Published:Updated:

விஜய் உறவினருக்கு நெருக்கமானவர்; டாட்டூ கடை ஓனர்; நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப்போவது இவரைத்தான்!

நட்சத்திரா

நட்சத்திரா திருமணம் செய்து கொள்ளப் போகிற நபர் சரியானவர் அல்ல என்றும், அந்த நபரின் குடும்பம் நட்சத்திராவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சொன்னவர்...

விஜய் உறவினருக்கு நெருக்கமானவர்; டாட்டூ கடை ஓனர்; நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப்போவது இவரைத்தான்!

நட்சத்திரா திருமணம் செய்து கொள்ளப் போகிற நபர் சரியானவர் அல்ல என்றும், அந்த நபரின் குடும்பம் நட்சத்திராவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சொன்னவர்...

Published:Updated:
நட்சத்திரா

’கிடா பூசாரி மகுடி’ திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த நடிகை நட்சத்திரா. இந்தப் படத்துக்குப் பிறகு ஒருசில படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்பதால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த ‘யாரடி நீ மோகினி’ தொடரில் ’வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் அப்பாவிப் பெண்ணாக நடித்தார். இந்த சீரியல் நட்சத்திராவுக்கு பரவலான கவனத்தைக் கொடுத்தது.’யாரடி நீ மோகினி’ முடிவைடைந்ததும், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்து வருகிறார். ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் அந்த படத்தில் நடித்த தமிழ் என்பவரைக் காதலித்தார். அந்தக் காதல் நட்சத்திரா வீட்டில் மட்டுமல்லாது தமிழின் வீட்டிலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ காதல் பிரேக் அப் ஆகி விட்டது.

நட்சத்திரா
நட்சத்திரா

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நட்சத்திராவுடன் நடித்த நடிகை ஸ்ரீநிதி, ‘நட்சத்திரா திருமணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் நட்சத்திரா திருமணம் செய்து கொள்ளப் போகிற நபர் சரியானவர் அல்ல என்றும், அந்த நபரின் குடும்பம் நட்சத்திராவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சொன்னவர், அந்த நபரைக் கல்யாணம் செய்தால் நட்சத்திராவுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவின் நிலைதான் வரும்’ எனவும் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீநிதியின் வீடியோவைத் தொடர்ந்து நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப் போகிற அந்த நபர் குறித்து சின்னத்திரை ஏரியாவில் விசாரித்தோம்.

"‘நட்சத்திரா காதலிப்பது நிஜம்தான். காதலரின் பெயர் விஷ்வா. ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஷ்வாவின் சகோதரியும்கூட சீரியல்களில் நடித்து வருகிறார்’ என உறுதியாகத் தெரிவித்தனர் நட்சத்திரா மற்றும் விஷ்வா இருவரையுமே நன்கு தெரிந்த சிலர்.

விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம். அந்தத் தொடர்பில்தான் சேவியர் பிரிட்டோ ஜீ தமிழ் சேனலில் தயாரிக்கும் சீரியல்களின் தயாரிப்பு மேற்பார்வையை விஷ்வாவும் அவரின் சகோதரியும் கவனித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

‘இந்த விஷ்வா சென்னையில் ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்திருக்கிறார். செலிபிரிட்டிகள் நிறையப் பேர் இவரிடம் டாட்டூ வரைவதற்காக வந்து செல்வார்கள்’ எனச் சொல்கிறார் இன்னொருவர்.

விஷ்வா
விஷ்வா

நட்சத்திரா விஷ்வா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்த தகவல் குறித்தும் நட்சத்திராவின் குடும்பத்தினரிடம் கேட்டோம்.

’சின்னதா ஒரு நிகழ்ச்சி நடந்தது. ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாத்திக்கிட்டாங்க.’ என்கிறார்கள் இவர்கள்.

விஷ்வாவின் குடும்பத்தினர் குறித்து ஸ்ரீநிதி தெரிவித்த கருத்துகள் குறித்துக் கேட்ட போது, ‘ஏதோவொரு மன அழுத்தத்துல பேசறா அந்தப் பொண்ணு’ என்கிறார்கள். ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக நட்சத்திரா வெளியிட்ட வீடியோவில் ."ஶ்ரீநிதியை ஃபாலோ பண்றவங்களுக்கு நல்லாவே தெரியும்... அவள் ஏதோ சிறிய மன அழுத்தத்தில் இருக்கா, நிஜமா நான் சந்தோஷமா இருக்கேன்" எனக் கூறியிருந்தார்.

நட்சத்திராவிடமே திருமணம் தொடர்பாகக் கேட்டதற்கு, இன்னும் ரெண்டு மூணு மாசத்துல இருக்கும். நானே சொல்றேன்.’ என முடித்துக்கொண்டார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism