விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி 2' தொடரில் குழந்தை பிறக்கவிருந்த காரணத்தினால் ஆல்யா மானசா விலகினார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அவருக்கு பதிலாக மாடலிங் துறையை சேர்ந்த ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆல்யா மானசா தற்காலிகமாக தொடரில் இருந்து வெளியேறியதாக சொல்லப்பட்ட நிலையில் அது உண்மையில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த ஃபரீனா அசாத் பிரசவத்திற்காக அந்தத் தொடரில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அதே போன்று ஆல்யாவும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆல்யாவே அதற்கு பதில் அளித்திருக்கிறார்.
ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய ரசிகர் ஒருவர் எப்போது ராஜா ராணி தொடரில் ரீ-என்ட்ரி கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு இனி தான் ராஜா ராணியில் நடிக்கப் போவதில்லை என்றும் ரியாவே இனி சந்தியாவாக நடிப்பார் என்றும் பதில் அளித்திருக்கிறார்