Published:Updated:

பிக்பாஸ்: `ஆசை நிறைவேறவில்லை' ; கதறி அழுத ராஜு; வெளியேறிய இமான்; கடைசி நேர ட்விஸ்ட்!

ராஜு

பிக்பாஸ் எவிக்சன்: மொத்தம் 100 நாட்கள் கொண்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இரண்டு மாதங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ்: `ஆசை நிறைவேறவில்லை' ; கதறி அழுத ராஜு; வெளியேறிய இமான்; கடைசி நேர ட்விஸ்ட்!

பிக்பாஸ் எவிக்சன்: மொத்தம் 100 நாட்கள் கொண்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இரண்டு மாதங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Published:Updated:
ராஜு

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் இந்த வாரம் எவிக்‌ஷன் மூலம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார் இமான் அண்ணாச்சி. இன்று காலை தொடங்கிய கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் தற்போது முடிவடைந்து விட்டதாகத் தெரிகிறது.

மொத்தம் 100 நாட்கள் கொண்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இரண்டு மாதங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிறைவு பெற இன்னும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இந்த வாரம் இரண்டு பேர் எவிக்‌ஷன் ஆகலாம் என முதலில் தகவல்கள் கசிந்து வந்தன.

இமான் - ராஜு
இமான் - ராஜு

இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் அக்‌ஷரா, நிரூப், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இருந்தனர். இவர்களில் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்த இமான் அண்ணாச்சி மட்டும் வெளியேற்றப் பட்டிருக்கிறார். இமான் வெளியேறியபோது சக போட்டியாளர் ராஜு கதறழ அழுதார். இமான் வெற்றி பெறவேண்டும் என ராஜு முன்பு ஒருமுறை கூறியிருந்தார். இந்த நிலையில் இமான் வெளியேற்றப்பட்டது ராஜுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்களூம் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கமல் இந்த வாரத்துக்கான ஷூட்டிங்கை இன்று ஒரே நாளில் முடித்துக் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!