Published:Updated:

`கமலுக்கு பதில்...' முடிவெடுத்த பிக்பாஸ் டீம்!

நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு இருவரில் ஒருவர் அடுத்த சில வாரங்களுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சில தினங்ளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவரது ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் இந்த செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்த சில வாரங்களுக்கு அவர் தொகுத்து வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. எனவே அவருக்குப் பதில் நடிகர் விஜய் சேதுபதி அல்லது நடிகர் சிலம்பரசன் இருவரில் ஒருவர் அடுத்த சில வாரங்களுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விஷயங்கள் தெரிந்த வட்டாரத்தில் பேசினோம்.

அவர்கள் கூறியதாவது, `` கமல் சாருக்கு கொரோனா தொற்றின் தீவிரம் குறைவுதான் எனத் தெரிவித்தனர். இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனைபடியே நிகழ்ச்சியை விர்ச்சுவலாக தொகுத்து வழங்கமுடியும் எனக்கூறினர். சரி கமலுக்குப் பதிலாக வேறு யாரை தொகுப்பாளராக நியமிப்பது என கலந்தாலோசித்தோம்.

கமல்
கமல்

அப்போது சில நடிகர்களின் பெயரும் சிலரால் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அது அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையிலிருந்த நேரத்திலேயே கமல் ஹாசன் தரப்பில் இருந்து அவரால் விர்ச்சுவலாக தொகுத்து வழங்க முடியும் எனத் தெரிவித்தனர். எனவே கமல் ஹாசனே இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலே தொகுத்து வழங்குவார். அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யபட்டிருக்கின்றன. " என்றனர்.

கமலுக்கு பதிலாக யார் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு கடைசியில் கமல் ஹாசனே விர்ச்சுவலாகப் பங்கேற்று தொகுத்து வழங்குவார் என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. விரைவில் பூரண நலம்பெற்றுத் திரும்பங்கள் கமல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு