Published:Updated:

'செம்பருத்தி' தொடரிலிருந்து ஹீரோ கார்த்திக் நீக்கமா?

கார்த்திக்
கார்த்திக்

'செம்பருத்தி' தொடரில் நடித்து வரும் கார்த்திக், சமீபத்தில் ஜீ தமிழ் சேனலின் ஓடிடி தளமான ஜீ 5 தயாரித்த 'முகிலன்' என்ற வெப் சீரிஸிலும் நடித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஜீ தமிழ் சேனல் வரலாற்றிலேயே டி.ஆர்.பி-யில் நம்பர் 1 இடத்தில் வந்து மொத்த சின்னத்திரை ஏரியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சீரியல் 'செம்பருத்தி'.

பிரபலமான பிசினஸ் பெண்மணி ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரிக்கு (ப்ரியா ராமன்) இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆதியாக கார்த்திக்கும் இளைய மகன் அருணாக கதிரும் நடிக்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் சமையல் வேலைக்கு வந்து ஆதியைத் திருமணம் செய்து கொள்கிறார் பார்வதி (சபானா). இந்தத் திருமணத்தை ஆகிலாண்டேஸ்வரி ஏற்றுக் கொள்ளாததால் மகனும் மருமகளும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னொருபுறம் அகிலாண்டேஸ்வரியின் கொழுந்தனார் மனைவி வனஜா ('ஊர்வம்பு' லக்ஷ்மி) அந்த வீட்டுக்குள் இருந்து கொண்டே அகிலாவின் குடும்பத்தினருக்கு எதிரான வேலைகளைச் செய்து வருகிறார். இப்படியாகப் போகிற சீரியல் தற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

செம்பருத்தி கார்த்திக்
செம்பருத்தி கார்த்திக்
சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்தொடரிலிருந்து ஹீரோ கார்த்திக் வெளியேறி விட்டதாக கடந்த சில தினங்களாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

'செம்பருத்தி' தொடரில் நடித்து வரும் அதே வேளையில் சமீபத்தில் ஜீ தமிழ் சேனலின் ஓடிடி தளமான ஜீ 5 தயாரித்த 'முகிலன்' என்ற வெப் சீரிஸிலும் நடித்து வந்தார் கார்த்திக்.

"கார்த்திக் தானாகவே வெலியேறுவதாக அறிவித்து விட்டுச் சென்று விட்டார். மாற்று ஹீரோ கமிட் செய்து விட்டு சேனல் முறைப்படி அறிவிக்கும்" என்கிறார்கள். வேறு சிலரோ ''சீரியலில் இருந்து கார்த்திக் நீக்கப்பட்டு விட்டார். சீரியல் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் கார்த்திக்கின் இந்த திடீர் நீக்கத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை" என்றும் சிலர் சொல்கிறார்கள். கார்த்திக்கை நாம் தொடர்பு கொண்ட போது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

ஜீ தமிழ் சேனல் தரப்பைக் கேட்டதற்கு, "இப்போதைக்கு நாங்கள் இதுகுறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை" என விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு