Published:Updated:

AKS - 64: முட்டாள்தனமாக நடக்கும்போது முற்போக்காக இருந்து மட்டும் என்ன பயன்? புனிதா புரிந்துகொள்வாளா?

அதேசமயம் சுற்றி இருப்பவர்களை குறிப்பாக உள்நோக்கத்துடன் பழகும் ஆண்களை அடையாளம் காணும் அறிவும் அவசியம்.

AKS - 64: முட்டாள்தனமாக நடக்கும்போது முற்போக்காக இருந்து மட்டும் என்ன பயன்? புனிதா புரிந்துகொள்வாளா?

அதேசமயம் சுற்றி இருப்பவர்களை குறிப்பாக உள்நோக்கத்துடன் பழகும் ஆண்களை அடையாளம் காணும் அறிவும் அவசியம்.

Published:Updated:

கிஷோர் புனிதாவிடம் மது அருந்துவதற்கு ’Company’ கொடுக்கச் சொல்லிக் கேட்கிறான். அதற்கு புனிதா ஒப்புக்கொண்டதால் அவளுடைய அறைக்கு வந்து மது அருந்துகிறான். கிஷோர் பலமுறை கேட்டும் புனிதா பரத்துடன் மட்டும்தான் மது அருந்துவேன் என்று சொல்லி மறுத்துவிடுகிறாள். மது அருந்திவிட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல எழுந்திருக்கும் கிஷோர் புனிதாவின் அறையிலேயே தலைசுற்றி கீழே விழுகிறான். புனிதா அவனைப் படுக்கையில் படுக்க வைக்கிறாள். கிஷோர் வாந்தி எடுக்கிறான். புனிதா அவனுக்கு உதவிசெய்து தண்ணீர் கொடுக்கிறாள். புனிதா கூடுதலாக ஒரு படுக்கையை தன்னுடைய அறைக்கு அனுப்பி வைக்குமாறு ஹோட்டலில் சொல்கிறாள்.

புனிதாவை போல சிறுவயதிலிருந்தே பாலின பாகுபாடு இல்லாமல் வளர்பவர்கள் எல்லாருடனும் சகஜமாக பேசக் கூடியவர்கள். அவர்கள் தங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், அவர்களது தைரியமும் அவர்களை எந்த இடத்திலும் அவர்களாகவே இருக்கச் செய்கிறது. அதேசமயம் சுற்றி இருப்பவர்களை குறிப்பாக உள்நோக்கத்துடன் பழகும் ஆண்களை அடையாளம் காணும் அறிவும் அவசியம்.

AKS
AKS

சராசரியாக சமூகத்தில் சொல்லப்படும் பெண்களுக்கான கோட்பாட்டுடன் வளர்பவர்கள் எல்லா ஆண்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவும், எச்சரிக்கையாக இருக்கவும் பழக்கப்பட்டு இருப்பார்கள். அது எவ்வளவு தவறோ அதேபோல் எல்லோரையும் ஒரே மாதிரியாக நம்புவதும் தவறு. நம்முடைய துணிச்சலும் முற்போக்கும் மற்றவர்களின் தவறான செயலுக்கு நம்மை இரையாக்கி விடக்கூடாது. முற்போக்காக இருக்கிறோம் என்கிற பெயரில் முட்டாள்த்தனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு பெண் ஒரு ஆணுக்கு மது அருந்த கம்பனி கொடுப்பது தவறு இல்லைதான். ஆனால் ஒருவர் நம்முடன் பழகும் நோக்கம் அறிந்து கொள்ள முடியாத முட்டாள்தனத்துடன் இருந்துகொண்டு முற்போக்காக இருந்து என்ன பயன்? பரத் புனிதாவுக்கு வீடியோ காலில் அழைக்கிறான். அவளிடம் காலையில் தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறான். உரிமை இருக்கும் இடத்தில்தானே கோபம் வரும் என்று புனிதாவிடம் சொல்கிறான். உரிமை இருக்கும் இடத்தில் நம்பிக்கையும், அடுத்தவர் பேசுவதற்கான ஸ்பேஸும் இருக்க வேண்டும். பரத் அவசரப்பட்டு பேசக்கூடாத விஷயங்களை பேசி விடுகிறான். எல்லாம் முடிந்தும் கோபத்திற்கும் உரிமைக்கும் முடிச்சு போடுவது தப்பித்துக் கொள்வதற்கான வழியே அன்றி உரிமையோ அன்போ கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரத் புனிதாவிடம், ``நான் உன்னை லவ் பண்ணுவது போல நீ கூட உன்னை லவ் பண்ண முடியாது"" என்று சொல்கிறான். ஒருவர்மீது அன்பு செலுத்தும்போது அந்த உறவில் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நான்தான் உன் மீது அதீத அன்போடு இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வது, என்னைப் போல் உன்னை யாரும் நேசிக்கவே முடியாது என்று சொல்வது எல்லாம் திரைப்படங்களில் பார்த்து மெய் சிலிர்த்துக் கொள்ளலாமே தவிர நிஜ வாழ்வில் அன்பு இயல்பான பகிர்தலாய் இருத்தல் அவசியம். நான் உன்னை நேசிக்கும் அளவு யாருமே நேசிக்க முடியாது என்கிற எண்ணம் தோன்றும்போது அங்கு காதல் தீர்ந்து போய் விடுகிறது. காதலில் யாருக்கும் யாரும் தானமிட முடியாது. தியாக உணர்வும் காதலில் கிடையாது. பரத் புனிதாவை ஒரு ராணியை போல நடத்துகிறான் என்பதை புனிதா சொல்ல வேண்டுமே தவிர பரத் தானே அதை சொல்லிக்கொள்ள முடியாது. பரத்தின் இந்த அதிகார எண்ணம்தான் புனிதாவிடம் கட்டளைகள் இடச் செய்கிறது. அவனை புனிதாவின்மீது அதிகாரம் செலுத்தச் செய்கிறது. பரத் புனிதாவிடம் எப்படி கிஷோரை சமாளித்தாய் என்று கேட்கிறான். புனிதா அவனிடம் கிஷோர் தனது அறைக்கு வந்து மது அருந்தியதாகவும் அவள் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் பிறகு கிஷோர் தனது அறைக்குச் சென்றுவிட்டதாகவும் சொல்கிறாள்.

AKS
AKS

பேசிக் கொண்டிருக்கும் போது புனிதா செல்போனை தவறுதலாக பிடிக்க புனிதாவின் படுக்கையில் கிஷோர் தூங்கிக் கொண்டிருப்பதை பரத் பார்த்து விடுகிறான். அதை காட்டிக் கொள்ளாமல் மீண்டும் புனிதாவிடம் கிஷோர் அவனது அறைக்குச் சென்று விட்டானா எனக் கேட்கிறான். புனிதா உறுதியாக அவன் சென்றுவிட்டதாகச் சொல்கிறாள்.

ஆரம்பத்தில் புனிதா எதையும் மறைக்காமல் பரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். கிஷோரை பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கிஷோர் அலுவலகத்திற்கு வந்த முதல் நாளே பரத்திடம் சொல்லி இருந்தாள். ஆனால் அப்போது இருந்தே பரத் புனிதாவிடம் கிஷோரை பற்றி தவறாகச் சொல்ல ஆரம்பித்தான். தன்னுடைய நண்பரை பற்றி பரத் தவறாக பேசுவதை விரும்பாததாலும் சமீபமாக பரத் புனிதாவை சந்தேகப்பட்டு சண்டையிடுவதாலும் புனிதா முதன் முதலில் பொய் சொல்ல ஆரம்பிக்கிறாள்.

புனிதா எவ்வளவோ முறை தான் பரத்தை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கிஷோர் தன்னுடைய நண்பன் மட்டுமே என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறாள். ஆனாலும் அப்போதைக்கு சரி என்று சொல்லி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறான் பரத். மேற்கொண்டு இன்னொரு சண்டைக்குத் தயாராக முடியாததாலும், வாக்குவாதங்களை தவிர்ப்பதற்காகவும் புனிதா பொய் சொல்ல ஆரம்பிக்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இந்தப் பொய் புனிதா மீதான பரத்தின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக ஆகின்றது. இனிமேல் புனிதா எதைச் சொன்னாலும் நம்ப முடியாத இடத்திற்கு பரத்தை இந்த பொய் நகர்த்திவிடும். ஓர் உறவில் பிரிவிற்கும் அவநம்பிக்கைக்கும் தொடக்கப்புள்ளி பொய்தான். புனிதா சண்டையைத் தவிர்ப்பதற்காகத்தான் பொய் சொன்னாள் என்பது உண்மையாகவே இருந்தாலும் அதை இனி பரத்திடம் அவளால் விளக்கி சொல்லிவிட முடியாது. அதை நம்பும் இடத்திலும் பரத் இருக்க மாட்டான்.

Aks
Aks

அலுவலகத்தில் மாயா வரவில்லை என்பதைக் கவனித்த காயத்ரி அருகில் இருக்கும் பெண்ணிடம் மாயா பற்றி கேட்கிறாள். மாயா விடுமுறை எடுத்துக் கொண்டாள் என்று சொல்ல, சிவாவின் அறையும் காலியாக இருப்பதைக் கண்டு யோசனையுடன் வரும் காயத்ரியிடம் பாண்டியன், சிவா காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டதாகச் சொல்கிறான். பரத்திடமும், கவிதாவிடமும் கூட சிவாவை பற்றி கேட்கிறாள் காயத்ரி. சிறிது நேரத்தில் காயத்ரிக்கு சிவாவிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதில் மாயா பேசுகிறாள். எதற்காக சிவாவை பற்றி எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மாயா காயத்ரியிடம் கேட்கிறாள்.

காயத்ரி மாயாவிடம் தனக்கு அலுவலக விஷயத்தில் சந்தேகம் இருப்பதால் உதவி கேட்க அழைத்ததாக கூறுகிறாள். மாயா இந்த நாள் தங்களுடைய ஸ்பெஷல் டே என்றும் சிவாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சொல்லி காலை கட் செய்கிறாள். காயத்ரி பதற்றமடைகிறாள்.

AKS
AKS

மாயாவும் சிவாவும் ஒரே நாளில் வரவில்லை என்பதே முதலில் காயத்ரிக்கு சந்தேகம் வருகிறது. பிறகு மாயா தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்வது காயத்ரியின் பொறாமையை மேலும் தூண்டுவதாக இருக்கிறது.

எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தால் அவருடைய செல்போனை அவர்களது அனுமதி இருந்தோ இல்லாமலோ எடுத்து வேறொருவரின் காலை அட்டெண்ட் செய்து பேசுவது தவறு. காயத்ரி சிவாவை எதிர்பார்த்துதான் காலை அட்டெண்ட் செய்திருப்பாள். காயத்ரிக்கும் மாயாவிற்கும் நெருங்கிய பழக்கம் இல்லை. அப்படி நண்பர்களாககூட இல்லாத ஒருவரிடம் இதுபோல பேசுவது அநாகரீகம். சிவாவிற்கு மாயாவின்மீது கோபம் அல்லது கருத்து வேறுபாடு வர இதுவே காரணமாக அமையலாம்.

புனிதாவின் காதல் அவள் சொன்ன பொய்யிலிருந்து அவளைக் காப்பாற்றுமா?

காயத்ரியின் காதல் சிவாவுடன் இணைத்து வைக்குமா?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism