Published:Updated:

`பாரதி கண்ணம்மா' நடிகைக்கு பூச்சூடல் விழா; விரைவில் கெட்டிமேளம்!

ஸ்ருதி ( hp )

ஸ்ருதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இது எங்களுடைய பூச்சூடல் விழா. சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறோம்!' எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்

`பாரதி கண்ணம்மா' நடிகைக்கு பூச்சூடல் விழா; விரைவில் கெட்டிமேளம்!

ஸ்ருதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இது எங்களுடைய பூச்சூடல் விழா. சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறோம்!' எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்

Published:Updated:
ஸ்ருதி ( hp )

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர், ஸ்ருதி சண்முகப்பிரியா. பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்போது கிடைத்த வாய்ப்பினை பற்றிக் கொண்டு தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார். 'பொம்முகுட்டி அம்மாவுக்கு', 'பாரதி கண்ணம்மா' போன்ற தொடர்களில் நடித்திருந்தார். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

'பாரதி கண்ணம்மா' ஸ்ருதி
'பாரதி கண்ணம்மா' ஸ்ருதி
hp

கோயம்புத்தூரை சேர்ந்தவர், ஸ்ருதி. இவருக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி பூச்சூடல் விழா நடைபெற்றிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்டிருக்கிறார். அதில், இது எங்களுடைய பூச்சூடல் விழா. சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறோம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருடைய பதிவிற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். பாசிட்டிவ், நெகட்டிவ் என சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது நடிப்பிற்கு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார்.

ஸ்ருதி - அரவிந்த்
ஸ்ருதி - அரவிந்த்
hp

மல்டி டாஸ்கிங்கில் ஒர்க் பண்றது ஸ்ருதிக்கு பிடித்தமான விஷயம். சீரியலில் நடிக்கும்போதே, பிரெஞ்ச் பாடப்பிரிவில் பி1 படித்துக் கொண்டிருந்தார். பிரெஞ்ச் மொழியில் பி1 முடித்திருந்தாலே கல்லூரியில் பிரெஞ்ச் பாடப்பிரிவு விரிவுரையாளராக முடியும். அதுதவிர, பிரெஞ்ச் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குரூப்பிலும் ஸ்ருதி இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் ஸ்ருதி - அரவிந்த்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism