Published:Updated:

AKS - 79: காயத்ரியை திருமணம் செய்ய வற்புறுத்தும் சுந்தர்; காத்திருக்கும் சிவா... மணமேடை யாருக்கு?

AKS: மருத்துவமனையில் காயத்ரி பார்க்க வரும்போது கூட அவளுக்காக எதுவும் செய்வேன் என்று கூறுகிறான். சுந்தர் அப்படிக் கூறியதை காயத்ரியின் மகிழ்ச்சிக்காக சுந்தர் எதையும் செய்வேன் என்று கூறியதாக பார்ப்பவர்கள் நினைத்திருப்பார்கள்.

AKS - 79: காயத்ரியை திருமணம் செய்ய வற்புறுத்தும் சுந்தர்; காத்திருக்கும் சிவா... மணமேடை யாருக்கு?

AKS: மருத்துவமனையில் காயத்ரி பார்க்க வரும்போது கூட அவளுக்காக எதுவும் செய்வேன் என்று கூறுகிறான். சுந்தர் அப்படிக் கூறியதை காயத்ரியின் மகிழ்ச்சிக்காக சுந்தர் எதையும் செய்வேன் என்று கூறியதாக பார்ப்பவர்கள் நினைத்திருப்பார்கள்.

Published:Updated:

சுந்தர் புனிதாவிடம் அவர்கள் நால்வரையும் உடனே திரும்பி சென்னை போகச் சொல்கிறான். திருமணத்தில் பிரச்னை செய்யக் கூடாது என எச்சரிக்கிறான். புனிதா காயத்ரிக்கும் சேர்த்து டிக்கெட் போடுமாறு சுந்தரிடம் சொல்கிறாள். சுந்தர் கோபப்படுகிறான். புனிதா பரத்துடன் லிவ்-இன் உறவில் இருப்பதை பற்றி புனிதாவின் வீட்டில் சொல்வதாக மிரட்டுகிறான். புனிதாவுக்கு பிரச்னையை உருவாக்கினால் அவள் தன் பிரச்னையில் தலையிட மாட்டாள் என்று சுந்தர் நினைக்கிறான்.

AKS
AKS

சுந்தரிடம் புனிதாவும் காயத்ரியும், காயத்ரி - சிவாவின் காதலை பற்றி சொல்லும் போது சுந்தர் தான் யாருக்கும் பிரச்னை செய்ய மாட்டேன் என்றும், ஒதுங்கிக் கொள்கிறேன் என்றும் சிவாவிற்கு வாழ்த்துகள் சொல்லி அங்கிருந்து கிளம்புவான். ஆனாலும் காயத்ரி சுந்தரின் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கும் என்று பயந்து கொண்டே இருந்தாள். காயத்ரி பயந்தது போல சுந்தர் தற்கொலைக்கு முயற்சி செய்து எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறான். மருத்துவமனையில் காயத்ரி பார்க்க வரும்போது கூட அவளுக்காக எதுவும் செய்வேன் என்று கூறுகிறான். சுந்தர் அப்படிக் கூறியதை காயத்ரியின் மகிழ்ச்சிக்காக சுந்தர் எதையும் செய்வேன் என்று கூறியதாக பார்ப்பவர்கள் நினைத்திருப்பார்கள். உண்மையில் காயத்ரியை அடைய சுந்தர் எதையும் செய்வேன் என்பதைத் தான் அப்படிக் குறிப்பிட்டு இருக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னொருவரை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக காயத்ரி சொல்லியும் கூட சுந்தர் காயத்ரியை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்வது பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தாலும் நம் ஊரில் இது சர்வ சாதாரணமாக நிகழ்வது. ஒருவருடன் காதலில் இருக்கும் பெண்களை வலுக்கட்டாயமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்கள் தாமாகவே மனம் மாறிக் கொள்வார்கள் என்று இன்னமும் சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது. அதுபோக பெண்களை இவர்கள் உடைமையாக எண்ணுவதால் இந்தப் பொருள் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டால் எவ்வளவு விலை கொடுத்தாவது அந்த பொருளை வாங்கி விடுவதை போல சிலர் பெண்ணுக்கு விருப்பமில்லை என்றாலும் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

AKS
AKS

சுந்தர் புனிதாவின் வீட்டில் உண்மையைச் சொல்லி விடுகிறான். வீட்டிற்குள் வந்ததும் புனிதாவின் அம்மா அவளை விளக்குமாறால் அடிக்கிறார். புனிதாவின் தந்தை இடைமறித்து புனிதாவின் பக்கம் நின்று பேசுகிறார். புனிதாவின் அம்மாவிடம் ஊரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார். புனிதா மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். தன்னுடைய திறமையால் படித்து, தன்னுடைய உழைப்பால் அலுவலகத்தில் மிக நல்ல நிலைக்கு உயர்ந்து இருக்கிறாள். இன்று பெண்கள் படித்து அலுவலகத்தில் எவ்வளவு பெரிய பதவிக்கு வந்தாலும் திருமணம் என்று வரும்போது பெற்றோர் சொல்படி நடக்காவிட்டால் அவர்கள் தவறான பெண்களாக பெற்றோர்களால் புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புனிதாவின் வீட்டில் தற்போது புனிதாவின் வருமானத்தை நம்பிதான் குடும்பம் இருக்கிறது. அதுபோக தனது பெற்றோர்களுக்காக ஊரில் சொந்த வீடு கட்டுகிறாள். தனது பெற்றோரின் கடனையும் தனது வருமானத்தில் திருப்பி செலுத்துகிறாள். இதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புனிதாவின் அம்மாவிற்கு, புனிதா மாடர்ன் உடை அணிவது கூட பிரச்னையாக இருக்கிறது. ஒரு பெண்ணிற்கு எது சுதந்திரம் என்பதை பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் முடிவு செய்து கொள்கிறார்கள்.

AKS
AKS

புனிதாவின் அப்பா அவளுடைய அம்மாவிடம் ஊரை எப்படி அணுக வேண்டும் என்று விளக்கமாக எடுத்துச் சொன்னதும் அவர் புரிந்து கொண்டு சிறிது சமாதானம் ஆகிறார். புனிதா யாரையாவது காதலிப்பது பற்றி தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் ஆனால் விரும்புபவரை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் புனிதாவின் அம்மா சொல்கிறார். சுந்தர் புனிதாவின் வீட்டில் சொல்வேன் என்று மிரட்டியதும் தானே அதை நேரடியாக சொல்லி விடலாம் என்று புனிதா எடுத்த முடிவு மிகச் சரி. ஒருவருக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், உடனடியாக உதவி செய்பவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான். ஆனால் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் ஒருவர் முதலில் மறைப்பது வீட்டில் இருப்பவர்களிடம்தான். ஏனெனில் பெரும்பாலான குடும்பங்களில் காதல் அல்லது திருமண விஷயங்களில் தங்களது பிள்ளைகள் தனித்து முடிவு எடுப்பதை பெரியவர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் விரும்புவது இல்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் காதல் என்றவுடன் எதிர்ப்பதுதான் இங்கு இன்னமும் அதிகம் நடக்கிறது.

காயத்ரி சிவாவுக்கு கால் செய்கிறாள். ஊரை விட்டு இப்போதே கிளம்புங்கள் என்று சொல்கிறாள். சிவா இறுதியாக ஒருமுறை வாய்ப்பிருக்கிறதா என காயத்ரியிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறான். காயத்ரியின் நிலை புரிகிறது என்றும் ஒருவேளை இந்தக் கேள்வியை கேட்காமல் சென்றால் அது தனது மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும் என்பதால் கேட்டதாகச் சொல்கிறான். காயத்ரி தன்னிடம் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழலில் பொதுவாக சிவாவின் இடத்தில் இருக்கும் சராசரி ஆண்கள், காயத்ரி தன்னை ஏமாற்றிவிட்டதாக அவள் மேல் கோபப்பட்டு பழிவாங்க முயற்சி செய்வார்கள்.

AKS
AKS

சிவா காயத்ரியிடம் அவள் எந்த சூழ்நிலை மற்றும் மனநிலையில் இருக்கிறாள் என்று தனக்குப் புரிகிறது என்று சொல்கிறான். அவளுக்கு ஆறுதலாக பேசுகிறான். சிவா தனக்கும் காயத்ரிக்கும் இடையில் இருக்கும் நேசம் எப்போதும் இருக்கும் என்றும் எப்போதாவது பேச வேண்டுமானால் தொடர்பு கொள்ளலாம் என்றும் காயத்ரியிடம் சொல்கிறான். தான் காதலிக்கும் பெண்ணுக்குத் திருமணம் என்ற சூழ்நிலையில் கூட நிதானத்தை இழக்காமல் அவளது மனநிலை பற்றியும், நிம்மதி பற்றியும் யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிவா காயத்ரியிடம் என்னால் உனக்கு எந்தப் பிரச்னையும் வராது, நான் போய் விடுகிறேன் என்று அழுதுக் கொண்டே சொல்லும் போது, சிவாவின் அருகிலிருந்து நாமும் தோளைத் தொட்டு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு மிக இயல்பாக நடித்திருக்கிறார் நடிகர் முத்தழகன்.

காயத்ரி சிவாவிடம் அழுது கொண்டே பேசி முடிக்கும் போது அப்படியே அவள் பக்கத்தில் பார்த்தால் இவ்வளவு நேரமாக அங்கே உட்கார்ந்து காயத்ரியை இப்படி பேச வைத்திருக்கிறான் சுந்தர். அம்மாக்களுடன் சீரியல் பார்க்கும் போது மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து வெளியில் பேசுவார்களே அதுபோல ’அட பாதகா’ என்று வாய்விட்டு சொல்ல வைக்கிறான் சுந்தர்.

சுந்தர் இப்போதும் ’நம்ம நல்லதுக்காகத்தான் சொல்றேன்’ என்றுதான் காயத்ரியிடம் பேச்சை தொடங்குகிறான். காயத்ரி சிவாவுடன் பேசும்போது தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறாள். இவ்வளவு அழுகையை, தயக்கத்தை பார்த்த பின்பும் காயத்ரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள சுந்தர் நினைப்பதை என்னவென்று சொல்வது?! சுந்தருக்கு காயத்ரியின் மீது ஒரு துளிக்கூட காதல் இல்லை என்பதும் சுந்தருக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாது என்பதும் புரிகிறது. காயத்ரி சொன்னதைக் கேட்டு சிவா கிளம்பிச் செல்கிறான். புனிதா அவனைத் தேடிவந்து வீட்டிற்கு அழைத்து வருகிறாள். மறுநாள் சிவாவுக்கும் காயத்ரிக்கும்தான் திருமணம் நடக்கும் என்று புனிதா சிவாவிற்கு வாக்களிக்கிறாள்.

மணவறையில் சுந்தர் காத்திருக்க, சிவா ஓரமாக நிற்க, காயத்ரி தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

மாலை மாற்றிக் கொள்பவர்கள் யார்?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism