Published:Updated:

BB Ultimate 32: அடுக்கடுக்கான பிராது; ஆளுக்காளு நாட்டாமை!

BB Ultimate: அபிராமி , சுருதி

இவர்கள் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீர் அனைத்தையும் நைசாக அபகரித்துக்கொண்டது. எனில், நீருக்கு அவர்கள் தன்னிடம் வந்துதானே ஆக வேண்டும் என்பது இவர்களின் கணக்கு.

Published:Updated:

BB Ultimate 32: அடுக்கடுக்கான பிராது; ஆளுக்காளு நாட்டாமை!

இவர்கள் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீர் அனைத்தையும் நைசாக அபகரித்துக்கொண்டது. எனில், நீருக்கு அவர்கள் தன்னிடம் வந்துதானே ஆக வேண்டும் என்பது இவர்களின் கணக்கு.

BB Ultimate: அபிராமி , சுருதி
“பஞ்சாயத்தா.. இது.. பஞ்சாயத்தே இல்லடா!” தேவர் மகன் திரைப்படத்தில் நாற்காலியை தூக்கி வீசி விட்டு சிவாஜி பேசும் வசனம் இது. பிக் பாஸ் வீட்டில் நிகழும் பஞ்சாயத்துக்களைப் பார்க்கும் போது இதே ஆவேசம்தான் நமக்குள் வருகிறது. அப்படியொரு உப்புச்சப்பற்ற நீண்ட உரையாடல்கள். நேற்றைய எபிசோடிலும் பாலாஜி மற்றும் அனிதாவே ஆக்ரமித்தார்கள். மற்றவர்கள் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி சுற்றிலும் உலவினார்கள்.

எபிசோட் 32-ல் நடந்தது என்ன?

இரு நாடுகள், இரு மாநிலங்கள், இரு வீடுகள், இரு நபர்கள் என்று நீர்ப்பங்கீட்டுப் பிரச்னை என்பது உலகளாவியது. பிக் பாஸ் வீடும் இதற்கு விதிவிலக்கில்லை. டாஸ்க்கின் முதல் நாள் இரவன்றே தண்ணீர்ப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. கிச்சன் ஏரியாவை பாலாஜி அணியும், பாத்ரூம் ஏரியாவை சிநேகன் அணியும் கைப்பற்றிக் கொண்டார்கள் போலிருக்கிறது.

நள்ளிரவில் ஆரம்பித்த நீர் பிரச்னை

கார்டன் ஏரியாவில் இருந்த பாத்ரூமை பிக் பாஸ் மூடி விட்டார். எனவே பசியோ அல்லது இயற்கை உபாதையோ, இரு அணிகளும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை. பப்ளிக் பாத்ரூமில் டோக்கன் போடுபவர் மாதிரி அமர்ந்திருந்த நிரூப், சிறுநீர் கட்டணத்தை சிறிதாக அல்லாமல் பெரிதாக வைத்து விட்டார் போலிருக்கிறது. எனவே எதிர் அணி, இவர்கள் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீர் அனைத்தையும் நைசாக அபகரித்துக்கொண்டது. எனில், நீருக்கு அவர்கள் தன்னிடம் வந்துதானே ஆக வேண்டும் என்பது இவர்களின் கணக்கு.

நிரூப் - சினேகன் - சுருதி
நிரூப் - சினேகன் - சுருதி

இந்த விஷயம் அன்றைய இரவை கொந்தளிப்பாக்கி விட்டது. அருள் வந்தால் சாமியாட வேண்டும் என்பது தாமரையின் காரெக்ட்டர் ஸ்கெட்ச். ஆனால் அருள் வராமலேயே பயங்கரமாக சாமியாடிக் கொண்டிருந்தார் தாமரை. “பிக் பாஸ் கொடுத்த தண்ணியை நீங்க ஏன் எடுத்தீங்க?” என்று நிரூப் மல்லுக்கட்ட “பிக் பாஸ் பாத்ரூமை மூடின மாதிரி, நாங்களும் தண்ணியை மூடினோம். டாஸ்க்ல விளையாட்டுக்கு ஏதும் பண்றதில்லையா?” என்று தாமரை ஹைடெஸிபலில் கத்த “காசு சம்பாதிக்கத்தான் நாங்க அப்படிச் செய்தோம். அவங்க மட்டும் பாத்ரூம் போக அநியாய ரேட் வைக்கலையா, அங்க போகணும்னா நாங்களும் சம்பாதிக்கணும்ல?!” என்று கேட்டு சேம் சைட் கோல் போட்டார் பாலா. இதன் மூலம் ‘விளையாட்டுக்கு பண்ணக்கூடாதா?” என்கிற தாமரையின் வாதம் உடைந்தது

இந்த வாக்குவாதத்தில் “என்ன M--------------க்கு தண்ணியைக் கொட்டினீங்க?” என்று நீரூப், கோடிட்ட இடங்களை நிரப்பாமலேயே பேசினார் போலிருக்கிறது. மயிறு என்பது தமிழ்ச்சொல் என்று முன்னர் வியாக்கியானம் பேசிய தாமரை “ஏன் கெட்ட வார்த்தை பேசணும்?” என்று கடுமையாக ஆட்சேபிக்க “அவர் அந்த வார்த்தையை உபயோகிக்கவில்லை. அது Fill the blanks” என்று தன் கட்சிக்காரருக்கு சார்பாக ஆஜரானார் வக்கீல் அனிதா, தனக்கும் நிரூப்பிற்கும் இடையே அனிதா வந்ததால் இன்னமும் உக்கிரமானார் தாமரை. “நான் அவன் கிட்டதானே பேசிக்கிட்டு இருக்கேன்.. நீ ஏன் ஊடால வரே?” என்று அனிதாவிடம் மோத “ஏன்.. நான் பேசக்கூடாதா,?” என்று அழத் தயாரானார் அனிதா. நேற்று பாலாவும் இதேபோல் “நீ ஏன் நடுவுல வர்ற?” என்று அனிதாவிடம் கேட்டிருந்ததால் அம்மணி சோக மூடிற்கு பயணமானார்.

பஞ்சாயத்து உப தலைவரான சதீஷ் முதன்முறையாக ஏதோ வாய் திறந்து பேசுகிறாரே என்று கவனித்துப் பார்த்தால் “நீங்க பண்ணது தப்பே இல்லை” என்று தாமரைக்கு சார்பாக வாக்குமூலம் அளித்தார். வீடு அதிர கத்தி விட்டு பிறகு அழுகையில் மூழ்கிய தாமரையை பலரும் சமாதானப்படுத்தினார்கள். “நான் நிரூப்போட மவுத்பீஸ் கிடையாது. நான் சொல்ற எதையும் அவன் கேட்கவேமாட்டான். அவன் தப்பான வார்த்தையைப் பயன்படுத்தலேன்றதை மட்டும்தான் நான் சொல்ல வந்தேன்” என்று தாமரையிடம் மறுபடி மறுபடி விளக்கம் அளித்து இம்சை செய்தார் அனிதா. தாமரையை தரதரவென தனியாக இழுத்துச் சென்ற நிரூப், தான் மனம் காயப்பட்டிருந்த பின்னணியை விளக்கமாகச் சொல்லி மன்னிப்பு கேட்டதும் சற்று சமாதானம் ஆனார் தாமரை.

நிரூப்
நிரூப்

பாத்ரூம் காண்ட்ராக்டராக மாறி விட்ட நிரூப்

நாள் விடிந்தது. இனி சிம்பு பாடல்களாகத்தான் போடுவார்கள் போலிருக்கிறது. ‘தகதகவென ஆடவா.. போட்டுத் தாக்கு’ என்கிற ஆவேசமான பாடலுக்கு அருள் வராமலேயே குத்தி ஆடினார் அனிதா. முந்தைய இரவில் கொலைச் சம்பவமே நிகழ்ந்திருந்தாலும் கூட மறுநாள் காலையில் அனைவருமே அப்பாவிகளைப் போல் நடனம் ஆடிக் கொண்டிருப்பது சுவாரசியம்.

காலையிலேயே அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தார் நிரூப். “மாத்திரை போடணும்.. ஆனா தண்ணி இல்ல. காசு தர மாட்டேன். தண்ணி கொடு’ என்று தாமரையை சென்ட்டியாக பேசி மடக்க அவர் முயல “என்னடா.. இது இப்படிச் சொல்றான்.. கஷ்டமா இருக்கு” என்று தாமரை உருக “உன் வீக்னெஸ்ஸை அவன் நல்லா பயன்படுத்திக்கறான்” என்று எச்சரித்தார் பாலாஜி.

“நான் பாத்ரூம் போகணும். வழியை விடுங்கடா” என்று சுருதி நச்சரிக்க, பாத்ரூம் உரிமையாளரான நிரூப் “கையில காசு.. அப்புறம்தான் சுச்சா..” என்று கறாராக இருந்தார். “பிக் பாஸ்.. கார்டன் ஏரியா பாத்ரூமை திறந்து விடுங்க. இல்லைன்னா. கதவை உடைச்சுடுவேன். அவங்க அநியாய ரேட் கேக்கறாங்க” என்று டென்ஷன் ஆனார் பாலா. மூத்திரத்திற்கும் ஆத்திரத்திற்கும் நெருக்கமான லிங்க் இருக்கிறது போல.

“நீங்க விலையேத்தியதால்தான் நாங்களும் ரேட் ஏத்தினோம்” என்று பரஸ்பரம் இரு அணியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். “நான் ஒரு நாளைக்கு பத்து முறை பாத்ரூம் பக்கம் போவேன்.. அவ்ள காசுக்கு நான் எங்க போறது?” என்று காமிராவிடம் ஆவேசமாக முறையிட்டார் தாமரை. சிநேகன் அணி காசு கொடுத்து சாப்பாடு வாங்கினால்தான் பாலாஜி அணி சம்பாதிக்க முடியும்; செலவு செய்ய முடியும். ஆனால் “எங்களுக்கு சாப்பாடு வேணாம்” என்று புத்திசாலித்தனமாக முடிவு செய்தார் நிரூப். இதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் வரும்; செலவும் செய்யத் தேவையில்லை.

சதீஷ் - சுரேஷ்
சதீஷ் - சுரேஷ்

“உங்க டீம் ஆளுங்க. இப்படி அநியாயம் பண்றாங்களே. நீங்களாவது சொல்லக்கூடாதா..” என்று சிநேகனிடம் முறையிடப்பட்டபோது “அது அவங்களோட முடிவு. ஆத்தாவும் புள்ளையும் ஆடறாங்க.. நான் அப்படில்லாம் யாரையும் கஷ்டப்படுத்த நெனக்க மாட்டேன். தனியொருவனுக்கு பாத்ரூம் இல்லையெனில், கதவை உடைத்திடுவோம்’ன்னு ஏற்கெனவே சமூக ஆவேசத்தோட ஒரு கவிதை எழுதியிருக்கேன். ஒருத்தன் சிறுநீர் போக முடியாமல் அவஸ்தைப்பட்டால் என் கண்ணில் நீர் வழியும்.. நான் அப்படிப்பட்ட இளகிய மனம் கொண்டவன்” என்பது போல் உருக்கமாகப் பேசி எஸ்கேப் ஆனார் சிநேகன்.

சாப்பாட்டிற்கு பத்தாயிரம்.. சுச்சாவிற்கு அஞ்சாயிரம்…

ஊர்க்கிழவி சுரேஷ் தலைமையில் இதற்கான மினிபஞ்சாயத்து ஆரம்பித்தது. சில பல வாக்குவாதங்களுக்குப் பிறகு “ஒரு நாளைக்கு 5000 ரூபா தரச் சொல்லுங்க. மூணு வேளை சாப்பாடு.. காஃபி.. தண்ணி எல்லாம் உண்டு” என்று இறங்கி வந்தார் பாலா. “என்னடா.. தம்பி.. இத்தனை கம்மி ரேட்டுக்கு ஒத்துக்கிட்டே” என்று தாமரை ஆட்சேபிக்க, கூடவே நின்று ஆமோதித்தார் சுருதி. எதிர் டீமைப் போலவே நிரூப்பும் மொத்தமாக ஒரு தொகையை பிக்ஸ் செய்து “நீங்க உள்ள போயி சுச்சா போவீங்களா. கக்கா போவீங்களான்னு எங்களுக்கு எப்படி தெரியும்?!..” என்று முறையான பாத்ரூம் காண்டிராக்ட்டர் போல பேசி இடத்தை ‘கலீஜ்’ ஆக்கினார். மொத்தமான தொகையாக இல்லாமல் உபயோகப்படுத்தும் சமயங்களில் மட்டும் காசு கொடுக்கும்படியாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

சினேகன் - அனிதா - நிரூப்
சினேகன் - அனிதா - நிரூப்

முதல் பிராது – சிநேகன் vs பாலா (வழக்கு எண். 183/91)

பாலா மீது சிநேகன் பிராது தர பஞ்சாயத்து கூடியது. பாலாவிற்கும் சிநேகனுக்கும் நடந்த வாக்குவாதம் ஒன்றில் "தண்ணி குடிச்சிட்டு பேசுங்க” என்று பாலா நக்கலாக கூறினாராம். இது தன்னை அவமதித்து விட்டதாக புகார் சொன்னார் சிநேகன். “நல்ல விஷயம் சொன்னா தப்பா..?” என்று மழுப்பினார் பாலா. ஒரு வசனத்தை சொல்லும் விதத்தில் அர்த்தமே மாறுகிறது. “தண்ணியக் குடி. தண்ணியக் குடி” என்று எகத்தாளமாக சொன்னால் அது எதிராளியை நக்கல் செய்வதுதான். நிச்சயம் பாலா இந்தத் தொனியில்தான் சொல்லியிருப்பார். ஆனால் பஞ்சாயத்தின் போது சிநேகனின் கோபம் சற்று தணிவதற்காகத்தான் அப்படிச் சொன்னேன் என்று மழுப்பினார் பாலா. இந்தப் பஞ்சாயத்தில் சிநேகனின் தரப்பிற்கு வெற்றி கிடைத்ததால் அவர்கள் ‘சவுத் ஆப்ரிக்கா’ பகுதியைக் கைப்பற்றினார்கள். இதைப் பிறகு பிக் பாஸூம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.

இந்தப் பஞ்சாயத்தின் நடுவே சுரேஷ் சொன்ன ஒரு பாயிண்ட் அருமை. “பாலா.. நீ நல்லதுக்கு சொன்னியோ.. நக்கலுக்கு சொன்னியோ.. ஆனா அவர் மனம் புண்பட்டதுன்னு சொல்றாரு. அதுக்கு மன்னிப்பு கேட்டிருக்கலாம்” என்று சுரேஷ் சுட்டிக் காட்ட “தப்பு பண்ணாம நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? பஞ்சாயத்துல விதியை மீறி நடுநடுவுல பேசறவங்களுக்கு என்ன தண்டனை? சிநேகன் அப்படித்தான் பேசினாரு” என்று இதை மறுத்த பாலா “நாட்டாம.. தீர்ப்பை மாத்திச் சொல்லு” என்று உரத்த குழலில் முழக்கம் செய்தார்.

இரண்டாவது பிராது – அனிதா vs பாலாஜி (வழக்கு எண்.183/122)

அடுத்த பிராதை பாலாஜி மீது வைத்தார் அனிதா. ‘பாலாஜி ஒரு பிரச்னையைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாற்றி மாற்றிப் பேசுகிறார்’ என்பது அனிதாவின் புகார். அதன் சுருக்கம் இதுதான். சுருதி மனஉளைச்சல் காரணமாக பிக் பாஸிடம் பேச விரும்பி கன்ஃபெஷன் ரூமை நீண்ட நேரம் தட்டியிருக்கிறார். ஆனால் வெகுநேரமாக கதவு திறக்கவில்லை. “அவங்கள மாதிரி டிராமா பண்ணாதான் கதவு திறக்கும் போல” என்று இந்தச் சமயத்தில் அனிதா சொல்லியிருக்கிறார் போல. (இந்த ‘அவங்க’ என்பது வனிதாவைக் குறிக்கும்). தன் தலைவியைப் பற்றி யாரோ வம்பு பேசுவதைக் கேட்டு விட்ட விசுவாச தொண்டன் பாலாஜி கொதித்தெழுந்திருக்கிறார்.

அபிராமி - சுருதி
அபிராமி - சுருதி

அனிதா விளக்கம் தருவதற்காக பாலாஜியை அணுக “நான் உன்னைச் சொல்லலம்மா.. இந்த சுருதிப் பொண்ணுதான்’ என்று மழுப்பிய பாலாஜி, சுருதி வந்து பேசும் போது “நீ இல்லம்மா. இந்த அனிதா இருக்காங்களே” என்று ரைட் இன்டிகேட்டரையும் லெஃப்ட் இன்டிகேட்டரையும் மாற்றி மாற்றிப் போட்டிருக்கிறார். இதுதான் அனிதாவின் பிராது.

தன் முறை வரும் போது ‘தத்தக்கா.. பித்தக்கா’ என்று இழுவையான குரலில் யாருக்கும் புரியாதபடி விளக்கம் அளித்தார் பாலாஜி. இந்த அணியில் ஏன் பாலா மட்டும் பேசுகிறார் என்பது இப்போதுதான் புரிகிறது. இந்த உலக மகா பிரச்சினையை நீண்ட நேரம் விசாரித்த நாட்டாமை, தன் தீர்ப்பைச் சொல்ல ஆரம்பிப்பதற்குள் எபிசோட் முடிந்தது. (ஹப்பாடா.. முடியல…).