Published:Updated:

சித்ரா: புகழின் உச்சகட்டத்தில் மரணம்; விசாரிக்கப்படாத மொபைல் கால்,விலகாத மர்மம்! நினைவுதினப் பகிர்வு

சித்ரா

சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியை ’தற்கொலைக்குத் தூண்டினார்’ என வழக்கு பதிவு செய்து கைது செய்தது காவல் துறை. ஆனால் பிறகு ஜாமினில் வெளி வந்து விட்டார் அவர்.

சித்ரா: புகழின் உச்சகட்டத்தில் மரணம்; விசாரிக்கப்படாத மொபைல் கால்,விலகாத மர்மம்! நினைவுதினப் பகிர்வு

சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியை ’தற்கொலைக்குத் தூண்டினார்’ என வழக்கு பதிவு செய்து கைது செய்தது காவல் துறை. ஆனால் பிறகு ஜாமினில் வெளி வந்து விட்டார் அவர்.

Published:Updated:
சித்ரா

’சித்து’ எனவும் தான் வாழ்ந்த கடைசி நாட்களில் தன் ரசிகர்களால் ‘முல்லை’ எனவும் கொண்டாடப்பட்ட ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா திடீர் மரணமடைந்து சரியாக ஓராண்டு கடந்து விட்டது. சாதாரண குடும்பத்திலிருந்து புறப்பட்ட சித்ரா டிவியில் கடந்து வந்த பயணம் சாதாரணமானதல்ல. விஜய் டிவியில் முதன் முதலாக அவரது முகம் தெரிந்தது ஒரு நிகழ்ச்சியின் பார்வையாளராக. அந்த நிகழ்ச்சியில் கூடுதலாக சில விநாடிகள் முகத்தைக் காட்ட மாட்டார்களா என ஏங்கியவர் இறக்கும்போது அதே சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ஒரு ஹிட் சீரியலின் ஹீரோயின்,

இன்று அவரது முதலாமாண்டு நினைவு தினம்ஃ இறந்து ஓராண்டு கடந்த நிலையிலும், அவரது திடீர் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன? தற்கொலைதானா அல்லது கொலையா? தற்கொலை என்றாலும் அல்லது கொலையே என்றாலும் அதற்குக் காரணமானவர்கள் யார்? அவர்கள் தண்டிக்கப் பட்டார்களா? சித்ராவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்ததா? என்பன போன்ற நிறையக் கேள்விகள் விடை தெரியாமலேயே நிற்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘’என்னால அவளை மறக்கவும் முடியலை, நினைக்காம இருக்கவும் முடியலை, ஃப்ரண்ட்ஸ், கூட நடிச்சவங்கன்னு எல்லார்கிட்டயும் அன்பா பேசி கலகலன்னு இருப்பா. எங்களைக் கடைசி வரையும் காப்பாத்துவானு நம்பினோம். ஏமாத்திட்டு இப்படி அழ விட்ட்டுடுப் போயிட்டா. கல்யாணம் முடிச்சு வைக்கணும்னு நாங்க நினைச்சு, மாப்பிள்ளைனு ஒருத்தரைக் கூட்டி வந்து நிறுத்தினது தப்பாப் போச்சு. ஒரு வருஷம் ஆகியும் என் பொண்ணுக்கு இன்னும் நியாயம் கிடைக்கலைங்க. கிடைக்குமானும் தெரியலை. எனக்கு நியாயம் வேணும்" என்கிற சித்ராவின் தாயாரின் கண்ணீருக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

முதல் நாள் இரவு 10 மணி வரை ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர். அடுத்த மூன்று மணி நேரத்துக்குள், தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பதை சித்ராவின் குடும்பத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட யாருமே இன்று வரை ஏற்கவில்லை. தற்கொலைதான் என்றால் முகத்திலிருந்த சில ரத்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.

 விஜே சித்ரா
விஜே சித்ரா

விசாரணையில் இறங்கிய காவல்துறை கடைசியில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியை ’தற்கொலைக்குத் தூண்டினார்’ என வழக்கு பதிவு செய்து கைது செய்தது. ஆனால் பிறகு ஜாமினில் வெளி வந்து விட்டார் அவர்.

காவல்துறை விசாரணையே ஒளிவு மறைவற்றதாக இருந்ததா என்கிற கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு பிரபலமான டிவி நடிகை இளம் வயதில் திடீர் மரணமடைகிறார். கொலையோ தற்கொலையோ அவர் இறந்து விட்டார் என்கிறபோது கடைசி 24 மணி நேரத்தில் அவருடன் பேசியவர்கள், அவரைத் தொலைசேியில் தொடர்பு கொண்டவர்கள் என எல்லோரையும் விசாரிக்க வேண்டியது அவசியம். சித்ராபின் மொபைல் அழைப்புகளைத் தீர விசாரித்தாலே அந்த விசாரணை உண்மையான காரணத்தை நோக்கி நகர்த்தக் கூடும். ஆனால் போலீஸ் அதைச் செய்யவில்லை. இங்கேயே முதல் கோணல் தொடங்கிவிட்டது. அலட்சியமான விசாரணையா? என்ற கேள்வி எழ காவல்துறையே காரணம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் ஹேமந்த் ரவியின் வழக்கறிஞரிடம் பேசியபோது, ‘தற்கொலைக்குத் தூண்டியதாகத்தான் ஹேமந்த்மீது வழக்கு. வழக்கு இன்னும் போயிட்டுதான் இருக்கு’ என்றார்.

வழக்கை விரைந்து முடித்து உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருகிறபோதுதான் சித்ராவின் ஆன்மா அமைதி கொள்ளும் என்கின்றனர் சித்ராவின் நினைவில் வாழும் அவரின் குடும்பத்தினர், ரசிகர்கள்.சி தமிழகக் காவல் துறை செய்யுமா?