Published:Updated:

AKS - 76: மகள்கள் 'காதல்' குழப்பத்திலிருக்கும் போது வீட்டிலிருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்?

AKS - 76
News
AKS - 76

AKS - 76 காயத்ரி எல்லோருக்கும் பரிசுப் பொருள்கள் வாங்கிவிட்டு சுந்தருக்கு எதுவும் வாங்காமல் வந்திருந்தாள். அதை கவனித்த காயத்ரியின் தந்தை தானே ஒரு பரிசுப் பொருள் வாங்கி அதை அவளது அண்ணி மூலமாக காயத்ரியிடம் கொடுத்து சுந்தருக்கு பரிசளிக்குமாறு சொல்லி இருப்பார்

காயத்ரியின் அப்பா அவள் இரண்டு நாள்களாக போனில் பேசவில்லை என்பது பற்றி அவளின் அண்ணன் மற்றும் அண்ணியிடம் கேட்கிறார். காயத்ரியின் அண்ணன் வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்த கல்யாண பத்திரிக்கையை அவள் இன்னும் பார்க்கவில்லை என்று அப்பாவிடம் சொல்கிறார். காயத்ரியின் தந்தைக்கு சந்தேகமும் வருத்தமும் எழுகிறது.

அவர் காயத்ரியின் அண்ணியிடம் கேட்கும்போது இந்தக் கல்யாணத்தில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்று தான் காயத்ரியிடம் சொல்லி இருப்பதாகச் சொல்கிறார். காயத்ரி வேலைக்குச் சென்ற பிறகு இடையில் ஒருமுறை ஊருக்கு வருகிறாள். அப்போது அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருப்பதாக காயத்ரியின் அண்ணி உணர்கிறார். காயத்ரி எல்லோருக்கும் பரிசுப் பொருள்கள் வாங்கிவிட்டு சுந்தருக்கு எதுவும் வாங்காமல் வந்திருந்தாள். அதை கவனித்த காயத்ரியின் தந்தை தானே ஒரு பரிசுப் பொருள் வாங்கி அதை அவளது அண்ணி மூலமாக காயத்ரியிடம் கொடுத்து சுந்தருக்கு பரிசளிக்குமாறு சொல்லி இருப்பார். ஆனால் காயத்ரி அதை தனது அறையிலேயே விட்டுவிட்டு ஊருக்கு சென்றுவிடுவாள்.

AKS - 76: மகள்கள் 'காதல்' குழப்பத்திலிருக்கும் போது வீட்டிலிருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்?

காயத்ரி எதையோ இழந்தது போல் குழப்பமாகச் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவளது அண்ணி அவளுடைய பிரச்னை என்னவென்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ எதையும் கேட்காமல் இந்தத் திருமணம் நின்று போய்விட்டால் அதை காயத்ரியின் அப்பாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி காயத்ரியை எச்சரிக்கை செய்திருப்பார்.

தம் குடும்பத்து பெண் ஏற்பாட்டுத் திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் குழப்பத்திலும், சோகத்திலும் இருந்தால் வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள், குறைந்தபட்சம் சம வயதுடைய பெண்களாவது அவளுடைய பிரச்னைக்கு காது கொடுத்து அதைத் தீர்ப்பதற்கு உடனிருக்க வேண்டும். ஆனால் வீட்டில் ஆண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேபோல் காயத்ரியின் அண்ணி அவளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கிறார். அவர் அன்று காயத்ரியிடம் பேசியிருந்தால், காயத்ரி தனக்கு சுந்தரை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்பதைச் சொல்லி இருப்பாள். சுந்தரும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்க மாட்டான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காயத்ரியின் அண்ணன் அவளிடம் பேசும்போது காயத்ரி, பத்திரிக்கையை ஏற்கனவே பார்த்து விட்டதாகச் சொல்கிறாள். சுந்தரின் பெற்றோர்கள் சென்னை வந்திருப்பதாகவும் சொல்கிறாள். காயத்ரியின் தந்தை அதற்காக மகிழ்ச்சி அடைந்தாலும் காயத்ரி மன குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ஏற்கெனவே சுந்தர் தற்கொலைக்கு முயற்சி செய்தது காயத்ரியை பெரும் மன நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவளின் தந்தைக்கும் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் அது அவளை சிந்திக்க முடியாதளவு மொத்தமாக முடக்கிவிடும். அவளும் வேறு வழி இல்லாமல் சுந்தரை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவாள்.

தந்தையின் பாசத்தை விடவா காதல் முக்கியம் என்பதுதான் நம் சமூகத்தின் பொதுப்புத்தியில் இருப்பது. ஆனால், தன் மகளுக்கு ஏதோ ஒன்று விருப்பமில்லாமல் நடக்கிறது, அதனால் அவள் சோர்வாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களின் பாசத்தை வைத்துக் கொண்டு அந்த மகள் என்ன செய்வாள்?

காயத்ரி
காயத்ரி

தந்தை மகளிடம் வெளிப்படையாகப் பேசி அவளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பது, மேற்கல்வி மறுப்பது, வேலை பார்க்க அனுமதி கொடுக்காமல் இருப்பது போன்ற பிற்போக்குத் தனங்களை சம்பிரதாயங்கள் என்று சொல்லி அவர்களை அடிமையாக வைத்திருப்பது இன்றும் தொடர்கிறது. அதற்கு ஊரில் இருப்பவர்களிடம் அவப்பெயர் ஏற்படும் என்று காரணம் சொல்கின்றனர். எல்லா தவறுகளையும் பெரியவர்கள் செய்துவிட்டு பிள்ளைகள் பெரியவர்களின் மனம் வருந்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

புனிதா கிஷோருடன் மது அருந்த பப்புக்குச் செல்கிறாள். அளவுக்கதிகமாக குடித்துவிட்டு பரத் நல்லவன் என்றும் தான் அவனை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதையும் கிஷோரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். பரத், புனிதாவின் தவறான தேர்வு என்று கிஷோர் சொல்கிறான். அதைக் கேட்டு கோபம் வந்தாலும் கிஷோர் மேற்கொண்டு சொன்னதைக் கேட்டு புனிதா கன்வின்ஸ் இருக்கிறாள். கிஷோர் புனிதாவை பரத்தை விட்டு விலகச் சொல்லி மறைமுகமாகச் சொல்கிறான். புனிதாவை சம்மதிக்க வைக்க நீங்கள் வெளியில் முற்போக்காக இருந்தாலும் உள்ளுக்குள் மிகவும் பழைமைவாதியாக இருக்கிறீர்கள் என்று சொல்லி பரத்தின் மீதான அவளின் கோபத்தைத் தூண்டுகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மையாகவே முற்போக்காகச் சிந்திக்கும் பெண்களுக்கு மற்றவர்கள் இதுபோல் சொல்வது பிரச்னையாக இருக்காது. அவர்கள் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் புனிதாவிற்கு அவளை கிஷோர் கன்சர்வேட்டிவ் என்று சொன்னது கோபம் வருகிறது.

புனிதா வீட்டுக்கு வராதது பற்றி வர சிவாவிடம் பரத் கேட்கிறான். புனிதாவையே அழைத்து கேட்கலாமே என்று சிவா சொல்கிறான். பரத்துக்கு தன்னுடைய ஈகோ பிரச்னையாக இருக்கின்றது. உள்ளே அன்பை வைத்துக் கொண்டு வெளியில் ஈகோவை காட்டுகிறான் பரத்.

புனிதாவை கிஷோர் வீட்டுக்கு அழைத்து வருகிறான். பரத் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளது அறையில் கொண்டு போய் விட்டுவிட்டு உள்ளிருந்து கதவை சாத்திக் கொள்கிறான். பரத் தன்னுடைய ஈகோவை விட்டு எதுவும் கேட்க முடியாத நிலையில் இருக்கிறான்.

புனிதா - கிஷோர்.
புனிதா - கிஷோர்.

புனிதாவின் அறையில் கிஷோர் இருந்தது தெரிந்தவுடன் சிவா கதவைத் தட்டி அவனை வெளியில் வரச் சொல்லி, அங்கிருந்து கிளம்பச் சொன்னது பாராட்டுக்குரியது. புனிதா கிஷோர் உடன் இருப்பது அவளது தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும் அவள் சுயநினைவுடன் இல்லாமல் இருக்கும் போது அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை நண்பானகிய தனக்கு இருக்கிறது என்பதை அந்தக்காட்சி தெளிவுப்படுத்துகிறது.

காயத்ரியின் தந்தைக்கு நெஞ்சு வலி வந்தவுடன் காயத்ரியின் அண்ணன் ஓடிவந்து, “என்னாச்சு... என்னாச்சு” என்று மீண்டும் மீண்டும் அவரை கேட்கவும், நெஞ்சில் தட்டவும் செய்கிறார். தமிழ்நாட்டில் இன்று கிராமங்கள் வரை சாதாரணமாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கூட பெரியவர்களுக்கு நெஞ்சு வலி வந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே 108க்கு அழைக்கவேண்டும் என்பது தெரியும். ஒருவர் மயங்கிய நிலையில் இருக்கும்போது முதல் உதவிக்காக ஆம்புலன்ஸை அழைக்காமல், மயக்கத்தில் இருப்பவரிடம் என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருந்தால் அது சில நிமிடங்களே அவரது உயிருக்கு ஆபத்தாக முடியவும் வாய்ப்பிருக்கிறது.

காயத்ரி இந்த நெருக்கடிகளைச் சமாளித்து சிவாவுடன் இணைவாளா?

காத்திருப்போம்!