விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் 'ஈரமான ரோஜாவே'. இந்தத் தொடர் ஹிட்டானதை தொடர்ந்து இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் வர இருப்பதாக தகவல்கள் வெயாகியிருக்கின்றன. இந்தத் தொடருக்கான பைலட் ஷூட் தற்போது ஆரம்பமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த தமிழ் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு பலருடைய அன்பையும், பாராட்டையும் பெற்றவர், கேப்ரியல்லா. சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'ஈரமான ரோஜாவே' சீசன் 2வில் கதாநாயகியாக கேப்ரியல்லா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கு முன்னர் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கேப்ரியல்லாவை பார்த்திருக்கிறோம். தற்போது, நடிகையாக களம் இறங்க இருக்கிறார் என்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்னத்திரை உலகில் இந்தத் தொடர் மூலம் நாயகியாக கேப்ரியல்லா அறிமுகமாக இருக்கிறார். ஆனால், அவருக்கு ஜோடியாக இந்தத் தொடரில் யார் நடிக்கிறார் என்பதும் தெரியவில்லை.
விஜய் டிவி தரப்பில் இந்தத் தொடர் குறித்த உறுதியான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

'ஈரமான ரோஜாவே' சீசன் 2வில் நாயகியாக கேப்ரியல்லா என்ட்ரியாக இருக்கிறார். இது தொடர்பான உங்கள் கருத்துகளை மறக்காம கமெண்ட் பண்ணுங்க!