சின்னத்திரையில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர், பூஜா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் 'மீரா' தொடரின் மூலம் பல ஆண்டுகள் கழித்து தமிழ் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் நடிகை பூஜா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரைத் தொடர்புகொண்டு நாம் பேசியபோது, ' தற்போது ஃபேமிலியுடன் பெங்களூரில் வசிப்பதாக தெரிவித்தார். மேலும், ஜீ கன்னடாவில் ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டாக வேலை பார்ப்பதையும் தெரிவித்தார். இது தவிர்த்து, அவருடைய சகோதரனுடன் சேர்ந்து நடத்தும் புரொடக்ஷன் ஹவுஸின் மூலமாக தயாரித்த படத்தில் நடித்த அத்தனை ஆர்ட்டிஸ்டிற்கும் (ஹீரோயின் உட்பட) இவர் தான் காஸ்டியூம் டிசைனர் ஆக இருந்த தகவலையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். மேலும், அந்தப் பேட்டியில் நடிகை குஷ்பூவுடனான நட்பு குறித்தும் தெரிவித்திருந்தார்.'
தற்போது சீரியலில் ரீ- என்ட்ரி கொடுத்தது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'மீண்டும் கேமராவிற்கு முன்பாக வருகிறேன். நான் மிகவும் விரும்பும் தமிழ் தொடரில் மீண்டும் நடிக்கிறேன்.. அதற்காக குஷ்புவிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 7 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், அந்த மாற்றத்தை படிப்படியாக என்ஜாய் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக நீங்கள் என்னை வெறுப்பீர்கள்!' என பதிவிட்டிருக்கிறார்.