Published:Updated:

AKS 68 : `காதலில் செய்யக்கூடாதவற்றை செய்யும் பரத், காயத்ரி,பாண்டியன்! என்ன அது?

காதலைப் போலவே பிரிவும் இயல்பானதுதான். ஒரு சண்டைக்குப் பிறகு பிரிவு அல்லது மீண்டும் இணைவது எதுவாக இருந்தாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகாமல், பெரிதாக சண்டையிட்டுக் கொள்ளாமல் சுமுகமாக நடந்து கொள்வது இருவருக்கும் மன உளைச்சலை தவிர்க்கும்.

AKS 68 : `காதலில் செய்யக்கூடாதவற்றை செய்யும் பரத், காயத்ரி,பாண்டியன்! என்ன அது?

காதலைப் போலவே பிரிவும் இயல்பானதுதான். ஒரு சண்டைக்குப் பிறகு பிரிவு அல்லது மீண்டும் இணைவது எதுவாக இருந்தாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகாமல், பெரிதாக சண்டையிட்டுக் கொள்ளாமல் சுமுகமாக நடந்து கொள்வது இருவருக்கும் மன உளைச்சலை தவிர்க்கும்.

Published:Updated:

பரத் புனிதாவிடம் கொச்சினில் புனிதாவும் கிஷோரும் ஒரே அறையில் தங்கி இருந்ததைப் பற்றி கேட்கிறான். வாக்குவாதம் முற்றி பரத்தும் புனிதாவும் சண்டையிட்டு பரத் வீட்டை விட்டு செல்கிறான். புனிதாவும் கோவமாக அவனை வெளியேறச் சொல்கிறாள். வீட்டை விட்டு வெளியேறிய பரத் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தெருவில் உட்கார்ந்திருக்கிறான். சிவா பரத்தைத் தேடி அலைந்து இறுதியாகக் கண்டுப்பிடித்து வீட்டுக்கு அழைக்கிறான். பரத் சிவாவிடம் புனிதாவைப் பற்றித் தவறாக பேசுகிறான். சிவா கண்டிக்கிறான்.

பரத் புனிதாவை இவ்வளவு நாள்களாகக் காதலித்து வந்திருக்கிறான். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவ்வளவு நாள்களாக ஏதோ ஒரு நம்பிக்கையும் இருந்திருக்கும். சமீபமாக நடக்கும் கிஷோரின் விசயத்தை மட்டும் வைத்துக்கொண்டு பரத் அவசரமாக புனிதாவுடனான உறவில் இருந்து வெளியேறுகிறான். அது மட்டுமல்லாமல் சிவாவிடம் புனிதாவின் நடத்தையைப் பற்றி தவறாக சொல்கிறான்.

AKS
AKS

கிஷோருக்கும் புனிதாவிற்கும் இடையில் உறவு இருக்கிறது என்பது பரத்தின் அனுமானமே தவிர அதற்கான சான்று ஒன்றும் இல்லை. எதுவும் தெரியாமல் அவசரப்பட்டு முடிவெடுத்து புனிதாவிடம் சண்டையிட்டு வெளியேறுவது அவனது தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படி வெளியேறிய பின் புனிதாவை பற்றி தவறாக மற்றவர்களிடம் பேசுவது அநாகரிகம். மட்டுமின்றி இவ்வளவு நாள்களாக இருந்த இருவருக்குமான உறவை ஒன்றுமில்லாமல் ஆக்குவதைப் போன்றது.

காதலில் கருத்து வேறுபாடுகளால் இருவர் பிரியும்போது ஒருவரைப் பற்றி ஒருவர் தூற்றிக்கொள்ளாமல் இருப்பது அவசியம். அதுவே அதற்கு முன்பு காதலில் இருந்த நாள்களுக்குக் கொடுக்கும் மதிப்பு. காதலைப் போலவே பிரிவும் இயல்பானதுதான். ஒரு சண்டைக்குப் பிறகு பிரிவு அல்லது மீண்டும் இணைவது எதுவாக இருந்தாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகாமல், பெரிதாக சண்டையிட்டுக் கொள்ளாமல் சுமுகமாக நடந்து கொள்வது இருவருக்கும் மன உளைச்சலை தவிர்க்கும். அதோடு அவரவர் மீதான நன்மதிப்பை அது தக்க வைத்துக் கொள்ள உதவும். காதலின் பிரிவில் சண்டையிட்டுக் கொள்ளும்போது சண்டையின் இறுதியில் நம்மைப் பற்றி நமக்கு மிகத் தாழ்வான, மோசமான எண்ணங்கள் உருவாகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுந்தர் காயத்ரியிடம் மறுநாள் காலை அவளை அலுவலகத்தில் டிராப் செய்ய தன்னால் வர இயலாது என்றும் கால் டாக்சியில் செல்லுமாறும் சொல்லி இருந்தான். காயத்ரி காலையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தபோது , தான் சிவாவை பார்க்கப் போய் கொண்டிருப்பதாக காயத்ரிக்கு மாயா மெசேஜ் அனுப்புகிறாள். காயத்ரி அதைப் பார்த்துப் பதறி அவசரமாக கிளம்புகிறாள். அவள் வெளியே வரும்போது எதிரில் சுந்தர் நிற்கிறான். தன்னுடைய வேலை தள்ளிப் போய்விட்டதாகவும் தானே அவளை அலுவலகத்தில் விடுவதாகவும் சொல்லி சுந்தர் அழைத்துச் செல்கிறான். காயத்ரி குழப்பத்தில் பதற்றமாக உட்கார்ந்திருக்கிறாள். சுந்தர் காயத்ரிக்கு ஒழுங்காக தூங்குவது பற்றி பாடம் எடுக்க ஆரம்பிக்கிறான். அவளை யோகா கற்றுக் கொள்ள சொல்கிறான். காயத்ரிக்கு அவையெல்லாம் காதிலேயே விழவில்லை. சுந்தரருக்கு மீண்டும் வேலை விஷயமாக அழைப்பு வர அவன் காயத்ரியை ஆட்டோ பிடித்துச் செல்லுமாறு கூறிவிட்டுக் கிளம்பிச் செல்கிறான். சுந்தர் ஆட்டோவில் போகச் சொன்னதும் அந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிகிறது.

பொதுவாக பெண்கள் தங்களுடைய உணர்ச்சிகளை எளிதாக முகத்தில் காட்டிவிடக் கூடியவர்கள். அதுவும் இருபதுகளின் முடிவுவரை பெரும்பாலான பெண்களுக்குத் தங்கள் முகமே அகக் கண்ணாடியாக எல்லா உணர்வுகளையும் பிரதிபலித்து விடும்.

AKS
AKS

காயத்ரி மனதில் என்ன நினைத்தாளோ அதை அவள் முகம் அப்படியே சுந்தரிடம் மாட்டிக் கொடுத்து விடுகின்றது. ஆனால் நல்வாய்ப்பாக சுந்தர் அவற்றையெல்லாம் தவறாக டி-கோடிங் செய்து காயத்ரிக்கு வேலை விஷயமாக அதிகமான அழுத்தம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறான்.

AKS
AKS

மாயா சிவாவை சந்திப்பதற்கு காயத்ரி பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. அல்லது காயத்ரி சிவாவை உறுதியாக காதலித்து, சிவாவுடன் இணைய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தால், சுந்தரிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டு அவனது வீட்டில் இருந்து வெளியேறி புனிதாவுடன் தங்கியிருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் சுந்தரை பற்றி எதுவுமே யோசிக்கக் கூடிய மனநிலை இல்லாமல் காயத்ரியின் மனம் சிவாவை சுற்றிக் கொண்டிருக்கிறது. காயத்ரி இதை தன்னை அறியாமல் செய்தாலும் ஒரு வகையில் அவள் சுந்தரை பேக் -அப் போல் பயன்படுத்துகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவா தான் மனதில் இருக்கிறான் என்று தெரிந்துவிட்டது. சுந்தரின் மேல் காயத்ரிக்கு ஒரு துளி கூட காதல், அன்பு இல்லாதபோது அவனது வீட்டில் இருந்து வெளியேறுவதே சரி. பெரும்பாலான பெண்கள் இந்த முடிவை எடுக்காமல் தாங்களும் குழம்பி உடன் இருப்பவர்களையும் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாண்டியன் காலை ஏழு மணிக்கே கிளம்பிக் கொண்டு இருக்கிறான். அவனது ஆடை நன்றாக இருக்கிறதா என்று கவிதாவிடம் கேட்கிறான். பாண்டியனை பொற்கொடியின் தந்தை சந்திக்க விரும்புவதால் அவன் கிளம்பிச் செல்கிறான். தனக்கு `ஆல் தி பெஸ்ட்' சொல்லச் சொல்லிக் கேட்கும் பாண்டியனிடம் கவிதா பொற்கொடி போன்று ஒரு பெண் கிடைத்தது உண்மையில் பாண்டியனின் அதிர்ஷ்டம் என்கிறாள். காயத்ரி செய்யும் தவறை இங்கே பாண்டியன் செய்கிறான். பாண்டியனுக்கு மனம் முழுவதும் தனக்கு கவிதாவின் மீது காதல் இருப்பது புரிந்திருக்கிறது.

AKS
AKS

அது புரிந்த மறுநாள் தான் பொற்கொடியின் காதலை அவன் ஏற்றுக் கொள்கிறான். அதற்குள் அவசர அவசரமாக பொற்கொடியின் தந்தையையும் தற்போது காணச் செல்கிறான். ஆனால் இன்னமும் கவிதாவை தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். இவ்வளவு தூரம் கவிதாவை விரும்பும் பாண்டியன், அவசரத்தில் பொற்கொடியிடம் காதலை ஏற்றுக் கொண்டதாக சொல்லிவிட்டு திருமணத்திற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகத் தவறு. காதலில் பொதுவாக நேரம் எடுத்துக் கொள்பவர்களே பரத் புனிதாவை போல் சண்டையிட்டு பிரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டே இன்னொரு பெண்ணின் காதலை ஏற்றுக் கொள்வது இரண்டு பெண்களுக்கும் துரோகம் செய்வதை போன்றது.

இவையெல்லாம் பாண்டியனின் சூழ்நிலை என்று சொன்னாலும் கூட குறைந்தபட்சம் பாண்டியன் பொற்கொடியின் தந்தையை சந்திப்பதையாவது தள்ளிப் போட்டிருக்கலாம். பாண்டியன் கிளம்பி சென்றதும் கவிதா அலெக்சாவை கையில் எடுத்து வைத்திருக்கிறாள். ஏற்கனவே பாண்டியன் அலெக்சாவிடம் கவிதாவை காதலிப்பதாக பேசி வைத்திருந்திருக்கிறான்.

கவிதா பாண்டியன் பேசி ; பதிவு செய்து வைத்ததை கேட்பாளா? பொற்கொடியின் தந்தையை பாண்டியன் சந்திக்கும் முன் தடுத்து விடுவாளா?

காயத்ரி மீண்டும் சிவா மாயாவின் இடையில் போய் நிற்கப் போகிறாளா?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism