கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வந்தாள் ஶ்ரீதேவி' தொடர் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர், அனன்யா. வெள்ளித்திரை, சின்னத்திரை என பயணித்த அனன்யாவிற்கு இன்று காலை திருமணம் நடந்தது.
அனன்யா, சமீபத்தில் சன் மியூசிக் தொகுப்பானியாகவும் வலம் வந்தார். படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். சினிமா, சீரியல் என பிஸியாக இருந்தவருக்குத் திடீரென திருமணம் நடைபெற்றிருக்கிறது.
ஊட்டி அருகேயுள்ள மசினகுடியைச் சேர்ந்தவர், அனன்யா. மீடியா பின்புலம் இல்லாத இவர் தன்னுடைய முயற்சியால் சினிமா துறைக்குள் என்ட்ரியானார். பிறகு, சீரியல்களிலும் நடித்தார். இவருக்கு அவருடைய குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அனன்யாவின் கணவர் தமிழ், ஆஸ்திரேலியாவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஆஸ்திரேலியா சென்று விடுவார்களாம்.
மீடியா பின்புலம் இல்லாத ஃபேமிலி என்பதாலும், கள்ளக்குறிச்சியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததாலும், மீடியா சார்ந்த நண்பர்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லையாம்.! அரேஞ்டு கம் லவ் ஜோடியான இவர்களுக்கு பலரும் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
வாழ்த்துகள் அனன்யா - தமிழ்!