாத திருமண பந்தத்தை உடைத்து ஹீரோவும், ஹீரோயினும் சுதந்தரமான முடிவெடுப்பதுபோல்தான் தொடரின் கதை இனி நகருமாம்.

நிஜ வாழ்க்கையிலும் விக்கி - மேக்னா இருவருமே செட் ஆகாத தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேற விரும்புவதாகவும், அதன்பின் இவர்களே இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும் சொல்கிறது, அந்தத் தகவல்.