Published:Updated:

புதுப்புது அர்த்தங்கள்: 3 வருடம் எனச்சொல்லி 30 எபிசோடில் முடிந்த படப்பிடிப்பு; அதிர்ந்த நடிகை சஹானா

சஹானா

குறைந்த நாட்களே கேரக்டர் இருக்கும்னா அதை சொல்லியே கமிட் செய்திருக்கலாம். சம்பளமாவது அதிகம் கேட்டு நடிச்சிருப்பாங்க. இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு! - சஹானா

Published:Updated:

புதுப்புது அர்த்தங்கள்: 3 வருடம் எனச்சொல்லி 30 எபிசோடில் முடிந்த படப்பிடிப்பு; அதிர்ந்த நடிகை சஹானா

குறைந்த நாட்களே கேரக்டர் இருக்கும்னா அதை சொல்லியே கமிட் செய்திருக்கலாம். சம்பளமாவது அதிகம் கேட்டு நடிச்சிருப்பாங்க. இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு! - சஹானா

சஹானா
நாளொரு பிரச்னையும் பொழுதொரு பஞ்சாயத்தும் இப்போது டிவி ஏரியாக்களில் சகஜமாகிவிட்டது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `புதுப்புது அர்த்தங்கள்' சீரியலில் நடிகை சஹானாவின் கேரக்டர் திடீரென முடிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் ஏக களேபரம் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

"சஹானாவுக்கான கடைசி நாள் ஷூட்டிங்ல அவங்க இறந்த மாதிரி காட்சி எடுக்கப்பட்டது. ஆனா அந்தக் காட்சியில் நடிக்க மறுத்தாங்க சஹானா. ரெண்டு நாள் ஷூட்டிங்கே வர முடியாதுன்னு சொல்லி வீட்டுல இருந்துகிட்டாங்க. தயாரிப்பாளர் தரப்புல என்னென்னவொ பேசி, கடைசியில எப்படியோ சமாதானப்படுத்தின பிறகே நடிச்சுக் கொடுத்துட்டுப்போனாங்க. ஆனாலும் அவங்களுக்கு அதிருப்திதான்" என்றார்கள் அதே சீரியலில் நடிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத சில ஆர்ட்டிஸ்டுகள். நடந்தது குறித்துக் கேட்கலாமென சஹானாவைத் தொடர்பு கொண்டோம் . ’அவ மூட் அவுட்ல இருக்காங்க’ எனச் சொல்லி அவரின் அம்மாவே நம்மிடம் பேசினார்.

‘’சீரியல் இன்னும் மூணு வருஷம் வரைக்கும்போகும். மாசத்துக்கு 15 நாளை நீங்க ஒதுக்கி வச்சிடுங்க. வேற எந்த சேனல்லயும் எந்த சீரியல்லையும் கமிட் செய்துடாதீங்கன்னு சொல்லித்தான் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனா 30 எபிசோடுதான் நடிச்சிருக்கா. அதுக்குள் கேரக்டரை முடிச்சுட்டாங்க. என்னங்க நியாயம் இது?

குறைஞ்ச நாட்களே கேரக்டர் இருக்கும்னா அதைச் சொல்லியே கமிட் செய்திருக்கலாம். சம்பளமாவது அதிகம் கேட்டு நடிச்சிருப்பாங்க. இப்போ அதுக்கும் வழியில்லாமப் போச்சு. இந்த மாதிரி ஏமாத்தலமாங்க" என்றவரிடம், ’காரணம் எதுவும் சொன்னார்களா’ எனக் கேட்டதற்கு, ‘ நீங்க அவங்ககிட்டதான் காரணத்தைக் கேக்கணும்’ என முடித்துக்கொண்டார்.

சஹானா
சஹானா

சஹானாவின் நட்பு வட்டத்தினர் சிலரிடம் பேசியபோது,

"முன்னணி சேனல்ல பிரைம் டைம் சீரியல்னு ஆசையுடன் கமிட் ஆன சஹானாவுக்கு இது பெரிய ஏமாற்றமாச்சு. திடீர்னு கேரக்டரை முடிப்பாங்கன்னு அவங்க எதிர்பார்க்கலை. அதனாலதான் இறந்துபோன மாதிரி நடிக்கச் சொன்ன, அந்தக் கடைசி எபிசோடுல நடிக்க மாட்டேன்னு சஹானா சொன்னது நிஜம்தான். நியாயமா யாருக்கும் வரக்கூடிய கோபம்தானே? பாலிடிக்ஸ் நடந்து இந்தக் கேரக்டரை முடிச்சாங்களா அல்லது கதைப்படி கொஞ்ச நாள்தான் வரக்கூடிய கேரக்டராங்கிறது சம்பந்தப்பட்டவங்களுக்கே வெளிச்சம். சஹானாவுக்கு மட்டுமில்ல டிவியில பல பேருக்கு இதுக்கு முன்னாடியும்கூட இப்படி நடந்திருக்கு’’ என்கிறார்கள்.

வேறு சிலரோ, நடிகை தேவயாணிக்கான முக்கியத்துவம் குறைகிற மாதிரி தெரிந்ததாலேயே இந்தக் கேரக்டர் முடிவுக்கு வந்ததாகவும் கிசுகிசுக்கிறார்கள். சஹானா கடைசி எபிசோடில் நடிக்க மறுத்ததால் அந்தக் காட்சிகளை எடுப்பதில் ரொம்பவே சிரமத்தைச் சந்தித்ததாம் யூனிட். கடைசியில் தயாரிப்பாளர் தரப்பில் சஹானாவுடன் சமாதானம் பேசி, ‘அடுத்தடுத்த சீரியல்களில்; முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் தருகிறோம்’ எனச் சொல்லி ஒருவழியாக நடிக்க வைத்தார்களாம்.

இந்த விவகாரம் குறித்து சீரியலின் இயக்குநர் சங்கரிடம் கேட்டோம்.

‘ஏற்கெனவே வேற ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிச்சிட்டிருந்த கேரக்டர் அது. நாந்தான் அந்த ஆர்ட்டிஸ்ட்டை ரீப்ளேஸ் பண்ணி சஹானாவை கமிட் செய்தேன். நல்லாதான் பண்ணிட்டிருந்தாங்க. ஆனா கதைக்கு ஒரு முடிவு வருமில்லையா? அப்படி நடந்ததுதான். கதைக்கான ட்விஸ்ட்டின் அடிப்படையில்தான் கேரக்டரை முடிக்க வேண்டியதாகிடுச்சு மத்தபடி வேணும்னு முடிக்கலை. கடைசிக் காட்சிகள்கூட பிரமாதமா நடிச்சுக் கொடுத்தாங்க’’ என்கிறார் இயக்குநர்.