Published:Updated:

AKS - 65 : பரத்திடம் புனிதா சொன்ன பொய்; மனம் சொல்வதைக் கேட்ட காயத்ரி!

AKS: புனிதா கொச்சினில் இருந்து கிளம்பும்போது மன வருத்தத்துடன் இருக்கிறாள். அதை கவனித்த கிஷோர் என்னவென்று கேட்கையில் முதன் முறையாக பரத்திடம் தான் பொய் சொல்லி விட்டதற்காக வருத்தப்படுவதாக புனிதா சொல்கிறாள்.

புனிதாவின் அறைக்கு மது அருந்துவதற்காக வரும் கிஷோர் தலைசுற்றி அங்கேயே படுத்து விடுகிறான். புனிதாவிற்கு பரத் வீடியோ காலில் அழைக்கிறான். புனிதா செல்போனை தவறுதலாக பிடிக்க அருகில் இருக்கும் கிஷோரை பரத் பார்த்து விடுகிறான். மீண்டும் ஒருமுறை புனிதாவிடம் கிஷோரை பற்றி பரத் கேட்க, கிஷோர் அவனுடைய அறைக்கு அப்போதே போய் விட்டதாக புனிதா பரத்திடம் பொய் சொல்கிறாள். புனிதா தன்னிடம் பொய் சொல்லுவதை முதன் முறையாக நேரடியாக கண்டுபிடித்த பரத் மனம் வருந்துகிறான். புனிதாவிடம் அப்புறமாக பேசுவதாக சொல்லி காலை கட் செய்கிறான். புனிதா கொச்சினில் இருந்து கிளம்பும்போது மன வருத்தத்துடன் இருக்கிறாள். அதை கவனித்த கிஷோர் என்னவென்று கேட்கையில் முதன் முறையாக பரத்திடம் தான் பொய் சொல்லி விட்டதற்காக வருத்தப்படுவதாக புனிதா சொல்கிறாள். பரத்திடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமே என்று புனிதாவிடம் கிஷோர் கேட்கிறான். புனிதா பரத்திற்கு இதெல்லாம் புரியாது என்று சொல்கிறாள்.

AKS
AKS

பரத்தும் புனிதாவும் சில ஆண்டுகளாக காதலிக்கிறார்கள். மேலும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். புனிதாவின் குணம், நடவடிக்கை அனைத்தும் பரத்திற்கு நன்கு தெரியும். ஏற்பாடு திருமணங்களைவிட காதல் திருமணங்களை அதிகம் ஆதரிப்பதன் நோக்கமே காதலிக்கும் நாட்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான நேரமிருக்கும் என்பதுதான். அதுவும் லிவ்-இன் உறவில் ஒரே வீட்டில் வசிக்கும்போது விரைவிலேயே ஒருவரின் கொள்கை, வாழ்க்கை முறை பற்றிய புரிதலும் நம்பிக்கையும் ஏற்படும். ஒருவர் மற்றொருவரின் கொள்கைக்கு ஏற்றவாறு மாறி கொள்ளாவிட்டாலும் அவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பது புரிந்திருக்கும்.

புனிதா பரத்திடம் பொய் சொல்ல மாட்டாள் என்று பரத்துக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் தன்னுடைய சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் புனிதாவிடம் உண்மை என்ன என்று கேட்டு அவளை பொய் சொல்லும் ஒரு இடத்துக்கு பரத் தள்ளியிருக்கிறான். சில சமயம் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக எவ்வளவு தெளிவாக சிந்திக்க கூடியவராக இருந்தாலும் உடன் இருப்பவர்கள் குழப்பம் ஏற்படுத்தும்போது பதட்டத்தில் பொய் சொல்லிவிடுவார்கள். அதுபோல புனிதா பரத்தின் தொடர்ச்சியான கேள்விகளால் சண்டைகளை தவிர்ப்பதற்காக பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

AKS
AKS

சிவாவும் மாயாவும் அலுவலகத்திற்கு வராததை கண்டு காயத்ரி எல்லோரிடமும் சிவாவைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறாள். சிவாவின் செல்போனில் இருந்து மாயா காயத்ரிக்கு அழைக்கிறாள். சிவா தன்னுடைய அறைக்கு வந்திருப்பதாகவும் தங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சொல்கிறாள். சிவாவிடம் மாயா மீண்டும் ப்ரொபோஸ் செய்து விடுவாளோ என காயத்ரி பதற்றமடைகிறாள். சிவாவை மீண்டும் அழைக்கலாமா என யோசிக்கிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் கவலையாக உட்கார்ந்திருக்கும் காயத்ரியை, புனிதா கேண்டீன் அழைத்துச் சென்று பேசுகிறாள். புனிதா நேரடியாக காயத்ரியிடம் சிவாவை அவ்வளவு காதலிக்கிறாயா என்று கேட்கிறாள். காயத்ரி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். புனிதா காயத்ரியிடம், `மனசு சொல்வதை கேள்!' என்று சொல்கிறாள்.

புனிதா
புனிதா

காயத்ரி சுந்தரை ஏற்றுக்கொள்ள நினைத்தாலும் அவள் மனம் சிவாவை சுத்தி வருவதைப் பற்றி புனிதா பேசுகிறாள். நம் மேல் அன்பு வைத்திருக்கிறார்கள், நமக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் காதல் ஏற்படுவிடாது. ஒரு உறவில் இருவருக்குமான சுதந்திரமான இடம் இருப்பது அவசியம். சுந்தரிடம் காயத்ரிக்கு அது கிடையாது. சுந்தர் அவளை அன்பாக பார்த்துக் கொள்கிறேன் என்கிற பெயரில் அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பல விசயங்களை அவள் மேல் திணிக்கிறான். காலையில் தூங்கி எழுந்திருக்கும் நேரத்திலிருந்து அவள் உடை, உணவு என எல்லாவற்றிலும் சுந்தர் தனது விருப்பப்படி தான் காயத்ரி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான். அதில் உறுதியாகவும் இருக்கிறான்.

சுந்தர் - காயத்ரி உறவில் காயத்ரிக்கு சுயமாக மூச்சுவிடும் உரிமை கூட இருக்காது. அன்பின் பெயரால் சுந்தர் காயத்ரியை மனம், உணர்வு எதுவும் இல்லாத ரோபோவாக நினைத்துக் கொண்டு தன்னுடைய உடைமையை போல் நடத்துகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவா முன்கோபக்காரனாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் சுதந்திரத்தை மதிக்கிறான். காயத்ரியின் மனம் என்ன விரும்புகிறதோ அதைத் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குவதுடன் ஆர்வமாகவும் இருக்கிறான். காயத்ரிக்கு சிவா மற்றும் சுந்தர் இருவருக்குமான வித்தியாசம் பற்றியும், சுந்தர் மற்றும் சிவாவிடம் காயத்ரிக்கு இருக்கும் உரிமை மற்றும் உறவு பற்றியும் புனிதா விளக்கமாகப் பேசுகிறாள். புனிதா காயத்ரியிடம் மனம் எப்போதும் நமக்கு சரியான விடையைத்தான் சொல்லும் என்பதால் மனம் சொல்லும் இடத்திற்குச் செல் என்று சொல்கிறாள்.

புனிதா ஊரில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று காயத்ரிக்கு அறிவுறுத்துகிறாள். ஒருவேளை ஊரில் இருப்பவர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக காயத்ரி சுந்தரைத் திருமணம் செய்து கொண்டாலும் பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று காயத்ரியிடம் கூறுகிறாள்.

காயத்ரி - சிவா
காயத்ரி - சிவா

எல்லாவற்றையும்விட என்ன தான் சுந்தர் செய்யும் எல்லாமே காயத்ரிக்கு பிரச்னையாக இருந்தாலும் அவன் காயத்ரி தன்னை காதலிப்பதாக நம்பிக் கொண்டு இருக்கிறான். காயத்ரி சிவாவை நினைத்துக் கொண்டு சுந்தரைத் திருமணம் செய்து கொள்ளும்போது அந்த திருமணம் காயத்ரிக்கு மட்டுமல்லாமல் சுந்தருக்கும் தணடனையாக முடியும்.

காயத்ரி - மாயா - சிவா
காயத்ரி - மாயா - சிவா

புனிதா பேசி முடித்ததும், தன் மனசு சொல்லும் இடத்திற்கு செல்வதாக சொல்லி செல்கிறாள் காயத்ரி. காயத்ரி மாயா தங்கி இருக்கும் ஓட்டல் அறைக்கு செல்கிறாள். மிகுந்த தயக்கத்திற்கு பிறகு அறை கதவை தட்டுகிறாள். மாயா கதவைத் திறக்கிறாள். உள்ளே டேபிளில் கேக் வைத்திருக்க, சிவா அதன் அருகில் நிற்கிறான். சிவாவின் பிறந்தநாளுக்காக மாயா வாங்கி வைத்திருக்கும் கேக்கை சிவா வெட்டுகிறான்.

முதல் துண்டு கேக்கை சிவா யாருக்குக் கொடுப்பான்.. மாயாவிற்கா? காயத்ரிக்கா?

புனிதா பரத்தை எப்படி எதிர்கொள்ள போகிறாள்?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு