Published:Updated:

தமிழ் கற்றுக்கொடுத்ததில் மலர்ந்த காதல்; சித்து - ஸ்ரேயா லவ் ஸ்டோரி!

இவர்கள் காதலிக்கிறார்கள் என சீரியல் உலகில் பேசப்பட்டது. ஆனாலும், இருவரும் அமைதியாய் நடித்து வந்தார்கள். பிறகு, வெளிப்படையாகவே காதலிப்பதை தங்களது ரசிகர்களுக்கு அறிவித்தார்கள்.

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காதல் ஜோடி சித்து - ஸ்ரேயா. இன்று இவர்களுடைய திருமணம் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் நடைபெற்றுள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் நாயகியாக நடித்தவர், ஸ்ரேயா. மங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயாவிற்கு தமிழ் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொடுத்திருக்கிறார், சித்து. இருவரும் பழக ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது.

சித்து - ஸ்ரேயா திருமணம்
சித்து - ஸ்ரேயா திருமணம்

இவர்கள் காதலிக்கிறார்கள் என சீரியல் உலகில் பேசப்பட்டது. ஆனாலும், இருவரும் அமைதியாய் நடித்து வந்தார்கள். பிறகு, வெளிப்படையாகவே காதலிப்பதை தங்களது ரசிகர்களுக்கு அறிவித்தார்கள். அந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் லிவ் - இன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாகவும் கிசுகிசுப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ‘திருமணம்’ சீரியலுக்கு பிறகு ‘அன்புடன் குஷி’ தொடரில் நடித்திருந்தார், ஸ்ரேயா. சித்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி சீசன் 2' தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சித்து ஸ்ரேயா பிளாக்ஸ் என்ற பெயரில் நேற்று யூடியூப் சேனலைத் தொடங்கி அதில் தங்களுடைய கல்யாண விஷயத்தை அறிவித்திருந்தனர். மேலும், நேற்று வீட்டில் நடைபெற்ற மெஹந்தி பங்ஷனை வீடியோ எடுத்து அதனையும் பதிவிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் ‘ஸ்ரேயா - சித்து’ திருமணம் நடைபெற்றுள்ளது. நட்சத்திர ஜோடிக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் சித்து - ஸ்ரேயா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு